பக்கம் எண் :


884திருத்தொண்டர் புராணம்

 

யின் தொகைப் பொருளாம். "துயர் வந்தடும்போது நெஞ்ச மென்பாய்...தளராது வந்தி - ஈசனுக்கே" (1) என்று தொடங்கி, "நெய்யாடிதன் றிறமே கேளாழி நெஞ்சே கிளர்ந்து" (20) என்று முடித்தது காண்க.

இரட்டைமணிமாலைப் பாட்டுக் குறிப்பு - பிற்சேர்க்கையிற் காண்க.

1770.

 கண்டவர் வியப்புற் றஞ்சிக் கையகன் றோடு வார்கள்
 கொண்டதோர் வேடத் தன்மை யுள்ளவா கூறக் கேட்டே
"அண்டர்நா யகனா ரென்னை யறிவரே லறியா வாய்மை
 யெண்டிசை மாக்க ளுக்கியா னெவ்வுரு வாயென்?" என்பார்,

54

1771.

வடதிசைத் தேய மெல்லா மனத்தினுங் கடிது சென்று,
தொடையவி ழிதழி மாலைச் சூலபா ணியனார் மேவும்
படரொளிக் கயிலை வெற்பின் பாங்கணைந் தாங்குக் காலி
னடையினைத் தவிர்ந்து பார்மேற் றலையினா னடந்து சென்றார்.

55

1770. (இ-ள்.) கொண்டதோர் வேடத்தன்மை - தாம் விரும்பிவேண்டிப் பெற்றுக்கொண்ட ஒப்பற்ற (பேயாய) திருவேடத்தின் தன்மையை; கண்டவர்...ஓடுவார்கள் - கண்டவர்கள் வியப்படைந்து அச்சமுற்று அங்கு நின்றும் நீங்கி ஓடுவார்களாகி; உள்ளவா கூறக்கேட்டே - அவ்வேடத்தினைத் தாம் கண்டவாறே உள்ளபடி சொல்லக்கேட்டே; "அண்டர் நாயகனார்...என்?" என்பார் - எல்லாத் தேவர்களுக்கும் நாயகராகிய சிவபெருமான் என்னை அறிவாராகில். உண்மையறியா நிலையில் உள்ள எண் திசையின் ஐயறிவுடைய மாக்களுக்கு நான் எந்தவுருவத்தைத் தாங்கினதாகக் காணப்பட்டாலும் அதனாலாவதென்னை? ஒன்றுமில்லை" என்பாராய்;

54

1771. (இ-ள்.) வடதிசை...சென்று - வடதிசையில் உள்ள தேசங்களையெல்லாம் மனவேகத்தின் மேலும் அதிகவேகமாய்க் கடந்துபோய்; தொடையவிழ்...பாங்கு அணைந்து - தொடைபோல அலர்கின்ற கொன்றைமாலை யணிந்த சூலமேந்திய திருக்கையினையுடைய சிவபெருமான் பொருந்தி எழுந்தருளியிருக்கும் படரும் ஒளியினையுடைய திருக்கயிலை மலையில் பாங்கு அணைந்து; ஆங்கு...சென்றார் - அங்குக் காலால் நடந்து செல்லுதலை விட்டு நிலத்தின்மேல் தலையினால் நடந்து சென்றனர்.

55

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1770. (வி-ரை.) கண்டவர் - ஓடுவார்களாகிக் கூற என்று கூட்டுக. கண்டவர் - அங்கு நின்ற இருதிறச் சுற்றத்தாரும் வணிகனும் பிறரும்.

கையகன்று - அவ்விடத்தை விட்டு நீங்கி. கை - இடம் என்ற பொருளில் வந்தது. கைகூடும் என்பதுபோலக் கை என்பது பகுதியின் பொருளை உறுதிப்படுத்த வருவதோர் முன் ஒட்டுமொழி என்பதுமாம்.

வியப்பு உற்று அஞ்சி ஓடுவார்கள் - கண்டவர்களது மனத்தில் முதலில் எழுந்தது வியப்பு; அது அச்சத்தை விளைத்தது; அச்சம் உண்டாகவே தம்மைப் பற்ற வரும் அபாயத்தினின்றுங் தப்புவார்கள் போல அவ்விடத்தை விட்டு நீங்கி ஓடுவாராயினார்கள்.

கொண்டது - வேண்டிப் பெற்றுக் கொண்டது. "பேய்வடி வடியே னுக்குப் பாங்குற வேண்டும் என்று பரமர் தாள்பரவி" (1765) என்றதும், "மற்றிப் பெருமைசேர் வடிவும் வேண்டிப் பெற்றனள் (1774) என்பதும் காண்க.

உள்ளவர் - தாம் தாம் கண்டு தத்தம் மனத்திற் கொண்டுள்ளபடி. தன்மை உள்ளவாறு என்றுரைப்பபாருமுண்டு . அது பொருந்தாமை அறிக. அவ்வேடத்தின்