1630. | "கயிலை மால்வரை யாவது காசினி மருங்கு பயிலு மானுடப் பான்மையோ ரடைவதற் கெளிதோ?; வயில்கொள் வேற்படை யமரரு மணுகுதற் கரிதால்; வெயில்கொள் வெஞ்சுரத் தென்செய்தீர் வந்!" தென விளம்பி, |
1631. | "மீளு மத்தனை யுமக்கினிக் கட" னென விளங்குந் தோளு மாகமுந் துவளுமுந் நூன்முனி சொல்ல, வாளு நாயகன் கயிலையி லிருக்கைகண் டல்லான் மாளு மிவ்வுடல் கொண்டுமீ ளே" னென மறுத்தார்; |
366 1632. | ஆங்கு மற்றவர் துணிவறிந் தவர்தமை யறிய நீங்கு மாதவர் விசும்பிடைக் கரந்துநீண் மொழியா "லோங்கு நாவினுக் கரசனே! யெழுந்தி" ரென் றுரைப்பத், தீங்கு நீங்கிய யாக்கைகொண் டெழுந்தொளி திகழ்வார், |
367 1633. | "அண்ண லே!யெனை யாண்டுகொண் டருளிய வமுதே! விண்ணி லேமறைந் தருள்புரி வேதநா யகனே! கண்ணி னாற்றிருக் கயிலையி லிருந்தநின் கோலம் நண்ணி நான்றொழ நயந்தருள் புரி" யெனப் பணிந்தார்; |
368 1634. | .தொழுதெ ழுந்தநற் றொண்டரை நோக்கிவிண் டலத்தி லெழுபெ ருந்திரு வாக்கினா லிறைவ"ரிப் பொய்கை முழுகி நம்மைநீ கயிலையி லிருந்தவம் முறைமை பழுதில் சீர்த்திரு வையாற்றிற் கா" ணெனப் பணித்தார். |
369 1628. (இ-ள்.) மாசு இல் வற்கலை ஆடையும் - அழுக்கு இல்லாத மரவுரி உடையும்; மார்பில் முந்நூலும் - திருமார்பிற் பூணும் முப்புரி நூலும்; தேசு உடை சடை மவுலியும் - ஒளியுடைய சடை முடியும்; மெய் நீறும் - உடம்பினிடத்து விளங்கும் திருநீறும்; திகழ - (ஆக இவ்வண்ணமாக) விளங்க; ஆசு இல் ... நோக்கி - குற்றமற்ற மெய்ம் முனிவராக நின்ற இறைவரை நோக்கி; பெரியோர் - பெரியவராகிய நாயனார்; பேச உற்றது ஓர் உணர்வு உற விளம்புவார் - பேசுதற்குப் பொருந்திய ஓர் உணர்ச்சி பொருந்த உரைப்பாராகி; 363 1629. (இ-ள்.) வண்டு .......அப்பரிசு - வண்டுகள் உலாவும் கூந்தலையுடைய பார்வதி யம்மையாரோடு வட கயிலாயத்தில் தேவதேவ ராகிய சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் அத்தன்மையினை; அவர் அடியேன்...அடைந்தேன் - அவரது அடியனேன் கண்டு கும்பிடவேண்டுமென்ற விருப்பத்தோடு காதல் மிக அடைந்தேன்; கொண்ட...முனியே! - முனிவரே! மனத்தில் நான் கொண்ட குறிப்பு இதுவாகும்; எனக்கூற - என்று சொல்ல; 364 1630. (இ-ள்.) கயிலை...எளிதோ? - பெருங்கயிலைத் திருமலையானது இப்பூமியிடத்துப் பயிலும் மனிதத்தன்மையுள்ளோர் சென்றடைவதற் கெளிதானதா?; அயில் கொள்... அரிதால் - கூரிய வேற்படை முதலியவற்றை ஏந்திய தேவர்களும் சென்றணுகுதற் கரியது; "வெயில்... வந்து?" என - "வெப்பமிக்க கொடிய இச்சுரத்தினிடை வந்து என்ன அறியாமை செய்துவிட்டீர்!" என்று சொல்லி; 365 |