பல் காலம் - சொல்லப்பட்ட பல காலமும்; வெற்பு - உதயமலை. - (24) யாவர் - எவரோ அவர்; பேயர் - சிவ கணத்தார். "பாலருன்மத்தர் பசாசர் குணமருவி" என்றபடி பேய்க்குணமுடைய அடியவர் என்றலுமாம். - (25) நயக்க - விரும்ப. இயக்கர் - யகரத்தின் குறியீடாக வைத்தோதியது. - (26) அரவம் - ரகத்தின் குறியீடு. குரவை கோத்தவன் - குரவைக் கூத்தாடும் திருமால். அல்லரே - அல்லரோ?; ஏகாரம் வினா. கரி - சான்று. - (27) அழல் - ழகரத்தின் குறியீடு. தழலும் - தழல்போல் மலரும். - (28) இளமை - ளகரத்தின் குறியீடு. மூப்பினார் - இகழ்ச்சி குறித்த பன்மை. - (30) ஈரைந்து - பத்தும் - இருபது. தோள்களும் - நாடொறும் நாடொறும் - அடுக்குத் தினந்தோறும் வணங்குதலின் இன்றியமையாமை குறித்தது. பொது - உள்ளத்தொகை IXதிருச்சிற்றம்பலம் | குறுந்தொகை |
| நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை, யாற லைக்கநின் றாடு மமுதினைத், தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர், ஊறலைக் கண்டு கொண்டதெ னுள்ளமே. மருவி னைமட நெஞ்ச மனம்புகுங், குருவி னைக்குணத் தாலே வணங்கிடுந் திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற, உருவி னைக்கண்டு கொண்டதென் னுள்ளமே. வெறுத்தா னைம்புல னும்பிர மன்றலை, யறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக் கறுத்தா னைக்காலி னில்விர லொன்றினால், ஒறுத்தானைக் கண்டு கொண்டதென்னுள்ளமே |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- அமுதினைத், தெளிவாய்த்ததோர் ஊறலை, உள்ளத்தில் ஒளியை, ஞானமாம் ஒன்றானைச், சிந்தையுட் சிவனாய் நின்ற உருவினை, என் உள்ளம் கண்டு கொண்டது. பதிகப் பெயரும் இதனானே விளங்கும். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நீறு அலைத்தது - நீறு நிரம்பக் கிடந்தது - (2) பொந்தை - பொத்தல் உடம்பு; மேனி - மேனி யுடையவர்; ஆகுபெயர். - (3) வெள்ளத்தார் - அருள் வெள்ளத்தார். கள்ளம் - ஆணவம். - (6) முன் நெஞ்சம் - இறைவரை நினைக்கும் நெஞ்சம். முன்னுதல் - நினைத்தல். - (7) ஞானமாம் ஒன்றான் - ஞானமாகிய ஒன்றினான் அறியப்படுவன். - (8) சிந்தையுட் சிவன் - நினைப்பினில் வெளிப்படுபவன். "சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன் பள்ளியாரே" (தேவா). உரு - முன்னர் மறைந்து நின்று பின்னர் நினைப்பில் உருவெளிப்பாடு பெற்ற நிலை. "நெஞ்சினுள் நிறைவாய் நின்ற ஈசன் (9)." பொது - ஆதிபுராணத் திருக்குறுந்தொகை X திருச்சிற்றம்பலம் | குறுந்தொகை |
| வேத நாயகன் வேதியர் நாயகன்; மாதி னாயகன் மாதவர் நாயகன்; ஆதி நாயக னாதிரை நாயகன்; பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. 1 செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று, பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ? அத்த னென்றரி யோடு பிரமனுந், துத்தி யஞ்செய நின்றநற் சோதியே. 2 நூறு கோடி பிரமர்க ணொங்கினார்; ஆறு கோடிநா ராயண ரங்ஙனே; ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்; ஈறி லாதவ னீச னொருவனே. 3 வாது செய்து மயங்கு மனத்தராய், ஏது சொல்லுவீ ராகிலு மேழைகாள்! யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலா, மாதே வன்னலாற் றேவர்மற்றில்லையே. |
4 |