பக்கம் எண் :


618திருத்தொண்டர் புராணம்

 

றன்றிச் "சிந்தை நேர் நோக்கப் பவமின்றாங் கண்வா சகத்திற் - சிவமுண்டாம்" என்றபடி இறைவர் தேவ குருவாய் முன்னின்று செய்யும் பார்வை, வாக்கு முதலிய தீக்கை வகையால் நேரே காட்சி யளவையால் அனுபவத்தில் கண்ட தாம் என்க. "பெண்டிர் பிடிபோல வாண் மக்கள் பேய்போலக் கண்டாரே கண்டாரென் றுந்தீபற; காணாதார் காணாரென் றுந்தீபற" (உந்தி. 35) என்ற ஞானசாத்திரக் கருத்தும் கருதுக.

மன்னு மாதவர் - திருநாவுக்கரசர். இவ்வாறு காண்பதற்குப் பெருந்தவஞ் செய்திருந்தாராதலின் கண்டாரென்பது குறிப்பு.

இக்காட்சி மலர்வாவிக் கரையேறிக் கோயிலைநோக்கி வரும்போது வழியிடை நாயனார் கண்டது. "புகுவா ரவர்பின் புகுவேன்...ஐயா றடைகின்றபோது...கண்டேன்" என்ற தேவாரக் கருத்து. இவ்வாறு கண்டது காலத்தால் முன்னாயினும் அது பற்றிப் பாடியது தனிக் கயிலைக் காட்சி கண்டபின் என்பது 1649-ம் பாட்டால் அறியப்படும்.

374

கயிலைக் காட்சி

1640.

காணு மப்பெருங் கோயிலுங் கயிலைமால் வரையாய்
பேணு மாலய னிந்திரன் முதற்பெருந் தேவர்
பூணு மன்பொடு போற்றிசைத் தெழுமொலி பொங்கத்,
தாணு மாமறை யாவையுந் தனித்தனி முழங்க,

375

1641.

தேவர் தானவர் சித்தர்விச் சாதர ரியக்கர்
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலா மிடையக்,
காவி வாள்விழி யரம்பையர் கானமு முழவுந்
தாவி லேழ்கடன் முழக்கினும் பெருகொலி தழைப்ப,

376

1642.

கங்கை யேமுதற் றீர்த்தமாங் கடவுண்மா நதிகள்
மங்க லம்பொலி புனற்பெருந் தடங்கொடு வணங்க,
எங்கு நீடிய பெருங்கண நாதர்க ளிறைஞ்சப்
பொங்கி யங்களாற் பூதவே தாளங்கள் போற்ற,

377

1643.

அந்தண் வெள்ளிமால் வரையிரண் டாமென வணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண்மால் விடையெதிர் நிற்ப,
முந்தை மாதவப் பயன்பெறு முதன்மையான் மகிழ்ந்தே
நந்தி யெம்பிரா னடுவிடை யாடிமுன் னணுக,

378

1644.

வெள்ளி வெற்பின்மே,ன் மரகதக் கொடியுடன் விளங்குந்
தெள்ளு பேரொளிப் பவளவெற் பெனவிடப் பாகங்
கொள்ளு மாமலை யாளுடன் கூடவீற் றிருந்த
வள்ள லாரைமுன் கண்டனர் வாக்கின்மின் னவனார்.

379

1640. (இ-ள்.) காணும்...வரையாய் - காணப்படும் அந்தப் பெரியகோயிலே பெரிய கயிலாய மலையாக; பேணும்...பொங்க - இறைவரது சேவைக்கு எதிர் பார்த்திருக்கும் திருமால் - பிரமன் - இந்திரன் முதலாகிய பெருந் தேவர்கள் உள்ளத்து நிலைபெறப் பொருந்திய அன்பினோடு துதிக்கும் அதனாலெழுகின்ற ஒலி எங்கும் நிறையவும்; தாணு...முழங்க - அழிவில்லாத பெரிய வேதங்கள் யாவையும் தனித்தனியே முழங்கவும்;

375