| நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு நலந்திகழு நாலாறுந் திருவை யாறும் தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல் லிடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம் விள்ளாத நெடுங்களம் வேட்கள நெல்லிக்கா கோலக்கா வானைக்கா வியன்கோ டிகா கள்ளார்ந்த கொன்றையா னின்ற வாறுங் குளங் - களங் - கா வெனவனைத்துங் கூறு வோமே. 10 கயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு சிரங்களுர நெரியக்கால் விரலாற் செற்றோன் பயில்வாய பாராய்த்துறைதென் பாலைத் துறை பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற் குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு மயிலாடு துறைகடம்பந் துறை யாவடு துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே. |
11 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- அடைவு - புகலாக அடையத் தகுமிடம். பிறவி வேதனைக்கு அஞ்சிய உயிர்கள் வந்தடையு மிடங்கள் சிவபெருமான் வெளிப்பட்டெழுந்தருளி யிருக்கும் திருத்தலங்களேயாம். "நின்னை யடைவாக வுடன்போந்தேன்" (திருஞான - புரா - 475). அத்திருத்தலங்களைத் தொகுத்து வகைப் படுத்தி எடுத்துக் கூறுதலால் இப்பதிகம் இப்பெயர் பெற்றது. வீரட்டான மிவைகூறி நாவி னவின்றுரைப்பார்க்கு நணுகச் சென்றால் நமன்றமரும் சிவன் தமரென் றகல்வர்; போற்ற இடர் போகும்; மலைகள் மற்றும் இடர்கெட நின்றேத்துவோம்; பகர்வோரெல்லாம் பரலோகத்தினிதாகப் பாலிப்பார். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இப்பாட்டுப் பள்ளி என்ற பெயருடைய தலங்களைத் தொகுத்துக் கூறுவது. பள்ளி - தங்குமிடம். கொல்லி அறப்பள்ளி - கொல்லிமலையில் உள்ள அறப்பள்ளி என்ற தலம். "கொல்லி குளிர் அறப்பள்ளி" (க்ஷேத் - கோ - தாண் - 1). இறைவர் - அறப்பளீசர். இது கொங்குநாட்டில் தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. பாலிப்பாரே - பாலிக்கப்படுவார்.- (2) இப்பாட்டு வீரட்டானத் தலங்களைத் தொகுத்துக் கூறுவது. கோத்திட்டை - திருப்பரங்குன்றம். இது வீரட்டானங்களுள் ஒன்றன்றாயினும், கோத்திட்டையும் கோவலும் கோயில் கொண்டீர்" (நம்பி - தேவா) என்று இணைத்துப் போற்றப்படுதலால் இத்தொகுதியில் சேர்த்தருளுதற்குரியது. "குடி வீரட்டானம்" என்ற கருத்துமிது. வீரட்டானம் - வீரஞ்செய்த எட்டுத்தலம் என்பதுபொருள். - (3) இப்பாட்டுக் குடி என்ற பேருடைய தலங்களைத் தொகுத்துக் கூறுவது. விடைவாய்க் குடி - இத்தலத்து ஆளுடைய பிள்ளையார் தேவாரப் பதிக முழுமையும் கோயிற் சுவரில் கல்வெட்டினின்றும் எடுத்தெழுதப்பட்டுக் கிடைத்தது. (11-ம் திருமுறையினுள்) ஐயடிகள் அருளிய க்ஷேத்திர வெண்பா - 7-ல் போற்றப்பட்டது. - (4) இப்பாட்டு ஊர் என்று பெயர் வழங்கும் தலங்களைத் தொகுத்துக் கூறுவது. தோழூர் - கொங்கு நாட்டில் உள்ளது. - (5) இப்பாட்டுக் கோயில் என்ற பெயரால் வழங்கப்படும் தலங்களைத் தொகுத்துக் கூறுகின்றது. பெருங்கோயில் - மாடக்கோயில். நன்னிலத்துப் பெருங்கோயில் முதலியவை. இவை 78 என்ப; கோச்செங்கோட்சோழ நாயனார் முன்பிறவி நினைவினால் யானை புகாதபடி இறைவனுக்கு அமைத்தவை. இச்செய்தியை வைணவ ஆழ்வார்களும் போற்றியுள்ளார்கள். கொகுடிக் கோயில் - கொகுடி - |