பக்கம் எண் :


638திருத்தொண்டர் புராணம்

 

கருத்தன்று. "ஏந்தெழி லிதயங் கோயில் மாளிகை" (திருவிசைப்பா). - (9) கமை - க்ஷமை என்பது வடமொழி. பொறுமை; யோகசாதனம் குறித்து நின்றது. அமைவிலா - அளவுபடாத.

IXதிருச்சிற்றம்பலம்

திருவிருத்தம்

சிந்திப் பரியன; சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன; முத்தி கொடுப்பன; மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன; பாம்புசுற்றி
அந்திப் பிறைபணிந் தாடுமை யாற னடித்தலமே.

1

இருடரு துன்பப் படல மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருடரு கண்ணிழந் துண்பொரு ணாடிப் பகுலிழந்த
குருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின்
றருடரு கைகொடுத் தேற்றுமை யாற னடித்தலமே.

4

எழுவா யிறுவா யிலாதன; வெங்கட் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன; மாநர கக்குழிவாய்
விழுவா ரவர்தம்மை வீழ்ப்பன; மீட்பன; மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கவை யாற னடித்தலமே.

5

நின்போ லமரர்க ணீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன; பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட விலையு முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளு மையனை யாற னடித்தலமே.

10

மலையான் மடந்தை மனத்தன; வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன; நின்றோர் மதிப்பன; நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன; பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தவை யாற னடித்தலமே.

11

உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன; வோதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை யுடையன; காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும
அற்றார்க் கரும்பொருள் காண்கவை யாற னடித்தலமே.

13

சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னு
நிழலா வன; வென்று நீங்காப் பிறவி நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ; கால வனங்கடந்த
அழலா ரொளியன காண்கவை யாற னடித்தலமே.

19

வலியான் றலைபத்தும் வாய்விட் டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண் ணோர்கள்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன் னாளும் பலரிகழ
வலியா நிலைநிற்கு மையனை யாற னடித்தலமே.

20

திருச்சிற்றம்பலம்

குறிப்பு :- இத்திருப்பதிகம் இருபது திருப்பாட்டுக்களை யுடையது. புறனடையாற் கொள்க. ஐயாறனடித்தலமே என்ற மகுடம் புனைந்ததாய் இறைவரது திருவடித் தலங்களையே பற்றி அவற்றின் அருட்டன்மைகளைப் புகழ்வது