திருநெய்த்தானம் Iதிருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென் மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற கோலநெய்த் தான மென்னும் குளிர்பொழிற் கோயின் மேய நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- திரு நெய்த்தானத் திறைவர் வாழ்த்துவார் வாயினுள்ளார்; சிந்திப்பார் சிந்தையுள்ளார்; நீதியாய் நியமமாகி நின்றார்; அவரைக் கூடுமாறு அறிகிலேன்; நான் வாழ்வுற அவரை நினைக்குமா நினைக்கின்றேன்; நெய்த்தானமென்று குறைதரு மடியவர்க்குக் குழகனைக் கூடலாமே. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மேதக - மேன்மை பெற. - (3) குறை தரும் - குறைந்தடையும். அபயம் புகும். - (7) மேலவர் முகடு - விண்ணின் முகடு. நட்ட மதாடுகின்ற மேலவர் என்று முடிப்பதுமாம். - (8) பந்தித்த - சுற்றிக்கட்டிய. IIதிருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக் காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான் ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம் நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே. 1 தூங்கான் றுளங்கான் றுழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல் வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை தான்புனைந்தான் தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து தியக்கறுத்து நீங்கா னுமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே. |
9 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- உமையவளோடு நெய்த்தானத் திருந்தவரே நஞ்சமமுதாக வுண்டான் - திரிபுரந் தீயெழச் செற்ற சிலை யுடையான்; என்றிவை முதலிய தன்மைகளா லறியப்படுபவர்; ஈடழியா தென்னை யாண்டு கொண்டார்; நந்தீவினை தீர்ப்பர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) காரடைந்த கடல் - நீரடைந்த கரை - த - கடல் = த - கரை - இரண்டிடத்திலும் த என்பதனை அளவு ஒரு மாத்திரை நீட்டிக் கூவிளச் சீராகக்கொள்க.- (2) வேல் - ஆயுதப் பொதுமையை உணர்த்திச், சூலம் என்ற பொருளில் வந்தது. மங்கையும் நீயும் - இருந்ததுவே - "இட்டம் உவமையொடு நின்ற" (4); "கண்ணியோர்பான் மகிழ்ந்தான்" (5); "சேர்ந்தார் உமையவளோடு" (6) "உமையவளோடு" (8); "நீங்கான் உமையவளோடு" (9) இவை யெல்லாம் இத்தலத்து அம்மையாரின் சந்நிதிச் சிறப்பு உணர்த்தி நின்றன.- (5) கொன்றை துழாய் - துழாய் திருமால் பாகமும், கொன்றை இறைவர் பாகமும் குறித்தன. அன்றித் துழாய் சிவபூசைக் குரியதுமாம். "துழாய் கொன்றை" (9). - (9). தூங்கான் துளங்கான் - தூங்குதல் துளங்குதலின்றி யிருத்தல். தேங்கார் - பகைவர். - (10) ஊட்டி நின்றான் - வினைப் பயன்களை அனுபவிக்கச் செய்து தாம் சாட்சி மாத்திரையாய் நிற்பவர். வான் - நிலம் - |