1655. | பல்வகைத் தாண்டகத் தோடு பரவும் தனித்தாண் டகமும் அல்ல லறுப்பவர் தானத் தடைவு திருத்தாண் டகமுஞ் செல்கதி காட்டிடப் போற்றுந் திருவங்க மாலையு முள்ளிட் டெல்லையில் பன்மைத் தொகையு மியம்பின் ரேத்தி யிருந்தார். |
(இ-ள்.) வெளிப்படை. பல்வகைத் தாண்டகத்துடனே, இறைவரைப் போற்றி செய்கின்ற தனித்தாண்டகமும், பிறவித்துன்பத்தை அறுக்கின்ற சிவபெருமான் விளக்கமாக எழுந்தருளும் தானங்களைக்கூறும் அடைவுள்ள திருத்தாண்டகமும், உயிர்கள் செல்லவேண்டிய கதியைக் காட்டுவதற்காகத் துதிக்கின்ற திருவங்கமாலையும், என்றிவையுள்ளிட்டு, அளவில்லாத பல தொகைப் பதிகங்களையும் அருளிச்செய்தனராய்ப் போற்றி அங்கு எழுந்தருளியிருந்தனர். (வி-ரை.) இப்பாட்டினால் நாயனார் அத்தலத்துத் தங்கும் தன்மைவேண்டி அருள் பெற்றுத் திருமடம் செய்து, எழுந்தருளியிருந்த காலங்களில் உலக முய்ய அருளிய தொகைப் பதிகங்களையும், அவற்றின் அருட் குறிப்புக்களையும் எடுத்துக் கூறுகின்றனர் ஆசிரியர். பல்வகைத் திருத்தாண்டகம் - தனித்திருத்தாண்டகம் - அடைவு திருத்தாண்டகம் - திருவங்கமாலை - இவை பதிகங்களின் பெயர்கள். இப்பெயர்களின் பொருள் பற்றி அவ்வப்பதிகக்குறிப்புப் பார்க்க. தானம் - திருத்தலங்கள். அல்லல் - எல்லாத்துன்பங்கட்கும் காரணமாகிய பிறவித்துன்பம். செல்கதி காட்டிடப் போற்றும் - உயிர்கள் சென்று சேரவேண்டிய கதியைக் காட்டும் பொருட்டுப் போற்றப்படும். கதி - ஞானம் என்றலுமாம். பன்மைத் தொகை - ஒவ்வொரு பதிகமும் ஒரு கருத்துடைய பலபொருள்களைத் தொகுத்துக் கூறும் தன்மை யுடையன என்பது. தொகை - குறுந்தொகை என்ற குறிப்புமாம். இயம்பினர் - ஏத்தி - இயம்பினராகி ஏத்தி. இயம்பினர் - வினைமுற்றெச்சம். இருந்தார் - அத்திருமடத்தில் தங்கி எழுந்தருளி யிருந்தார். இறைவரைத் தியானித்திருந்தார் என்ற குறிப்புமாம். அத்திருமடத்தில் நாயனார் சிவயோகத் தமர்ந்து எழுந்தருளி யிருந்த சிறு அறையின் அடையாளங்கள் இன்றும் காணப்படும். இனிப் பலகாலம் அங்குச் சிவயோகத்தி லமர்ந்து எழுந்தருளியிருக்கும் திரு உள்ளக்குறிப்பு. 390 பொது I திருச்சிற்றம்பலம் | பலவகைத் திருத்தாண்டகம் |
| நேர்ந்தொருத்தி யொருபாகத் தடங்கக் கண்டு நிலைதளர வாயிரமா முகத்தி னோடு பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு படவரவும் பனிமதியும் வைத்த செல்வர் தாந்திருத்தித் தம்மனத்தை யொருக்காத் தொண்டர் தனித்தொரு தண்டூன்றி மெய்தளரா முன்னம் பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீ ராகிற் பொல்லாப் புலாற்றுருத்தி போக்க லாமே. |
1 | தந்தையார் தாயா ருடன்பி றந்தார் தாரமார் புத்திரரார் தாந்தா மாரே வந்தவா றெங்ஙனே போமா றேதோ மாயமா மிதற்தேது மகிழ வேண்டாம் |
|