ணிடை மணியி னொப்பர்; எண்ணிடை எழுத்துமானார்; மாயன்றன்னையோர் பாகங்கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டார்; இன்னும் இத்தகைய பல பெருமைகளையுடையவர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பிச்சைக்கென்று - பிச்சை நிமித்தமாக். வாழ்வார் - இருப்பார் என்ற பொருளில் வந்தது. காஞ்சிமாநகர் தன்னுள்ளால் - இலங்கும் மேற்றளி; நகர எல்லைக்குள் மேற்கில் உள்ள. தளி - கோயில். - (2) விருத்தர் ஆகும் பாலர் - விருத்த குமார பாலரான திருவிளையாடற் குறிப்பு. கடம்பன் - முருகன். - (3) கண்ணிடை மணி - காணுமுபகாரம் செய்தல். வினைபற்றி வந்த உவமம். எண்ணிடை எழுத்தும் - "எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்." உயிர் அறிவை விளங்க வைப்பர் என்பது. - (4) வாமன் - வாமதேவன். ஏமம் - நடுயாமம். ஊழி குறித்தது. - (6) மாயன் - மாயையினை இயக்குபவன். உடைப்பொருளாக உடையவன். - (7) மாலினை ஒர் பாகம் கொண்டார் - "மாயன்றன்னை மகிழ்ந்தனர்" - (2) காஞ்சியில் திருமால், பாகம் பெற்று (வராத ராசராய்) இருப்பது குறிப்பு. - (8) செல்வி - உமை. செல்வ மெல்லாவற்றுக்கும் தலைவி. கல்வியைத் கரையிலாத காஞ்சி - அளவுபடாத கல்வி கற்றோர் வாழுமிடம். எல்லி - இரவு; ஊழி. ஆற்றினை - ஏற்றினை என்பன எதுகை நோக்கி ஆறினை - ஏறினை என வந்தன. புறனடையாற் கொள்க. - (10) கன்னலின் - கரும்புபோன்ற இனிய. தலவிசேடம் :- திருக்கச்சிமேற்றளி - திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத் திறுதியில் தலவிசேடம் பார்க்க. (பக் - 1537) முதலாம் ஆலயங்கள் - ஒணகாந்தன்றளி முதலியன. இவற்றின் பதிகங்கள் கிடைத்தில! 1592. | அந்நகரி லவ்வண்ண மமர்ந்துறையு நாளின்கண் மன்னுதிரு மாற்பேறு வந்தணைந்து தமிழ்பாடிச் சென்னிமிசை மதிபுனைவார் பதிபலவுஞ் சென்றிறைஞ்சித் துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்தபெருங் காதலினால். |
327 (இ-ள்.) அந்நகரில்...நாளின்கண் - அத்திருநகரில் முன் சொன்னவாறு விரும்பி எழுந்தருளியிருக்கும் நாளில்; மன்னு...பாடி - நிலைபெற்ற திருமாற் பேற்றுக்குச் சென்றணைந்து திருப்பதிகம் பாடி; சென்னி...இறைஞ்சி - தலையின் மேல் பிறைச்சந்திரனை அணிந்த பெருமானது திருத்தலங்கள் பலவற்றையும் சென்று வணங்கி; தொடர்ந்த பெருஙகாதலினால் - முன் தொடர்ச்சியாகிய பெரும் காதல் காரணமாக; காஞ்சியினைத் துன்னினார் - காஞ்சிபுரத்தை வந்தணைந்தனர். (வி-ரை.) அவ்வண்ணம் - முன் 1590 - 1591 பாட்டுக்களிற் சொல்லியவாறு. அமர்தல் - விரும்புதல். திருமாற் பேறு - திருமால் பூசித்துப் பேறுபெற் றதனாற் போந்த பெயர். தலவிசேடம் பார்க்க. பதி பலவும் - திருவூறல். திருவிற்கோலம் (கூவம்), இலம்பையங்கோட்டூர் முதலாயின. இவற்றுக்கு நாயனார் பதிகங்கள் கிடைத்தில். இவை திருமாற் போற்றின் அணிமையில் உள்ளன. துன்னினார்....காதலினால் - வினைமுற்று முன் வைத்தோதப்பட்டது; காதல் மிகுதியும். அதனால் செயல் நிகழ்ந்து முற்றிய விரைவும் குறித்தற்கு. |