பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்567

 

இருந்தனபோலும், நின்று தோன்றும் என்றது - உலகமாகிய அண்டம் உருண்டை வடிவினதாதலின் கலங்கள் வரும்போது அவற்றின் உச்சிமட்டும் முன்னர்த் தோன்றி, வரவரப் பின்னர்ச் சிறிது சிறிதாக முழுமையும் தோன்றும் நிலை குறித்தது.- (5) ஒத்து அமைந்த உத்திரநாள் தீர்த்தமாக - ஒத்து - பல நலங்களும் கூடி. உத்திரம் - பங்குனி உத்திரம். தீர்த்தம் - திருப்பெரு விழாவின் தீர்த்தநாள். இறுதி நாள். "தீர்த்தமா மட்ட மீமுன் சீருடை யேழு நாளும், கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே" (நேரிசை). -(6) இடியபலி - இடித்த மாவினால் இயன்ற பலிப்பிண்டம். இடிய - இடுதற்குரிய என்பாருமுணடு. வடிவுடையமங்கை - தல அம்மை பெயர். மயிலாப்பு - திருமயிலாபுரி. தீயவாறே என்றது பிரிவாற்றாத காதனோய் மீதூர்தல் குறிப்பு. -(7) எல்லே - பகலே. திரையேறி ஓதம் மீளும் - கடல் அலைகள் தரையில் ஏறி வருதலும், பின், நீர் மட்டும் மீளுதலும் காண்க. -(8) கலைப்பாடும் கண்மலரும் கலக்க - நிலை கலங்கி. கலந்து - அன்பு கலந்து. தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம் - தழுவும் வகை. உயிர்கள் இறைவன்பால் ஒடுங்குதலும். குறிப்பு. போகலொட்டேன் - "சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே" (திருவா). -(9) இறைவன் உலகில் கலந்து நின்றும் வேறாகி உலகப் பொருள்களல்லா திருக்கும் நிலை குறிக்கப்பட்டது. "ஆனாயும் பெரியாய் நீயே" - "ஆயினும், பெரியரா ரறிவாரவர் பெற்றியே" (திருப்பாசுரம். 2); "பிறவா யாக்கைப் பெரியோன்" -(10) செறிவளைகளொன்றொன்றாச் சென்ற வாறே - காமநோயால் உடல் மெலிய வளை கழல்வன என்றது.

திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாத
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத தீயாற்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஒற்றியூருடைய கோவே, கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்துநின்று உள்ளத்துள் ஒளியுமாகும்; ஆன்மாவினிடமதாகி உசிர்ப்பெனும் உணர்வின் உள்ளார்; ஞானத்தை விளக்கை ஏற்றி நாடியுள் விரவ வல்லார் ஊனத்தை ஒழிப்பர்; ஏகாந்த மியம்பி நினையுமா நினைக்கின்றார்க்கு உணர்வினோ டிருப்பர்; உள்குவா ருள்ளத் துள்ளார் என்றிவை முதலிய தன்மைகளா லறியப்படுவர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வேத கீதன் - வேதங்களிலும் கீதங்களிலும் பேசப்படுபவன். மெய்....நின்றார் - உண்மை ஞானத்தால் ஆணவ இருளை அகற்றினோர். கலந்து - அத்துவிதக் கலப்பு. உள்ளத்துள் ஒளி - காட்டு முபகாரம் செய்பவன். உணர்வினோடிருப்பர் (7); உன்னுவார் உள்ளத்துள்ளார் -(8); உள்குவார் உளளத்துள்ளார் ()9) என்பவையும் இருக்கருத்து. -(2) வசிப்பு - வாசித்தல். உலகில் இருத்தல். வானவர்......வேண்டில் - இறைவன் இவ்வுலிடமாக நின்று அதன் அனுபவங்களைத் தானே மேற்கொண்டு தாங்கும் நிலை பெறவேண்டினால். அசிர்ப்பு - அயர்ப்பு என்பது அசிர்ப்பு என வந்தது. வருத்துதல். உசிர்ப்பு - உயிர்ப்பு. "என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக், கென்னு ளேநிற்கும்" (தேவா). ஆன்மாவின்......உள்ளார் - உயிரை இடமாகக்கொண்டு அதனை இயங்க வைத்து உணரச் செய்கின்றார். -(3) தானத்தை - இவ்வுடலும் உலகமும் இடமாகப் பல கருமங்களையும். வணங்க - வானத்தை - வேண்டில் - வானமும் உங்க