பக்கம் எண் :


664திருத்தொண்டர் புராணம்

 

யினவாய் வந்து என்னையேசுற்றி என்னகத் தடங்கும்; அது ஒன்பது என்னும் எண்ணினைப்போல; இஃதெவ்வாறெனின், ஒன்பதை எதனால் எத்தனை பெருக்கினும், பெருக்கி வந்த எண்ணின் உள்ள இலக்கங்களைக் கூட்டினால் ஒன்பதே வருவதுபோல. 9x2=18=1+8=9; 9x3=27=2+7=9; 9x4=36=3+6+9; 9x5=45=4+5=9; 9x6=54=5+4=9; 9x7=63=6+3=9; 9x8=72=7+2=9; 9x9=81=8+1=9; மேலும். 9x144=1296=1+2+9+6=18=1+8+9 என்றிவ்வாறு கண்டுகொள்க. ஒன்பது என்ற எண், ஒன்று - இரண்டு - முதலிய ஏனை எண்களைப்போலத் தனக்கென்று ஒரு தனிப் பெயரில்லாமல் பின்வரும் பத்து என்பதில் ஒன்று குறைந்தால் எதுவோ அது என்றறியப்படுமாறு பெயர் கொண்டிருத்தல் பின்வரும் பாசமாகிய உலகமும், முன் நிற்கும் பதியும் அல்லாதது என்றறியப்பட்டும் தனித்து நில்லாது, பதியினையோ அன்றிப் பாசத்தையோ சார்ந்து நிற்றலும் ஆன நிலையின் உள்ள உயிரை ஒத்திருக்கின்ற தென்பதும், கடிகார யந்திரங்களிலும் ஒன்பதைக் குறிக்க IX என்ற (X-ல் I குறைக்க என்பது பொருள்பட) குறியீடு கொள்வதும், பிறவும் இங்குக் காணத்தக்கன. - (10) பத்து நூறு - அளவில்லாத. பத்தியான் - பத்துக் குணங்களையுடைய அடியவர். "பத்துடையீர்" (திருவா). பள்ளி - தங்குமிடம்.

பொது - தனித் திருக்குறுந்தொகை

IIதிருச்சிற்றம்பலம்

குறுந்தொகை

எயி லானையென் னிச்சை யகம்படிக், கோயி லானைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மணி யைப்பெற்ற, தாயி லானைத் தழுவுமென் சிந்தையே.

1

மலையே வந்து விழினு மனிதர்காள், நிலையி னின்று கலங்கப் பெறுதிரேற்
றலைவ னாகிய வீசன் றமர்களைக், கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே.

5

கற்றுக் கொள்வன வாயுள நாவுள, இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யானுள னாமுளோம், எற்றுக் கோநம னான்முனி வுண்பதே.

என்னை யேது மறிந்தில னெம்பிரான், றன்னை நானுமு னேது மறிந்திலேன்
என்னைத் தன்னடி யானென் றறிதலுந், தன்னை நானும் பிரானென் றறிந்தேனே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- மனோன்மணியைப் பெற்ற தாயிலானை என் ஆவி தழுவும்; அவனை நான் ஞானத்தளை யிட்டுவைப்பன்; ஆனால் ஞானிகள் தொழுவதுபோல் நான் ஞானத்தாற் றொழ வல்லனல்லேன்; புழுவினும் கடையேன் உயர்ந்த அடியார் கூட்டத்திற்கூட என்ன தகுதியுடையேன்?; மலையே வந்து விழினும் நிலையினின்று கலங்காமனின்றால் அவ்வடியரைக் கொலை யானையும் கொன்றிடவல்லதன்று; சிவனைப் பூசித்து வாழ்த்தினால் நமன் பயமில்லை; ஈசன் ஏசற்றவர்க்கு இனியன்; ஈசன் என்னை அறியாதபோது நான் அவரை ஏதும் அறிந்திலேன்; அவன் அருளியபோது நான் அறிந்து ஆட்செயவல்லனாயினேன்; அவன் அருள் கள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததோ அறியேன்.

குறிப்பு :- இப்பதிகம் மிக அருமைப்பாடு பெற அடிமைத் திறத்தை அனுபவித்துக் கூறுவது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஏ இலான் - தமக்குமேல் தலைவனில்லாதவர். இச்சை அகம்படிக் கோயில் - உள்ளக்கோயில்; (குணக்குன்றினை). வாயிலான் - வாயிலாகவுடையான்; மனோன்மணியை பெற்ற - "இமவான் மகட்குத், தன்