இவை இயமன் தூதுவரை நோக்கிக் கூறப்பட்டன. "நமன் தூதுவீர்! (5); "படையும் பாசமும் பற்றிய கையினீர்"!" (7) கொடு கொட்டி - இயங்களின் ஒருவகை. - (2) கல்லவடம் - ஒருவகைப்பறை. "கல்லவடமிட்டுத் திசைதொழுதாடியும்" (தேவா). - (5) இறை - சிறிதும். உம்மை தொக்கது. - (6) வாமதேவன் - சிவன். வாமதேவம் - சதாசிவ மூர்த்தியின் ஐம்முகங்களுள் வடக்கு நோக்கிய முகம். காமம் - சிவனடியன்றி வேறொன்றிற்செல்லும் இச்சை. ஒன்று - ஒன்றும். உம்மை தொக்கது. ஏமம் - திருநீறு.- (8) விச்சை - அறிவு - ஞானம். வேட்கைமை - விருப்பம்; நீச்சல் - நித்தம். எதுகை நோக்கி நிச்சல் என நின்றது. - (9) ஒன்று - ஒரு முறை சொல்லுதல். உம்மை இழிவு சிறப்பு. பொருந்துதல் என்றலுமாம். இப்பொருளில் உம்மை எண்ணும்மை.- (10) மனப் பரிப்பு ஒன்று - மனத்தில் வைத்தல் வேறொன்றும். இல்லிகள் - இல்லாதவர்கள். - (11) தமர் - அடியார். "தமர் ஒருவர்" (அப்பூதி - புரா - 9). "தமரேயோ" (318). அங்கு - அங்கு நின்றும். சுருக்கெனில் - உமது தொழில் மற்றும் செய்ய முயன்றால். சூடுமே - சுடுமே. ஏகாரம் தேற்றம். பொது "மறக்கிற்பனே" யென்னுந் திருக்குறுந்தொகை IV திருச்சிற்றம்பலம் | குறுந்தொகை |
| காசனைக்கன லைக்கதிர் மாமணித், தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள்; மாசி னைக்கழித் தாட்கொள வல்லவெம், மீச னையினி நான்மறக் கிற்பனே. 1 துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியை, நெஞ்சு ணின்று நினைப்பிக்கு நீதியை, நஞ்சு கண்டத் தடக்கிய நம்பனை, வஞ்ச னேனினி நான்மறக் கிற்பனே. |
8 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- ஈசனைப் புகழார் சிலர் தெண்ணர்கள்; ஈசன் வந்தென் உள்ளங் குடி கொண்டான்; அவர், புந்திக்கு விளக்காய புராணன், ஞானமூர்த்தி; துஞ்சுமபோதுஞ் சுடர்விடு சோதி; நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதி; பருகு பாலன்; என்றிவை முதலிய தன்மைகளா லறியப்படுபவர்; அவரை நான் இனி மறக்கிற்பனோ? (மறக்க கில்லேன்). பதிகப் பாட்டுக் குறிப்பு :- காசன் - பொற் காசு போல்பவர். தெண்ணர் - கீழோர். மறக்கிற்பனே - கில் - ஆற்ற லுணர்த்தும் இடைநிலை; ஏகாரம். மறக்கும் ஆற்றல் உளனாவனோ? மறக்கேன்; என்று வினா எதிர்மறை யுணர்த்திற்று. - (2) புந்திக்கு விளக்கு - புந்திக்கு வழிகாட்டுவது. சந்தி - நினைப்புப் பொருந்துமிடம்; மன்றம் என்றலுமாம்.- (4) இனி - இதற்குமுன் மறந்ததுபோல இனி; "இனி நான்" (1) - (5) வேனிலான் - மன்மதன்; - (8) துஞ்சும் போதுநின்னாமத் திருவெழுத், தஞ்சுந் தோன்ற வருளுமை யாறரே", "நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே, துஞ்சும்போ தாகவந்து துணையெனக்காகி நின்று, அஞ்சலென் றருளவேண்டும் ஆவடு துறையு ளானே", "மரணங் கைகூட்டுவ தஞ்செழுத்துமே" முதலிய திருவாக்குக்களும், "அவிகின்ற விளக்குச் சுடர்விட் டெரிவதுபோல" என்ற பழமொழியும் காண்க.-(10) உருவ நோக்கி - உலகம் உருப்பெறும்படி - உண்டாம்படி - நோக்குபவன். குறிப்பு :- "மறக்கிற்பனே" என்று பாட்டுக்கள் முடிவு பெறுவதால் இப்பதிகம் "மறக்கிற்பனே" என்னும் திருக்குறுந்தொகை எனப் பெற்றது. இவ்வாறே மேல்வரும் பதிகமும் "தொழற்பாலதே என்னும் பதிகம்" எனப் பெயர்பெறும். |