பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்715

 

துக் கூறப்படுதல் காண்க. "கடுகிய.......தன்மம்" இது பாகன் இராவணனை நோக்கிக் கூறியது. "விடு விடு" இது இராவணன் பாகனை நோக்கி ஏவியது. நெடு நெடு - நெடுமுடி - நெடுந்தோள் - என, நெடிய ஆயினும் இற்று வீழ.

பொது - பாவநாசப் பதிகம்

IXதிருச்சிற்றம்பலம்

பண் - பழம்பஞ்சுரம்

பற்றற் றார்சேர் பழம் பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெம் முத்தமனை யுள்ளத் துள்ளே வைத்தேனே.

1

முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை
யந்திச் செவ்வான் படியானை யரக்க னாற்ற லழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிச்சேர்த்தி
யெந்தை பெம்மா னென்னெம்மா னென்பார் பாவ நாசமே.

11

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- பற்றற்றார்சேர் பழம்பதி என்பது முதலாகப் பல தலங்களிலும் வைத்துப் பாராட்டப்படுகின்ற இறைவரை என் உள்ளத்துள்ளே வைத்தேன்; தோளைக் குளிரத் தொழுதேன்; அவரை மறவேன். அவரை நினைந்தேனுக்கு உள்ளம் நிறைந்தது; அவரை அன்பி லணைத்து வைத்தேன்; விருப்பால் விழுங்கியிட்டேன். அம்முதல்வரைச் சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன்மாலை அடிசேர்த்தி "எந்தை பெம்மான்" என்று ஏத்துவார் பாவம் நாசமாம்.

குறிப்பு :- பாவநாசமே என முடித்துப் பாவங்கள் நாசமாவதற்குரிய வழிகளை, "நான் இவ்வாறு வழிபட்டேன்; யாவரும் வழிபடின் பாவம் நாசமாம்" என உபதேசித்தருளுகின்றமையால் இது பாவநாசத் திருப்பதிகம் எனப்படும்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பழம்பதி - திருப்புனவாயில் இப்பெயர் பெறும். இறைவர் பெயர் பழம்பாதி நாதர்; "பத்தர் தாம் பலர் பாடி நின்றாடும் பழம்பதி" (நம்பி - தேவா). ஊரும் இறைவர் பெயரால் வழங்கப்படுவது; "அவிநாசி" என்பதுபோல. தீண்டற் கரிய திருவுரு - இறைவரது பொது இயல்பு. திருப்பாசூரில் இறைவர் தீண்டாத் திருமேனி நாதராய் விளங்கும் சிறப்பும் குறிப்பு. வெற்றியூர் - வைப்புத் தலம். - (2) அணங்கு - தெய்வம். அணங்கு - பெண் எனக்கொண்டு பெண்ணினல்லாளாகிய அகிலாண்ட நாயகியாற் பூசிக்கப் பட்டவர் என்ற குறிப்புமாம். முளைத்த - இறைவர் முளைநாதர் எனப்படுவதும் குறிப்பு. மானக் கயிலை - மானம் - பெருமை. மதியைச் மாலையாகச் சுடரை - சுடர் - ஆகுபெயர். சூரியன். - (3) மதியங் கண்ணி - மதியை மாலையாகச் சூடீய. "மாதர்ப் பிறைக்கண்ணி யானை." ஞாயிறு - ஒருகோடி இளஞாயிறு போன்ற திருமேனியுடையவன். மருந்து - ஆகுபெயர். நெதி - செல்வம். - (4) உறந்தை - உறையூர். காண்பார் காணுங் கண்ணானை - காணும் பக்குவமுடையார்க்குக் கண்ணுள்ளே நின்று கண்டு காட்டுபவன். "காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின்" (சிவஞான போதம் - 1 - சூத்.); "கணக்கி லாத்திருக் கோல நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே" (கழுக் - பதி.) என்ற திருவாசகக் குறிப்பும் காண்க. - (5) தோளைக் குளிர - தோள் குளிர; (9) - (6) மாணிக்கம் - மருகலின் இறைவர் மாணிக்க வண்ணர் என்பதும் குறிப்பு. - (7) இராச சிங்கம் - "அரிமானேறு" (4). - (8) மணாளன் - "மறைக்காட் டுறையு மணாளன்" (தாண்.) - (10) பொதியில் -