பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்655

 

(6) நலஞ்சுழியா - நன்மையினின்றும் பிறழாது. அலம் சுழிக்கும் - துன்பத்திடைப் பட்டுச் சுழலும். அலம் - துன்பம். - (7) தண்டி - குண்டோதரன் - பிங்கிரூடி - நந்தி - சங்கு கன்னன் - இவர்கள் சிவகணத் தலைவர்கள். உலகம் படைத்தான் - பிரமன்; பாரை அளந்தான் - நெடுமால்; பல்லாண்டு இசைத்தல் - வாழ்த்துதல்; பூதம் - சிவகணம் - (8) விடமூக்கப் பாம்பு - மூக்கில் விடமுடைய பாம்பு. மூர்க்க - என்பதும் பாடம். தமர் - அடியார். வடமூக்க மாமுனிவர் - முத்தி விரும்பி வடக்கு நோக்கித் தவஞ்செய்யும் அறவோர். - (9) தழை அணுகும் - பூக்கள் நிறைந்து தழைகள் சிலவாய் அணுகிய. கண்காட்டா - கண்ணாற் காணமுடியாத; கலந்து ஆடவரும் பெண்டிரும் கூடி வழிபடுதல் குறிப்பு. எண் காட்டா - மனத்தாலும் எட்ட முடியாத. - (10) வந்தவாறு - பிறப்பின் முதல். போமாறு - சாதலும் அதன் வழிவரும் பிற்றை நிலையும். திருநாமம் - திருநாமமாகிய. இருவிசும்பு - ஈண்டு மீளா நெறியாகிய சிவனுலகம் குறித்தது.

பொது

IIதிருச்சிற்றம்பலம்

தனித் திருத்தாண்டகம்

அப்பனீ யம்மைநீ யைய னுநீ யன்புடைய மாமனு மாமி யுநீ
யொப்புடைய மாதரு மொண்பொ ருளுநீ ஒருகுலமு சுற்றமு மோரூ ருநீ
துய்ப்பனவு முய்ப்பனவுந்தோற்றுவாய்நீதுணையாயென்னெஞ்சந் துறப்பிப்பாய்நீ
இப்பொனீ யிம்மணிநீ யிம்முத் துநீ யிறைவனீ யேறூர்ந்த செல்வ னீயே.

1

ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே யடக்குவித்தா லாரொருவரடங்காதாரே
ஓட்டுவித்தா லாரொருவ ரோடா தாரே யுருகுவித்தா லாரொருவ ருருகாதாரே
பாட்டுவித்தா லாரொருவர் பாடா தாரே பணிவித்தா லாரொருவர்பணியாதாரே
காட்டுவித்தாலாரொருவர் காணா தாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.

திருக்கோயி லில்லாத திருவி லூருந் திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும் பாங்கினொடு பலதளிகளில்லாவூரும்
விருப்போடு வெண்சங்க மூதா வூரும் விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரு மவையெல்லா மூரல்ல வடவி காடே.

5

திருநாம மஞ்செழுத்துஞ் செப்ப ராகிற் றீவண்ணர் திறமொருகாற் பேசாராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகி லுண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அரு நோய்கள் கெட வெண்ணி றணியா ராகி லளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்
பெருநோய்கண்மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கேதொழிலாகி யிறக்கின்றாரே.

6

அத்தாவுன்னடியேனையன்பாலார்த்தாயருணோக்கிற்றீர்த்தநீ ராட்டிக்கொண்டாய்
எத்தனையுமரியநீயெளியையானாயெனையாண்டுகொண்டிரங்கியேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயே னாயேன் பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையுமெம் பரமேர்வைய! வையோ! வெம்பெருமான்றிருக் கருணையிருந்தவாறே.

குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
         குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லே னான்பொல்லேன் ஞானி யல்லே
         னல்லரோ டிணங்கிலே னடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்
         வெறுப்பனவு மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லே னிரப்பதே யீய மாட்டே
         னென்செய்வான் னோன்றினே னேழை யேனே.

9