பக்கம் எண் :


668திருத்தொண்டர் புராணம்

 

குறிப்பு :- இப்பதிகம் சிவனைச் சாரலுறும் நெறி நான்கனுள் சரியையின் இன்றியமையாச் சிறப்பை வற்புறுத்தி எடுத்துக் கூறுவதுடன் சிவலிங்கதத்துவத்தையும் கூறுவதனால் இப்பெயர் பெற்றது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நக்கு - மகிழ்ந்து; சொக்கு - அழகு. மிக்கு - தம்மறுவி னாற்றலாற் காண்பேம் என்று மேற்சென்று; இருவர் - பிரமாவும் விட்டுணுவும் என்பது 10-வது பாட்டிற் கூறுதல் காண்க. - (2) திலக மண்டலம் - வட்டமாகிய திலகம். பொட்டு. செலவு - மேலும் கீழும் செல்லும் அளவு.- (3) ஆப்பி - பசுவின் சாணம். "திருவலகுந் திருமெழுக்கும் தோண்டியும் கொண்டு" (1333). சுமந்திலர் - கூடையிற் பூ நிறைந்த அளவு காட்டச் சுமந்து என்றார். "நிரம்ப நீர் சுமந்து" (6) என்றது காண்க. "ஸதேஷ்ட ஜலம் அபிஷிச்ய" என்னும் விதியும் காண்க. "பொன்னடியே பரவி நாளும் பூவோடு நீர் சுமக்கும், நின்னடியார்" (நெடுங்களம் - 3).- (7) காணிய - காணும்பொருட்டு. - (9) குவளை மலர் பிளவு செய்து பிணைத்து - குவளை மலர் தொடுக்கும் ஒரு வகை. - (10) சங்கம் விம்ம வாய் வைத்திலர் - "விருப்போடு வெண் சங்க மூதா" (தேவா). - (11) புண்ணிய மூர்த்தியே - புண்ணிய மூர்த்தியாதலின் தாமே அருளினாற்றோன்றினார் என்பது குறிப்பு.

பொது - மனத்தொகை

VIIதிருச்சிற்றம்பலம்

குறுந்தொகை

பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்,
மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை,
நின்னுள் ளத்தருள் கொண்டிரு ணீங்குழல்,
என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- எந்தை பிரானீரே! நின் திருவுள்ளத்தருள் கொண்டு இருள் நீங்குதல் என் உள்ளத்து உள்ளது.

                           பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) உள்ளத்துள்ளது - எனது உள்ளக்கிடக்கை இது ஒன்றே. இதனால் இப்பதிகம் மனத்தொகை எனப்பட்டது. எந்தை பிரானீரே - இப்பதிகத்தின் மகுடம். - (6) அம்மால் - அந்த ஆர்வம் - ஆசை. மால் - ஈண்டு அழுந்திய நல்லார்வத்தின்மேல் நின்றது. - (7) வெப்பத்தின் - தீமையுடைய. செப்பம் - நேர்மை; செப்பத்தாற் சிவன் என்பவர் - சிவன் என்று நேர்மையினாற் கூறுபவர். சிவன் - சித்து என்னும் பொருள் தருதலின் ஆணவத்தே நீக்கி அறிவை விளக்குதலால் சிவன் எனப் பெயர் போந்த தென்பாருமுண்டு. ஒப்ப - முற்றும். - (10) எந்தை எம்பிரான் - "எந்தை பிரானிரே" என்ற மகுடத்தை விளக்கியவாறு. எமது தந்தையும் தலைவரும். "எந்தையே எம்பிரானே" (சித்தத்தொகை - 8).

பொது - சித்தத்தொகை

VIIIதிருச்சிற்றம்பலம்

குறுந்தொகை

சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர், அந்தி வானிறத் தானணி யார்மதி,
முந்திச் சூடிய முக்கண்ணி னானடி, வந்திப் பாரவர் வானுல காள்வரே.

1

அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர், உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்,
கண்டிங் காரறி வாரறி வாரெலாம், வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே.
ஊரி லாயென்றொன் றாக வுரைப்பதோர், பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா,
காரு லாங்கண்ட னேயுன் கழலடி, சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.

7