பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்713

 

உலகேழும் விளங்க விழுமிய நூலாய்ந்தான் - என்றிவை முதலிய தன்மைகளாலறியப்படும் சிவபெருமானது திருவடிக் கீழதன்றோ என்றனாயிருயிர்?.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) எட்டாம் திசை - நேர்திசை நான்கும் கோணத் திசை நான்கும்; இருதிசை - மேல் - கீழ். "இறைவா! வெம்பூசல்!" என்று அமரர் முறையிட்டார் என்று கூட்டுக. எரி விழியா - எரி மூள விழித்து. என் ஆருயிர் அடிக்கீழது அன்றோ? என்றது இனித் திருவடிக்கீழ் நிலைபெற்று இருப்பன் என்ற குறிப்பு. - (2) மூவான் - மூப்பதுமில்லை. இளகான் - இளமை யாவதுமில்லை. விண்ணு மற்றும் ஆவான் - விண் முதலிய புவனங்களைத் தனது மாயை என்னும் சத்தியினாற் படைப்பவன். - (3) தரியா வெகுளியனாய் - பிறரால் தாங்கலாற்றாத வெகுளியை யுடையவனாகி. வேண்டுதல் வேண்டாமை யிலனாதலின் வெகுளி தரியாதவனாகி என்றலுமாம். பெரியார் - உலகை நீத்துத் தன்னையே பற்றிய ஞானிகள். என்றும் தன் பிறப்பை அரியான் - பிறப்பில்லாதவன். - (4) பொடி - திருநீறு. அகலம் - மார்பு. - (5) கறுப்பு அழகாவுடையான் - விடத்தினால் மேவிய கறுப்புப் பிறரை விகாரப்படுத்தி விடும்; ஆனால் சிவனை அது அழகிய மணிகண்டனாக அழகுபடுத்திற்று. - (6) வியன் அலகு ஏழும் விளங்க விழுமிய நூல் ஆய்ந்தான் - விழுமிய நூல் வேதம். அறமுதல் நான்கு. ஆய்ந்தான் - ஓதி அறிவித்தான். உலகு உய்ய மறை சொன்னான். "மறையாதி நூலையும் வகுத்து" (தாயுமானார்). - (7) செறுதற் கரியான் - பிரமன். - (8) முன்னாள் ஏதிலராற் சூழப்பட்டுத் துன்பமுற நேரும் என்றஞ்சியோ என் உயிர் ஒளியானடிச் சேர்ந்தது? அன்று - என்பது கருத்து. நாயனாரது சரிதக் குறிப்புப் போலும். முந்தி வட்டம் - முன்னைச் சூழல். பந்தி வட்டம் - சேனை முதலியவற்றினால் வளைத்துக் கொள்ளப்படுதல். நந்தி வட்டம் - மலர். அந்தி வட்டத்து ஒளி - செவ்வான ஒளி.

பொது - தசபுராணத் திருப்பதிகம்

VIIIதிருச்சிற்றம்பலம்

பண் - பழம் பஞ்சுரம்

பருவரை யொன்று சுற்றி யரவங்கை விட்ட விமையோ ரிரிந்து பயமாய்த்
திருநெடு மானி றத்தை யடுவான் விசும்பு சுடுவா னெழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றி தற்கோர் பிதிகார மொன்றை யருளாய் பிரானே யெனலும்
அருள்கொடு மாவி டத்தை யெரியாம லுண்ட வவனண்ட ரண்ட ரரசே.

1

"கடுகிய தேர்செ லாது; கயிலாயமீது கருதேலுன் வீர; மொழிநீ;
 முடுகுவ தன்று தன்ம" மெனநின்று பாகன் மொழிவானை நன்று முனியா
"விடுவிடு" வென்று சென்று விரைவுற் றரக்கன் வரையுற் றெடுக்க முடிதோள்
 நெடுநெடு விற்று வீழ விரலுற்ற பாத நினைவுற்ற தென்றன் மனனே.

11

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- கடல் கடைந்த விடம் கண்டத்தில் அடக்கியவர், அழற்றூணாய் நின்றவர், தாரகனைச் சங்கரித்தவர், திரிபுரங்களை எரித்தவர், மார்க்கண்டருக் கருளியவர், தக்க யாக சங்காரம் செய்தவர், மன்மதனை எரித்தவர், மாலுக்குச் சக்கரங் கொடுத்தவர் என்றிவ்வாறு தனித்தனி சிவமகா புராணங்களால் போற்றப்படுகின்ற பெருமானது பாதங்களே நமக்குப் புகலாவன.

குறிப்பு :- பதிகம் ஒவ்வொரு பாட்டினும் ஒவ்வொரு மாபுராணச் சரிதத்தை விரித்துப் போற்றுதலால் இது தசபுராணத் திருப்பதிகம் எனப்பட்டது.