கலை...கண்ணுதல் - திங்கட்கண்ணியும், நுதற்கண்ணும் இறைவரது அருளின் திறங்களைக் காட்டின. திங்கட்கண்ணி - பிறையாகிய கொண்ட மாலை. திருக்கண் நோக்கு உற்றது - பார்வை சேர்ந்தது. உமையம்மையார் பார்த்தருளினர் என்க. உமையம்மையார் இறைவரது அருள். அம்மையப்பர் இருவருள் உமை அம்மையாரது நோக்கம் முதலில் அம்மையார்மேல் உற்றது என்பது அருள் சேர்ந்தது என்பதாம். "அவன் அருளாலே அவன்றாள் வணங்ங்கி" என்றபடி அருள் சேர்ந்த பின்னரே சிவனைக் காணுதல் கூடுமாதலின் முதலில் அருட்சத்தி பதிந்தது என்க. அன்றே - அப்போதே. அசையென்பாரு முண்டு. 56 1773. | அம்பிகை திருவுள் ளத்தி னதிசயித் தருளித் தாழ்ந்து தம்பெரு மானை நோக்கித் "தலையினா னடந்திங் கேறும் எம்பெரு மானோ ரெற்பின் யாக்கையன் பென்னே?" யென்ன, நம்பெரு மாட்டிக் கங்கு நாயக னருளிச் செய்வான். |
57 1774. | "வருமிவ ணம்மைப் பேணு மம்மைகா ணுமையே! மற்றிப் பெருமைசேர் வடிவும் வேண்டிப் பெற்றன" ளென்று, பின்னை யருகுவந் தணைய நோக்கி, "யம்மையே!" யென்னுஞ் செம்மை யொருமொழி யுலக மெல்லா முய்யவே யருளிச் செய்தார். |
58 1773. (இ-ள்.) அம்பிகை...நோக்கி - பார்வதியம்மையார் தமது திருவுள்ளத்தில் அதிசயம் கொண்டருளி, விரும்பித், தம் பெருமானை நோக்கி; "தலையினால்...என்னே?" என்ன - "தலையினாலே நடந்து இம்மலைமேல் ஏறிவரும் ஓர் எலும்பு உடம்பு பெற்ற இதன் அன்பு என்னே?" என்று கேட்க; நம் பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான் - நம் பெருமாட்டியாகிய பார்வதியம்மையாருக்கு நாயகர் அருள்செய்வாராகி, 57 1774. (இ-ள்.) வெளிப்படை. "உமையே! (நீ சொல்லிய அவ்வாறு) வரும் இவள் நம்மைப் பேணுகின்ற அம்மையே யாவள்; மற்றும், இந்தப் பேய்வடிவாகிய பெருமைசேர் வடிவத்தையும் நம்மிடம் வேண்டிப் பெற்றுக்கொண்டனள்" என்று சொல்லியதுடன், பின்பு அம்மையார் பக்கத்தில் வந்து அணையவே, அவரை நோக்கி "நம் அம்மையே!" என்கின்ற செம்மைதரும் ஒப்பற்ற ஒருமொழியினை உலகமெல்லாம் உய்யும்பொருட்டே அருளிச் செய்தார். 58 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. 1773. (வி-ரை.) அதிசயித் தருளி - ஒருசொல் நீர்மைத்தாய் அதிசயங் கொண்டு என்ற பொருள் தந்து நின்றது. "திருக்கண்ணோக் குற்ற" தனால் தாம் கண்டதோர் அதிசயத்தை வினவுகின்றார். "அதிசயம் கண்டாமே" திருவாசகம். தாழ்ந்து - தாழ்தல் - விரும்புதல். இறைவனைப் பணிந்து என்றலுமாம். எம்பெருமான் - விளி. ஏறும் - ஏற்பின் யாக்கை - என்றும், ஓர் யாக்கை என்றும் கூட்டுக. ஓர் - தனித்தன்மையுடைய. இதுவரை காணப்படாத ஒன்று என்பது குறிப்பு. ஓர் எற்பின் யாக்கை - "எற்புடம்பே யாக" (1766) என்ற பேய்வடிவம். இன் - இனிய என்றலுமாங். ஓர்தல் - நினைத்தல் என்றலுமாம். அன்பு என்னே? - வடிவோ எலும்பு யாக்கையாகிய பேய் வடிவம்; ஆயின் செயல், கயிலைத் திருமலையின்மேல் தலையால் ஏறி வழிபடும் அதிசயம் செயல், |