பக்கம் எண் :


710திருத்தொண்டர் புராணம்

 

"செஞ்சடை முக்கண னார்க்கன்றி யிங்குமன்றிக் கிடங்கினிற் பட்ட கராவனையார்பலர் கேவலரே" (பொன்னவண் - அந் - 64). இருதலை - இவ்வுலகப் பற்றிலும் முற்றிலும் தோய்ந்துபடாது, இறைவனையும் முற்றும் பற்றாது நிற்கும் நிலை. இருவழியும் சுடுதலின் கொள்ளி என்றார். - (7) மோத்தை..........காக்கை - பழமொழி. மோத்தை - ஆட்டுக்கடா. காக்கை ஆட்டின் தசை தின்ன மொய்த்தல் போல மாயப் பவக்கடலை அரித்துத் தின்ன வினைகள் மொய்கின்றன. சீத்தை - அழுகிய பண்டம். சிதம்பு - அழிவுடையது. ஊத்தை - முடைநாற்றமுடையது; அழுக்கு; இவை உடலினிழிவு குறித்தன. - (8) நாயனாரது உள்ளக் கிடையாகிய பிரார்த்தனை குறித்தது. - (9) அகப்பொருட் சுவை படநின்ற கருத்து. வெள்ளரோம் - கள்ளருக்கு மறுதலை. வெள்ளத்தை உடையவர் என்ற குறிப்பும் காண்க. "கள்ளரோ டில்ல முடையார் கலந்திடில், வெள்ள வெளியாமென் றுந்தீபற" (திருவுந்தி.) - (10) அடிமைத் திறத்தின் வீறு தோன்ற நகைச்சுவையும் பெருமிதமும்படக் கூறிய கருத்து. ஒரு சிறு விரலூன்றத் தாங்கமாட்டாது வலிய அரக்கன் அலறிடவும், எளிய அடிமை அவரது திருவடி யிரண்டும் சுமந்து திரிகின்ற வலிமைதான் என்னே!; நான் - வரை போன்ற தோளும் வலிமையுமுடைய அரக்கன்போ லன்றி எளிமையுடைய நான்.

பொது - தனித் திருநேரிசை

VI - 2. திருச்சிற்றம்பலம்

மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன்
இருளாவா வறுக்கு மெந்தை யிணையடி நீழ லென்னும்
அருளவாப் பெறுத லின்றி யஞ்சிநா னலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே.

1

மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் விதையை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித்
தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே.

2

காயமே கோயி லாகக் கடிமன மடிமை யாக
வாய்மையே தூய்மை யாக மனமணி யிலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய வாட்டிப்
பூசனை யீச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே.

4

நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன வஞ்சு பூத மவைதமக் காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை;
கெடுவதிப் பிறவி சீ! சீ! கிளரொளிச் சடையி னீரே.

10

திருச்சிற்றம்பலம்

                            பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மருள் அவா - பொய்யை மெய் என்ற மருளினால் வரும் அவா. "பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும் மருள்" (குறள்). பொருள் அவா - மெய்ப் பொருளின்கண் விருப்பம். போது போய்ப் புலர்ந்தது - கெடுங்காலத்துக்கு விடிவு வந்தது.- (2) இப்பாட்டு உழவுபற்றிய உருவகம். சிவகதியாகிய விளைவுக்கு உபாயங்கூறியது. - (3) கரக்கும் - அடக்கித் தோன்றாதபடி செய்யும்.-(4) இப்பாட்டு அகப்பூசை அருச்சனை வழிபாட்டு முறை கூறிற்று. கடிமனம் - தூய அந்தக்கரணம். மனம் அணி இலிங்கம் - மனம் - ஆன்மா; இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமாக - திருமேனியாகக் -