யெண்ணி னல்லாற் கண்ணிலேன்; மற்றோர் களைகண் இல்லேன்; வஞ்சக்கள்வர் ஐவரையும் என்மேற் றரவறுத்தாய்;; அவர் வேண்டுங் காரிய மிங்காவதில்லை; ஒண்ணுளே வைத்த ஒன்பது வாசல் ஒக்க வடைக்குபோது உணரமாட்டேன்; பொய்யுரையாது, உன், பூவார்ந்த - பொய்யாத - பொன்னங் கழலடிக்கே போதுகின்றேன் என்று செய்துகொண்ட முத்தி விண்ணப்பம். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கண்ணிலேன் - வேறு யாரையும் எதனையும் எண்ணேன். களைகண் - துணை. ஒண்ணுளே - ஒர் உடலினுள்ளே. ஒன்றினுள்ளே என்பதன் மரூஉ. ஒன்பது வாசல் - கண் 2. காது 2. மூக்கு ஒட்டை 2. வாய் 1. மலவாயில் 1. சலவாயில் 1. என்ற ஒன்பது வாயில்கள். நவத்துவார மென்பர் வடவர். ஒக்க அடைக்கும்போது - சாவு வந்த காலத்தில். போது - போதின்கண். ஏழனுருபு விரிக்க. உணரமாட்டேன் - உன்னை உணரலாகாது நிற்பேன். ஒழிவேன். சாகுந் தறுவாயில் நினைக்கும் வரம் தரவேண்டுமென்பது நாயனார் வேண்டும் வரங்களுள் ஒன்று. "சாமன் றுரைக்கத் தகுதி கண்டாய்", "துஞ்சும்போது நின் னாமத் திருவெழுத் தஞ்சுந் தோன்ற வருளும்" புண்ணியம் என்பது ஈண்டுச் சிவதருமங்களின் பயன் குறித்தது. - (2) சிங்கமே - என்ற இதுகொண்டு இறைவர் சிங்க உருவமாய் எழுந்தருளி நாயனாரை விழுங்கினர் என்ற தோர் ஒவ்வாத வரலாறு கேட்கப்படுவதுபற்றி முன் உரைத்தவை பார்க்க. உன் வாயினுக்கே என்னாது உன் அடிக்கே என்றதும், தேவதேவே என்றதும், நஞ்சுண்டு சாவா மூவா என்றதுமாகிய இவையும் அவ்வரலாற்றின் பொருந்தாமையை மேலும் புலப்படுத்தும். - (3) பை - நச்சுப்பை. பளிக்குக் குழை - பளிங்குபோல் ஒளிவிடும் சங்கக்குழை. வஞ்சக் கள்வர் ஐவர் - ஐம் புலன்கள். என்மேற் றரவறுத்தாய் - என்னை ஏவல் கொள்ளும்படி வைத்தாய். அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை. இனி ஐம்புலன்களுக்கு ஆட்பட்டு இருக்க இசையமாட்டேன். நவமணிகள் தோற்றியதும் அரம்பையர் வந்ததுமாகிய வரலாறுகளின் குறிப்பும், இனி இவ்வுலகி லிருக்க லாற்றாத மன நிலையின் குறிப்புமாம். - (4) தெருளாதார் - உனது பெருமை உணராதார் - முப்புரவாணர். மருளாதார் - உலக மயக்கிற் படாத உத்தமர். அலர்மேலான் - பிரமன்; நீர்மேலான் - விட்டுணு; பாற்கடலில் பள்ளி கொள்வோன். ஐம்பூதங்களுள் நீரின் அதிதெய்வ மாவோன் என்றலுமாம். - (7) தேவார்ந்த - தெய்வத்தன்மை முற்றும் உடைய. - (8) கொய் - தளிர் - இலை. - (9) துன்னஞ்சேர் - தைத்த. துன்னம் - தையல். "துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது" (திருவா - சாழல்). தன் நனை - தனக்குரிய அரும்பு. தன் அடையாளமாகிய கொன்றை யரும்பை உணர்த்திற்று. அக்காரம் - அக்கு - சங்கு மணி. சங்குமணி கோத்த ஆரம்; உருத்திராக்க வடம் - எலும்புமாலை - என்றலுமாம். (10) ஒருவனையும் அல்லாது - உன்னை ஒருவனையே யன்றி மற்று ஒன்றும்; இருவரையும் மூவரையும் - வஞ்சக் கள்வர் ஐவரையும். (3). தலவிசேடம் :- திருப்புகலூர் - (16) முருக நாயனார் புராணத்திறுதியில் உரைக்கப்பட்டது. 1693. | வானவர்கண் மலர்மாரி மண்ணிறைய விண்ணுலகின் மேனிறைந்த வைந்துபே ரியவொலியும் விரிஞ்சன்முதல் யோனிகளா யினவெல்லா முண்ணிறைந்த பெருமகிழ்ச்சி தானிறைந்த சித்திரையிற் சதயமாந் திருநாளில். |
428 |