பக்கம் எண் :


902திருத்தொண்டர் புராணம்

 

பதிகக் குறிப்பு :- (1) எட்டி - இலவம் - ஈகை - சூரை - காரை - கள்ளி - இவை சுடுகாடாகிய பாலையின் கருப்பொருள்களாகிய மரமுஞ் செடிகளும். குடர் கௌவப்பட்ட பிணங்கள் - கழுகுகளாற் குடர் கௌவப்பட்ட பிணங்கள். பறைபோல் - பரந்து வட்ட வடிவமுடைமை உவமம். பேய் முழவங் கொட்டக் கூளி பாட என்க. கூளி - பேயின் ஒருவகை. - (2) நிணம்தான் உருகி - தசையின் இழுது தீயினால் உருகி. கழுது குடர் கௌவப்படுதல் (1) , நிணம் உருகி நிலத்துப்பாய்தல் (2), புட்கள் பொதுத்த புலாலுடைமை (3), என்றிவ்வாறு வருவன அப்பிணங்களைப் பேய்கள் மாந்தும் தருணங் குறித்தன. இவ்வாறன்றி உள்ள முழுப் பிணங்களைப் பேய் பற்றப் பின்வாங்குவன என்பது "செத்த பிணத்தைத் தெளியா தொருபேய்...கடக்கப் பாய்ந்து போய் (4) என்பதனாலும் அறிக, அணங்கு - அணங்காடும் (3) பொதுத்த - கொத்தித் தின்னுதலால் பொத்தல் செய்த. ஆந்தை - கூகை - ஊமன் - பாலையின் கருப்பொருள்களாகிய புள் வகைகள். கதித்து - பெருங் குரலால் கூவ. - (4) செத்த பிணம் - இயற்கை யடைமொழி - செத்தாரது பிணம் என்றலுமாம். தெளியாது - செத்ததென்று தெளியாது. பத்தல் வயிறு - ஒட்டி உலர்ந்து உள் வற்றிய வயிறு. - (5) முள்ளி - முள் மரம் - வேல் முதலியன. பியல் - சிறுபுறம். - (6) தாளிப்பாணை - நீண்டு அகலமுடைய இலைகளையுடைய பனை வகை. கூளி - பேய் வகை. -(7) தொந்தி - கிளறி - புழுதிபட்டு, தடவி - அரித்துத் தேடி. புழுக்கு - சோறு - உணவு. சிரமம் - துன்பம். முறைமை - தாளம் முதலிய ஒற்றுமை. இலயம் -(8) வேய் - மூங்கில் வகை. திணை மயக்கத்தினாற் பாலையிற் காண வருவது. அணங்கும் - பிணங்கி ஆடும். மாயன் - மாயையின் முதல்வன் சிவன். - (9) கடுவன் - பெண் குரங்கு, மூங்கிலைப்போலத் திணைமயக்கத்தினால் பாலைக்கு வந்த மாக்களின் வகை. கழையும் (மூங்கிலும்) உடன் கூறியது காண்க. கழுகு - பாலைப் புள். பிணங்களைக் கழுகு முன்னும், பேய் பின்னுமாய் உண்பன என்று குறிக்க அவ்வரிசையில் வைத்து எண் உம்மையும் தந்தோதினார். - (10) பேய்களின் பல வடிவங்களும் வகைகளும் குறித்தார். - (11) அருளாலே பாடல் - இத்திருப்பாடல்கள் திருவருளே துணையாக எழுந்தன என்பது. குறிப்பு - நாட்டுச் சுடலை யியல்பு காட்டி நாதன் ஆடும் சங்காரப் பெருஞ்சுடலையினை நயந்தபடி என்க. "தாதையா ரெதிர்தொழுவா, ரவர்சார்பு கண்டருளித் திருத்தோணி யமர்ந்தருளிப், பவபாச மறுத்தவர்தம் பாதங்கணினைவுற்றார்" (திருஞான - புரா- 879) என்று கருத்துக் காண்க.

1781.

மடுத்தபுனல் வேணியினா "ரம்மை" யென மதுரமொழி
கொடுத்தருளப் பெற்றாரைக், குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீ ழென்றுமிருக் கின்றாரை
யடுத்தபெருஞ் சீர்பரவ லாரளவா யினதம்மா?

65

(இ-ள்.) மடுத்த புனல்......பெற்றாரை - கங்கை வெள்ளத்தைத் தங்க வைத்த சடையினையுடைய சிவபெருமான் "அம்மையே!" என்று இனிய மொழியினைக் கொடுத்தருளும் பேறுபெற்றவரை; குலவிய..... இருக்கின்றாரை - அண்டமுத விளங்கிய அவரது திருக்கூத்தில் அவரது எடுத்தருளுகின்ற சேவடியின் கீழே என்றும் நீங்காது எழுந்தருளியிருக்கப் பெற்றவரை; அடுத்த......ஆர் அளவாயினது? - பொருந்திய பெருஞ் சிறப்பினை எடுத்துப் போற்றும் செயல் யாவருடைய அளவுள்ளே படுவது? ஒருவரளவிலும் படாது; அம்மா - ஈது அற்புதம்;