பக்கம் எண் :


572திருத்தொண்டர் புராணம்

 

(இ-ள்.) வெளிப்படை. அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் நாள்களில் பக்கத்தில் உள்ளனவாகிய சிலாலயங்க ளெங்கும்போய், இனிதாக வணங்கித் துதித்து வந்தவராகிய நாயனார், நீர்வளமிக்க திருவொற்றியூரினைத் தொழுது சென்று, உமையம்மையாரை ஒரு பாகத்தில் வைத்த பெருமான் விரும்பி யெழுந்தருளியிருக்கும் திருப்பாசூர் என்னும் தலத்தினை அணைந்தனர்.

(வி-ரை.) உறையும் நாளின் கண் - "பல நாள்கள் வைகினார்" என்று முன் பாட்டிற் கூறியபடி வைகும் நாள்களில்.

அருகுளவாம் சிவாலயங்கள் - இவை வடதிருமுல்லைவாயில், திருக்கள்ளில், புண்ணியகோடீசுவரர் கோயில், ஞாயிறு முதலியன. திருவொற்றியூரி லிருநத் படியே நாயனார் இவற்றுக்குச் சென்று சென்று வணங்சி மீண்டருளியிருந்தனர் என்பதாம்.

இறையருளால் - பின்னர் அவ்வழியே திருக்காளத்தி செல்வதும், அங்கு நின்றும் திருக்கயிலைப் பெரிய யாத்திரை செய்து காட்சி காண்பதும் குறிப்பு.

பொங்கும் புனல் - நீர்வளம் குறித்தது. கடல் வளத்தோடு ஏனை நீர்ச்சிறப்புமுடமை குறிப்பு. "சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் காவுந் துதைந் திலங்கு, பெற்றி.....மற்றிது வொப்பத்தில் லிடம்" (திருவிருத்தம்) என்ற தேவாரம் காண்க.

திருவொற்றியூர் தொழுது - ஊர்க்குப்புறம்பே நின்று தலத்தைத் தொழுது. 1594-ம், பிறவும் பார்க்க.

அருகுளவாம் ஆலயங்கள் - என்பதும் பாடம்.

338

1604.

திருப்பாசூர் நகரெய்திச் சிந்தையினில் வந்தூறும்
விருப்பார்வ மேற்கொள்ள வேயிடங்கொண் டுலகுய்ய
விருப்பாரைப், புரமூன்று மெரித்தருள வெடுத்ததனிப்
பொருப்பார்வெஞ் சிலையாரைத் தொழுதெழுந்து போற்றுவார்,


1605.

"முந்திமூ வெயிலெய்த முதல்வனா" ரெனவெடுத்துச்
 சிந்தைகரைந் துருகுதிருக் குறுந்தொகையுந் தாண்டகமுஞ்
 சந்தநிறை நேரிசையு முதலான தமிழ்பாடி
 யெந்தையார் திருவருள்பெற் றேகுவார் வாகீசர்,

340

1606.

அம்மலர்ச்சீர்ப் பதியையகன் றயலுளவாம் பதியனைத்தின்
மைம்மலருங களத்தாரை வணங்கி, மகிழ் வொடும்போற்றி,
மெய்ம்மைநிலை வழுவாத மேன்மைநெறி விழுக்குடிமைச்
செம்மையினாா பழையனூர்த் திருவால வனம்பணிந்தார்;

341

1607.

"திருவாலங் காடுறையுஞ் செல்வர்தா"மெனச் சிறப்பி
 னொருவாத பெருந்திருத்தாண் டகமுதலா மோங்குதமிழ்ப்
 பெருவாய்மைத் தொடைமாலை பலபாடிப் பிறபதியு
 மருள்வார்வம் பெறவணங்கி வடதிசைமேல் வழிக்கொள்வார்,

342

1608.

பல்பதியு நெடுங்கிரியும் படர்வனமுஞ் சென்றடைவார்
செல்கதிமுன் னளிப்பவர்தந் திருக்காரி கரைபணிந்து,
தொல்கலையின் பெருவேந்தர் தொண்டர்கள்பின் னும்பர்குழாம்
மல்குதிருக் காளத்தி மாமலைவந் தெய்தினார்.

343