ளைப் பணியும் நிலை வேண்டினால். உள் விரவ - உயிரினுள் ஒளித்த இறைவனை நாடி அவனோடு பொருந்த. ஊனம் - மலம். -(4) காமம் - இச்சை. ஏமம் - இடையிரா வொழிந்த ஏனை எல்லாக் காலமும் குறித்தது. ஓமம் - அந்தரியாகம். -(5) கமை - பொறுமை. உமை ஒரு பாகர் - அருள்பவர் என்ற குறிப்பு. -(6) ஒருத்தி தன் தலைச்சென்றாள் - கங்கை. ஒருத்திக்கு - அந்த அம்மைக்கு. ஒருத்தி - உமை. ஒருத்திக்கும் - இருவருள் ஒருவருக்கும். -(7) பிணம் உடை - சாகும் தன்மையுடைய. -(8) மனத்தினுள் விளக்கொன்று ஏற்றி - முன்னம் ஆணவ இருள் மூடினபடியால் விளக்கு வேண்டப்பட்டது. விளக்கு - சிவனை உணரும் ஞானத்தீயாகிய விளக்கு. -(9) மூள்குவார் - முயங்குவார். பெண்கள். பள்குதல் - பதுங்குதல். இடர் வந்தால் பதுங்குவர் என்க. குறிப்பு :- இப்பதிகம் ஒற்றியூர் உடையகோவே இன்ன தன்மையுடையர் என்று படர்க்கை முகத்தாற் போற்றிற்று. கோவே - ஏகாரம் தேற்றம். மேல் வரும் பதிகம் எதிர்நின்று விண்ணப்பஞ் செய்து வரங்கேட்கும் வகையால் கோவே! என்று முன்னிலைப்படுத்திப் போற்றிற்று. ஆண்டுக் கோவே! - ஏகாரம் விளியுருபு. lll திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக் காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன் பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை யோம்பிநீ யுய்யக் கொள்ளாய்! ஒற்றியூ ருடைய கோவே! 1 மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாககி மரியும்போ தறிய வொண்ணா வுனையுனு முணர்வை நல்காய்! ஒற்றியூ ருடைய கோவே! |
2 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- ஒற்றியூர் உடைய கோவே! நீ ஓம்பி என்னை உய்யக் கொள்க! மரியும்போது உனை உன்னும் உணர்வை நல்குக. இப்பதிகத்தில் இரண்டு பாட்டுக்களே கிடைத்துள்ளன! பதிகப் பாட்டுக் குறிப்பு ;- (1) கூடு - உடல். உள்ளத்தோர் கொடுமை வைத்து முகக்கமாட்டேன் - வைத்ததனால் என்று முகக்கமாட்டாமைக்குக் காரணம் கூறியபடி. மூழை - அகப்பை; கரண்டி. மூழைபோல - பயன்பற்றி வந்த உவமம். பாம்பின்வாய்த் தேரைபோல - வினைபற்றிவந்த உவமம். தேரையை வாயிற்பற்றிய பாம்பு அதனைச் சிறிது சிறிதாக விழுங்கும்; அவ்வாறு முழுதும் விழுங்குவதற்குச் செல்லும் காலமெல்லாம், தேரை, தான் மரணத்துள் அகப்பட்டதனையும் மீளமாட்டா நிலையையும் எண்ணிக் கத்தும்; அதுபோல மக்களும் இவ்வுடம்பினுள்ளே பட்டு இறத்தல் உறுதியென்று அறிந்து பலபலவும் எண்ணுவர் என்பது. -(2) இப்பாட்டு உருவகம். மனம் - தோணி; மதி - தோணி செலுத்தும் கோல்; சினம் - தோணியில் ஏற்றிச் செல்லும் வியாபாரச் சரக்கு; மதன் - ஐம்புல இன்ப ஆசைகள் - தோணியைத் தாக்கி உடைத்து அழிவு செய்யும் பாறை என்றிவ்வாறு வைத்துக்காண்க. மரியும்போது அறியவொண்ணாது - ஆசைகட்குள்ளாகி உலகில் அழிந்து அலைந்து அழியும்போது சிவனினைவு நினைத்தல் உயிர்க்கு அரிது; உணர்வை நல்காய் - உன்னை நினைக்கும் உணர்வை நீ கொடுத்தருளினாலன்றி என்னால் தேடிக்கொள்ளலாகாது. "துஞ்சும் போதுநின் னாமத் திருவெழுத், தஞ்சுந் தோன்ற வருளுமை யாறேரே" "துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று, அஞ்சலென் றருள வேண்டும்." "அஞ்செழுத்தும் |