பக்கம் எண் :


610திருத்தொண்டர் புராணம்

 

யிற் காணப்பட்ட தென்பது குறிக்கும். பொய்கை - மானிடராக்காத நீர் நிலை என்ற பண்டையாசிரியர் கூற்று ஈண்டுச் சிந்திக்கற்பாலது. பின்னரும் இப்பெயரால் ஆசிரியர் கூறுதலும் (1636) காண்க.

கயிலையில் இருந்த அம்முறைமை(யில்) நம்மைத் திருவையாற்றில் நீ காண் - என்க.

அம்முறைமை - அக்கோலத்தில்; அவ்வாறே.

பழுதில் சீர்த் திருவையாறு - பழுது இல் சீர் - பழுதினை இல்லையாகச் செய்யும் சிறப்பு. இது திருநந்தி தேவர் இங்குத் தவஞ்செய்து பேறுபெற்றுச் சிவகணங்களுக்கு நாதராம் தன்மையும், சிவ குருமரபுக்கு முதல்வராம் தன்மையும் பெற்றதனாலாகிய சிறப்பு.

பழுது - உயிர்களது சகச மலம் என்னும் ஆணவம். திருமலைச் சிறப்பில் ஆசிரியர் இத்தன்மை பற்றித் திருவையாற்றினை அறிவித்தல் இங்குக் கருதத் தக்கது (45). இறைவர் திருக்கயிலைக் காட்சியினை நாயனாருக்குக் காட்டுதற்கு இத்தலத்தினை விளங்கக் கொண்டமைக்கும் இது திருவருட் குறிப்பென்பதும் கருதப்படும்.

369

1635.

 ஏற்றி னாரரு டலைமிசைக் கொண்டெழுந் திறைஞ்சி
"வேற்று மாகிவிண் ணாகிநின் றார்" மொழி விரும்பி,
 ஆற்றல் பெற்றவ ரண்ணலா ரஞ்செழுத் தோதிப்,
 பாற்ற டம்புனற் பொய்கையின் மூழ்கினார் பணியால்;

370

1636.

ஆதி தேவர்தந் திருவருட் பெருமையா ரறிவார்?
போத மாதவர் பனிவரைப் பொய்கையின் மூழ்கி,
மாதொர் பாகனார் மகிழுமை யாற்றிலோர் வாவி
மீது தோன்றிவந் தெழுந்தன ருலகெலாம் வியப்ப.

371

1635. (இ-ள்.) ஏற்றினார்......இறைஞ்சி - மேற்கண்டவாறு வெளிப்பட்ட ஏற்றினாருடைய திருவருளை முடிமேற் கொண்டு, மேல் எழுந்து வணங்கி; வேற்றுமாகி...விரும்பி - "வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி" என்று தொடங்கும் திருப்பதிகத்தினால் விருப்பத்துடன் துதித்து; ஆற்றல்...ஓதி - திருவருள் வலிமை பெற்ற நாயனார் இறைவருடைய திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டு; பாற்றடம்...பணியால் - பான்மை பெற்ற பெரிய நறுநீர்ப் பொய்கையில் ஆணையினால் மூழ்கினாராக;

371

1636. (இ-ள்.) ஆதி...யார் அறிவார்? - ஆதிதேவராகிய சிவபெருமானது திருவருட் பெருமையினை யாவர் அறியவல்லவர்?; உலகெலாம் வியப்ப - உலகமெல்லாம் வியப்படையும்படி; போதமாதவர் - ஞானத் தவமுனிவராகிய நாயனார்; பனிவரைப் பொய்கையின் மூழ்கி - பனிமலையின் அந்த வாவியில் முழுகி; மாது ஓர் பாகனார் மகிழும் ஐயாற்றில் - உமையம்மையாரை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் திருவையாற்றில்; ஓர் வாவிமீது தோன்றி வந்து - ஒரு வாவியின் மேல் தோன்றி வந்து; எழுந்தனர் - எழுந்தார்.

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1635. (வி-ரை.) ஏற்றினார் - ஏறு - இடபவாகனமும் இடபக்கொடியுங் குறீத்தது. துன்பத்துட கிடந்தவரை மேற்கூறியபடி அருட்கை கொடுத்து மேல் ஏற்றினவர் என்ற குறிப்பும் காண்க, பொய்கையுள் மூழ்கி வாவியின் மேல் கரை ஏற்றினார் என்ற குறிப்பும் கருதுக; துணிவுபற்றி ஏற்றுவார் என்பது ஏற்றினார் என இறந்த காலத்திற் கூறினார் என்க.