பக்கம் எண் :


796திருத்தொண்டர் புராணம்

 

களது மரபுச் சிறப்பு; மீனவன் - இங்கு நின்றசீர் நெடுமாறரைக் குறித்தது; அதிகாரி - மந்திரி என்ற பொருளில் வந்தது; மரபும் பெயரும் தொகை நூல் உணர்த்திற்று; அவற்றோடு சரித வரலாறும் திருத்தொண்டும் வகை நூல் வகுத்தோதிற்று; இவை விரித்தபடி விரிநூல் 1702 - 1705-லும் பிறாண்டும் கண்டு கொள்க.

1695. (இ-ள்.) வெளிப்படை. எடுத்துச் சொல்லப்பட்ட பழமையாகிய புகழினையுடைய நன்மைமிக்க பாண்டி நாட்டிலே, செந்நெல் நிரம்பிய வயல்களும் கரும்புப் பயிர்களின் பக்கத்தில் செறிவுடைய கமுகுகளுங் கொண்ட புற இடங்களும் உள்ள, நிலைபெற்ற வளப்பங்களையுடைய நகரம் மணமேற்குடி என்பதாகும்.

(வி-ரை.) பன்னு - பெரியோர்களால் எடுத்துச் சொல்லப்பட்ட.

தொல்புகழ் - "தொன்மைப் புகழ்" (969) என்றவிடத்துரைத்தவை பார்க்க.

செந்நெல் தீங்கரும்பு - துன்னுபூகம் என்பவற்றின் அடைமொழிகள், நெல்லின் சிறப்புவகையினையும், கரும்பின் சுவைத்திறனையும், கழுகுச்சோலையின் செறிவினையும் உணர்த்தின.

புறம்பணை - நகர் சூழ்ந்த புற இடம், புறம்பணை சூழ்ந்தது - மணமேற்குடி என்க.

வண்மையின் ஆர் வண்மை - வளப்பம், ஆர்தல் - நிறைதல், வண்மையினார் - வள்ளன்மையினால் மிக்கோர் என்று கொண்டு குடிச்சிறப்புக் கூறியதாகக் கொள்ளலுமாம். இச்சரிதமுடைய நாயனாரது குறிப்புமாம்.

இப்பாட்டினால் நாட்டுச் சிறப்பும் நகரச் சிறப்பும் குடிச் சிறப்பும் ஒருங்கே கூறியபடி காண்க.

1

1696.

அப்ப திக்கு முதல்வர்வன் றொண்டர்தாம்
ஒப்ப ரும்"பெரு நம்பி" யென் றோதிய
செப்ப ருஞ்சீர்க் குலச்சிறை யார்;திண்மை
வைப்பி னாற்றிருத் தொண்டின் வழாதவர்.

2

(இ-ள்.) அப்பதிக்கு.......குலச்சிறையார் - அந்த நகரத்துக்கு முதல்வர். வன்றொண்டப் பெருந்தகையார் ஒப்பற்ற "பெருநம்பி" என்று போற்றிய சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய குலச்சிறையார்; திண்மை...வாழதவர் - (அவர்) திணணிய தன்மையினால் திருத்தொண்டின் றிறநதினின்றும் சிறிதும் வழுவாதவர்.

(வி-ரை.) குலச்சிறையார் முதல்வர்; (அவர்) வழாதவர் - என்று கூட்டுக. முதல்வர் வழாதவர் - பெயர்ப் பயனிலைகள். பெயர்ப் பயனிலைகளால் முடித்தது திருத்தொண்டின் பயனாக வினையின்மையைக் குறிப்பாலுணர்த்திற்று. இப்புராண முழுமையும் இவ்வாறே முடிபு காட்டியதும் காண்க.

முதல்வர் - தலைவர் - "மணமேற்குடி மன்" என்ற வகைநூல் பொருளை விரித்தவாறு

பெருநம்பி என்று ஓதிய சீர் - திருத்தொண்டத் தொகையினுள் "பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்குமடியேன்" என்று போற்றிய சிறப்பு. பெருநம்பி - குலத்திலைமைப் பெயர். "பெருநம்பிகுலோத்பவரான குலச்சிறை யாண்டாரும்" (தக்கயாகப் பரணி யுரை). இவர் குலம் திருக்கணக்கர் குலம் என்று அம்மரபுப் புராணம் கூறும்.

ஓதுதல் - எடுத்துப் போற்றுதல். "ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது" (பிள் - தேவா - நமச்சிவாயத் திருப்பதிகம் -1).