பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்711

 

கொண்டு.-(6) ஆயிரம்.......அமுதன் - நஞ்சுடைய பெரும் பாம்புகள் பலவும் மேற்பூண்டும் (நஞ்சுண்டும்) தனது அமுதத் தன்மையால் சாவாதிருக்கும் தன்மை வாய்ந்தவன். ஆயிரம் - அனேகம். நோய் - மலவாசனைகள். - (7) விள்ள - சொல்ல. வள்ளம் - வாயகன்ற பெரும் பாண்டமாகிய அளவு. உள்ளம் - மனம். உயிர்ப்பு - பிராணவாயுத் தொழில். "என்னுள்ளே யுயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு" (தேவா). கள்ளத்தே - மறைந்தபடி; ஒளிந்து. "உள்ளங்கவர் கள்வன்" (தேவா). "ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்" (திருவா). - (8) அங்கு - இங்கு - இறைவன் றிருவடியும் உலகமும் "அங்கு மிங்கு மாகி யலமருவோர்" (சித். சூத். 8 - 39). "ஈசனே நீயல்ல தில்லை யிங்கு மங்கும்" (திருவா). - (9) புறப்பட்டு - வெளிப்பட்டு விலகி. - (10) நடு - கண்ணோட்டம். "தரியா னொருகணந்தறுக ணாளன்."-(10) படுவன.......சீ! சீ! - மனித வாழ்க்கையின் இழிவு நோக்கியிரங்கியது.

பொது - தனித் திருநேரிசை

VI - 3. திருச்சிற்றம்பலம்

கடும்பக னட்ட மாடிக் கையிலோர் கபால மேந்தி
யிடும்பலிக் கில்லந் தோறு முழிதரு மிறைவ னீரே
நெடும்பொறை மலையர்ட பாவை நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங் கோவண மரைய தேயோ.

1

கோவண முடுத்த வாறுங் கோளர வசைத்த வாறுந்
தீவணச் சாம்பற் பூசித் திருவுரு விருந்த வாறும்
பூவணன் கிழவ னாரைப் புலியுரி யரையி னாரை
யேவணச் சிலையி னாரை யாவரே யெழுது வாரே.

2

விளக்கினார் பெற்ற வின்ப மெழுக்கினாற் பதிற்றி யாகும்;
துளக்கினன் மலர்தொ டுத்தாற் றூயவிண் ணேற லாகும்;
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்;
அளப்பில் கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே.

3

சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி
யந்தரத் தமரர் பெம்மா னானல்வெள் ளூர்தி யான்றன்
மந்திர நமச்சி வாய வாகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையு நோயும் வெவ்வழல் விறகிட் டன்றே.

4

புள்ளுவ ரைவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை யவர்க டம்மை முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினா லெய்ய லாமே.

5

உய்த்தகா லுதயத் தும்ப ருமையவ ணடுக்கந் தீர
வைத்தகா லரக்க னோதன் வான்முடி தனக்கு நொந்தான்;
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள் மூர்த்தியென் னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று வாடிநா னொடுங்கி னேனே.

10

திருச்சிற்றம்பலம்

VI - 1, 2, 3 பதிகக் குறிப்பு :- இத்திருப்பங்கள் சிவானந்தானுபவ உண்மைகள் தனித்தனி நேர்வன பலவற்றையும் கூறுவன. ஒரு தலத்தையேனும்,