சாமன் றுரைக்கத் தருதி", "அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வான்" (தேவா) முதலியவை காண்க. IV திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று செருவெண் கொம்பொன் றிற்றுக் கிடந்தது போலு மிளம்பிறை; பாம்பதனைச் சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச்; சுடரிமைக்கு நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்கு மாலொற்றி யூரனுக்கே. 1 சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற்றொண் டாயடைந்தா ரல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி யலைகொண்முந்நீர் மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கே யொல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே. 2 இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை யிமயமென்னுங் குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்டநா ளன்றரைக் கண்ணுங் கொடுமை யாளையும் பாகம்வைத்த வொன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை யுத்தமனே. 7 அங்கட் கடுக்கை முல்லைப்புறவ; முறுவல் செய்யும் பைங்கட் டலைக்குச் சுடலைக் களறி; பருமணிசேர் கங்கைக்கு வேலை; யரவுக்குப் புற்றுக், கலைநிரம்பாத் திங்கட்கு வானந் திருவொற்றி யூரர் திருமுடியே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- பிரிவாற்றா திரங்கிய தலைவி நாயகனுடைய குணநலன் வடிவம் முதலியவற்றைச் சிந்தித்துச் சிந்தித்துப் பல்லாற்றானும் அவற்றில் ஈடுபட்டுத் தனக்குள் அசதியாடி நயந்த குறிப்பு. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) செற்று - அடர்த்து - கொன்று. இறைவர் அணிந்த இளம்பிறை அவர் உரித்த களிற்றின் ஒரு கொம்பு போலவும், பிறையினை வளைந்து கிடந்த பாம்பு அந்த யானைக் கொம்பின் பூணாக வளைந்த கிம்புரி போலவும், இவற்றின் கீழே காணும் இறைவரது நெற்றிக்கண் யானைக் கொம்பினின்றும் உதிர்ந்த முத்துப்போலவும் உள்ளன என்றது தற்குறிப்பேற்றந் தழுவிய தொடர்நிலையுவமம். யானை உரித்தபோது அதன் ஒரு கொம்பு ஒடிய, அதினின்றும் முத்துதிர, நின்றமைபோல என்பது உவமை நயம். தலைவன் புகழ் நயந்து கூறியதுமாம். -(2) துயராற்றாது கூறியது. பின் என் கொடுத்தி - பின்பு என்ன கொடுப்பாய்; கொடுப்பதென்னை? உமது கடல் அலைகளால் உந்தப்படும் சங்கு முத்துக்களை வலியக் கரையில் கொணர்ந்து ஏற்றுகிறபோது, நீர் உத்தமராயிருந்தும் வாளா எமது துன்பத்தினைப் பார்த்துக்கொண்டிருத்தல் தகாது என்பது பின் இரண்டடிகளின் குறிப்பு. -(6) பெற்று - பெற்றம் - இடபம். பெரும் பேச்சு - மகா வாக்கியம். உடையான் - அதனாற் பேசப்படும் பெருமையுடையவன். "பெரும் பெயர்க் கடவுள்." விரிசடை அரவுக்கும், திங்கட்கும், கங்கைக்கும், கண்ணிக்கும் சேர்விடமாம் என்க. கண்ணி - தலை மாலை. விற்றுடையான் - விற்றக்குரிய பொருளாக உடையவன். -(7) குன்றரைக் கண்ணன் - குன்றுடைய அரசன். அரைக்கண்ணும் கொடுத்து - அரைப்பாகம் கொடுத்து. குலமகட்பாவை - பார்வதி. ஒன்றரைக் கண்ணன் - மூன்று கண்களில் ஒரு பாதி அம்மையாாக்குக் கூறிட்டுக் கொடுத்தமையால் இறைவர் பாகத்துக்குள்ளது. |