பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்671

 

கூவ லாமை குரைகட லாமையைக், கூவலோ டொக்குமோகட லென்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற், றேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.

5

எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன, துருவ ருக்கம தாவ துணர்கிலார்,
அரிய யற்கரி யானை யயர்த்துப்போய், நரிவி ருத்தம தாகுவர் நாடரே.

7

அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியி, லருக்க னாவா னரனுரு வல்லனோ?
இருக்கு நான்மறை யீசனை யேதொழுங், கருத்தி னைநினை யார்கன் மனவரே.

8

தாயினு நல்ல சங்கர னுக்கன்ப, ராய வுள்ளத் தமுதருந் தப்பெறார்.
பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய, மாயன் மாயத்துட் பட்ட மனத்தரே.

9

அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள், பெருக்கச் செய்தபிரான் பெருந்தன்மையை
அருந்திசெய்தறி யப்பெருகின்றிலர், கருத்திலாக்கய வக்கணத்தோர்களே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஆதி நாயகன், தேவ தேவன் என்பன முதலாகச் சிவ பெருமானது முதன்மைத் தன்மையை விரித்தெடுத் துரைப்பது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) ஆதி நாயகன் - எல்லாருக்கும் முன்னவன். பதிகப் பெயர் இதனால் போந்தது. - (2) பாறை - கல்போன்ற மனதுடையவர். கன்மனவர் (8); துத்தியம் - துதிக்கும் பாட்டு. "செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள!" (குமரகுருபரர்); இவ்வகையுள் எல்லாச் சமயபேதங்களும் அடங்கும். - (3) நொங்குதல் - அழிதல். - (4) ஏழைகாள் - அறிவினால் ஏழைகள். அறிவுச் செல்வமிலாதவர். இரங்கிக் கூறியது. - (5) பழமொழியை உவமானமாகக் கூறியது. கூவல் - கிணறு. பாவ காரிகள் - பாவம் செய்தவர்கள். - (6) அடிச்சாய்வன் - அடியிற் சாயப்பெற்றவன்; சலவார்கள் - சலமிலாது தொண்டு செய்பவர்கள்; உடற்சீவன் - உடலைச் சீவன் உண்ணின்று இயக்குதல் போல அவர்களுக்குள் நின்று ஆட்கொள்பவன். - (7) எரி பெருக்குவர் - வேள்விகளில் தீ வளர்ப்பர். எரி ஈசனது உரு வருக்கம் - சிவனது திருமேனியாகிய எட்டு மூர்த்தங்களுள் தீ ஒன்று என்பது. "வனமுலை யிணையவை குலவலின் - எரி யிடிலிவை பழுதிலை" என்ற பிள்ளையார் தேவாரக் கருத்துமிது. நரிவிருத்தம தாகுதல் - நரியின் சூழ்ச்சிபோன்று பயனற்றதாதல். "நரிவரால் கௌவச் சென்று நற்றசை யிழந்த தொக்கும்" (தேவா). - (8) அருக்கன்..........அந்தியில் - மேற்கு நோக்கி நின்று சூரியனை வழிபடும் அந்தணர் நியதி. அந்தி - காலை என்று கொண்டு "கிழக்கேசல மிடுவார்தொழு கேதாரமெனீரே" (நம்பி - தேவா) என்றபடி, காலையில் கிழக்கு நோக்கிச் செய்யும் வழிபாடு என்பாரு முண்டு. - (9) பேய்முலை யுண்டுயீர் போக்கிய மாயன் - திருமால். - (10) அரட்டு - துட்டுச் செயல்; அருத்தி - அன்பு. கயவக் கணம் - கீழ்களின் கூட்டம்.

வேறு

1656.

பொன்னிவலங் கொண்டதிருப் பூந்துருத்தி யவரிருப்பக்
கன்மனத்து வல்லமணர் தமைவாதிற் கட்டழித்துத்
தென்னவன்கூ னிமிர்த்தருளித் திருநீற்றி னொளிகண்டு
மன்னியசீர்ச் சண்பைநகர் மறையவனார் வருகின்றார்,

391

1657.

தீந்தமிழ்நாட் டிடைநின்று மெழுந்தருளிச் செழும்பொன்னி
வாய்ந்தவளந் தருநாட்டு வந்தணைந்தார் வாக்கினுக்கு