வராம் படியால் வந்து மறைந்து அசரீரியால் உணர்த்திய இறைவரை அருவத்திருமேனியிற் கண்டு போற்றியது. இங்குப் பாடிய இந்த இரண்டு பதிகங்களும் அவ்விறைவரது கோலத்தை நேரேகண்டு உருவத் திருமேனியிலும், அதற்குக் காரணமாகிய அருவுருவத் திருமேனியிலும் கண்டு போற்றியன. இன்பம் ஓங்கிட - மேலே கூறியவாறு உளவாகிய இன்ப உணர்ச்சிகளும் செயல்களும், போற்றுதலினால் மேலும் மேலும் இன்பத்தைப் பெருக உளதாக்க. இப்பதிகங்களினால் போற்றி உலகம் இன்பத்தில் ஓங்கும் பொருட்டு என்றலுமாம். எல்லையில் தவத்தோர் - நாயனார். மூவா அன்பு பெற்றவர் ஆகிய எல்லையில் தவத்தோர் என இரண்டும் ஒரு பொருள்மேனின்றன. 381 II திருச்சிற்றம்பலம் | போற்றித் திருத்தாண்டகம் |
| பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி பூதப் படையாள் புனிதா போற்றி நிறையுடைய நெஞ்சி னிடையாய் போற்றி நீங்காதென் னுள்ளத் திருந்தாய்போற்றி மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப் படுவாய் போற்றி கறையுடைய கண்ட முடையாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 1 மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி சீலத்தான் றென்னிலங்கை மன்னன் போற்றி சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
10 திருச்சிற்றம்பலம் III திருச்சிற்றம்பலம் | போற்றித் திருத்தாண்டகம் |
| பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை யறியாமை நின்றாய் போற்றி சூட்டான திங்கண் முடியாய் போற்றி தூமாலை மத்த மணிந்தாய் போற்றி யாட்டான வஞ்சு மமர்ந்தாய் போற்றி யடங்கார் புரமெரிய நக்காய் போற்றி காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. 1 போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ண லரியாய் போற்றி யேற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி யெண்ணா யிரநூறு பெயராய் போற்றி நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி நான்முகற்கு மாற்கு மரியாய் போற்றி காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. |
திருச்சிற்றம்பலம் பதிகங்களின் குறிப்பு :- II. பொறையுடைய பூமி நி ரானாய்!, முன்பாகி நின்ற முதலே!, மாலையெழுந்த மதியே!, காலை முளைத்த கதிரே!, கடலில் ஒளியாய முதலே!, கொள்ளுங் கிழமை யேழானாய்!, பெருகி யலைகின்ற வாறே!, கருகிப் பொழிந்தோடு நீரே!, III. பாட்டான நல்ல தொடையாய்!, கதிரார் கதிருக்கோர் கண்ணே!, செய்யாய்!, கரியாய்!, வெளியாய்!, ஐயாய்!, பெரியாய்!, சிறியாய்!, ஆகாய வண்ணமுடையாய்!, வெய்யாய்!, தணியாய்!, அணியாய்!, சூட்சி சிறிது மிலாதாய்!, மாட்சி பெரிதுமுடையாய்!, காட்சி பெரிது மரியாய்!, |