எல்லாம் 5-வது பாட்டுப் பார்க்க. கடைத்தலை - திருவாயிற்புறம். உணங்காக்கிடந்தார் - காலம் பார்த்து வருந்தித் தவங்கிடந்தார். உணங்குதல் - வருந்தி வாடுதல். போக முனிவர் - இந்திராதி போகங்களை விரும்பித் தவஞ்செய்யும் முனிவர்கள். போக தடையின்றி உள்ளே புக என்று கொண்டு முனிவர் போக அமரர் கிடந்து புலம்புகின்றார் என்று கூட்டி உரைப்பதுமொன்று. எரிதரு - தரு - உவம உருபு. - (8) கூம்பல் - கூப்புதல்; குவித்தல் - சாம்பல் பூசுதல் - தரையில் படுத்தல் - தாள் சரண் என்று ஏம்பலித்தல் - இவை தவங்கிடக்கு முறை. ஏம்பலிப்பார் - இரங்கி நிற்பார்; வருந்துவார்; அவர்க்கொள்வார். - (9) ஏன்று கொண்டாய் - ஏற்று ஆட்கொண்டாய். இனி அல்லாம் எனில் - இனி ஆட்கொண்டிலோம் என்று சொல்லப்புகின். உலகமெல்லாம் சான்று - ஆட்கொண்டமை உலகறியும். ஒற்றிவைத்தாய் - ஒற்றியாக வைத்தாய். சோன்றுகொண்டாய் - ஒற்றிவைத்த பொருளை ஒற்றி நீக்கித் தன் வசமாக்கிக் கொண்டாய். ஒற்றி வைத்தல் - சோன்று கொள்ளுதல் - உடைமைகளை ஆளும் முறை. "ஒற்றிவை - விற்றுக்கொள்." - (10) ஒலக்கச் சூளைகள் - திருவோலகத்தில் முறைசெய்யும் காவலாளர். அரம்பையர் என்பாருமுண்டு. இந்த - இப்பக்கம். விலகிய நெடுந்தூரம். இந்த - இதோ என்றலுமாம். IV திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| பண்டு செய்த பழவினை யின்பன், கண்டுங் கண்டுங் களித்திகா களித்திகா ணெஞ்சமே! வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன், றொண்டனாய்த்திரி யாய்துயர் தீரவே. 1 மருந்தி னோடுநற் சுற்றமு மக்களும், பொருந்தி நின்றெனக் காயவெம் புண்ணியன் கருந்த டங்கண்ணி னானுமை கைதொழ, விருந்த வன்கச்சி யேகம்பத் தெந்தையே. மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந், தாக்கு மைவர்த மாப்பை யவிழ்த்தருள், நோக்கு வானமை நோய்வினை வாராமே, காக்கு நாயகன் கச்சி யேகம்பனே. |
7 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- கானிலாடுவர்; இமையா முக்கண்ணர்; எனக்கு மருந்தும், சுற்றமும் மக்களும் ஆயவர்; மக்களும் ஆயவர்; பற்றிலார்க்குப் பொருளும் சுற்றமும் நன்மையும் தருபவர்; ஐவர் தம் ஆப்பை அவிழ்த்தருள் நோக்குவார்; பண்ணில் ஒசை; பழத்திற் சுவை; கண்ணினுள் மணி; கருவுள் நாயகர்; என்றிவ்வா றறியப்படும் கச்சி யேகம்பர்க்கு நெஞ்சமே தொண்டனாய்த் திரியாய்; அவரது திருவேகம்பந் தொழுதேத்துமின்; அவர் நோய்வினை வாராமே காக்கு நாயகர்; அருந்துயர் தீர்ப்பர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கண்டுங் கண்டு களித்திகாண் - அடுக்கு உறுதியும் மிகுதியும் குறித்தது. களித்தி - களிப்பாய்த் திரிவாய். - (2) நச்சி - விரும்பி. இச்சையால் - "நீ மொழிந்த வாகமத்தி, னியல்பி னாலுனை யருச்சனை புரியப், பொங்கு கின்றதென் னாசை" (1129) என்ற விருப்பம். உமைநங்கை - காமாட்சியம்மை. கொச்சையார் - கீழ்மக்கள். - (3) ஊன்நிலாவி - உயிர்களின் உடல்களினுள் பொருந்தி. - (5) கருந்தடங் கண்ணி னாளுமைதொழ - 2-வது பாட்டின் கருத்து. - (6) பற்றிலர் - பொருள், சுற்றம் முதலிய பற்றற்றவர். இருள்- ஆணவ இருள். - (7) ஐவர் - ஐம்பொறி. ஐவர்தம் ஆப்பு - ஐம்புல் ஆசையாகிய கட்டு. அவிழ்த்தல் -பந்திக்காமற் செய்தல். - (8) இறைவன் உயிர்களுள் அத்துவிதமாகக் (உடனாக) கலந்து நிற்கும் நிலையும், காட்டுவிக்கும் நிலையும். - (9) உணர்வாய்...கருவுள் நாயகன் - இறைவன் மக்களுணர்வினுள் நின்றும், அவ்வுணர்விறோயா |