பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்983

 

பாய்தல் - கதுமென வெளிப்படுதல். இழிதல் இடைவிடாது பெய்தல்; வழிதல்.

உரை குழறுதலும், உரோம புளகம் பொலிதலும் அன்பு முதிர்ந்தபோது உளவாகும் மெய்ப்பாடுகளாம். வீழ்ந்து - அடியற்ற மரம் சாய்ந்து வீழ்வதுபோல் உடல் வசமற்று வீழ்ந்து.

பூண்டார் - அடிகளைக் கைகளாற்பற்றித் தலைபொருந்தவைத்து அணிந்து கொண்டார். "பொன்ன டிக்கம லங்களிற் பொருந்தமுன் வீழ்ந்தார்" (திருஞான - புரா - 671); "புண்டரிகச் சேவடிக்கீழ்ப் பொருந்தநில முறவிழுந்தார்" (மேற்படி 729), "சரண கமலம்பற்றி" (மேற்படி 730) முதலியவை காண்க.

17

1800.

மற்றவரை யெதிர்வணங்கி வாகீச ரெடுத்தருள
அற்றவர்க ளருநிதியம் பெற்றார்போ லருமறையோர்
முற்றவுளங் களிகூர முன்னின்று கூத்தாடி
உற்றவிருப் புடன்சூழ வோடினார் பாடினார்.

18

(இ-ள்.) மற்றவரை...எடுத்தருள - அவ்வாறு வீழ்ந்து திருவடிபூண்டுகிடந்த அப்பூதியாரைத் திருநாவுக்கரசர் தாமும் எதிர்வணங்கி அவரை எடுத்தருளவே; அருமறையோர் - அரிய வேதியராகிய அப்பூதியார்; அற்றவர்கள் அருநிதியம் பெற்றாற்போல் - வறியவர்களாயுள்ளோர் தேடிய பெருநிதியத்தைப் பெற்றது போல; முற்ற...பாடினார் - மனமுழுதும் பெருமகிழ்ச்சி கூர்ந்து, அவர் முன்பு நின்று ஆனந்தக்கூத்தாடி மிகுந்த விருப்பத்துடனே அவரைச்சூழ்ந்து ஓடினார்; பாடினார்.

(வி-ரை.) முன் பாட்டிற் கூறியவை தமது மனத்தெழுந்த முயற்சியில்லாமலே தாமாகவே விளைந்த மெய்ப்பாடுகள்; Involuntary என்பர் நவீனர். இப்பாட்டிற் கூறியவை அறிந்து நிகழ்த்திய செயல்கள். மற்று வினைமாற்றின்கண் வந்தது.

எதிர்வணங்கி - அவர் வீழ்ந்து வணங்கியதுபோலத் தாமும் அவரைவணங்கி, எதிர்வணக்கமாவது அவ்வணக்கம் போலத் தாமும் செய்தல். "கழல் பணிய...பணியாமுன் பணியும்" (1792) என்றது காண்க. முன்னர் நிகழ்ந்தவை ஓருவரை ஒருவர் முன்பு வடிவு காணாராயினும் அடியார் வேடம் என்ற மாத்திரையாற் செய்த பொது வணக்கம். இங்கு நிகழ்ந்தது ஒருவரிலொருவர் அன்பு விளங்கக் கண்டவிடத்துச் செய்த சிறப்பு வணக்கம்.

வணங்கி எடுத்தருள - கீழ்வீழ்ந்து வணங்கியவரை எடுத்தருளுவது முதற்காரியமாயிருக்க அதன் முன்பு எதிர்வணக்கத்தைச் செய்து பின் எடுத்தருளியது அன்புக்குத் தாழ்வது தலையாய கடமை ளன்ற உண்மை ஒழுக்கத்தில் நின்றமை குறித்தது.

அற்றவர்கள் - பொருளில்லாத வறியோர். அருநிதியம் - தாம் எவ்வகையாற் றேடினும் பெறுதற்கரியதாயும் நிதியமெல்லாவற்றினும் அரியதாயும் உள்ளது. பெரும்புதையல் கண்டெடுத்தாற்போல. உளம் முற்றக் களிகூர - என்றது உள்ளம் எத்துணைக் களிப்புக் கொள்ளுமோ அத்துணையும் நிறைதல். இதனையே தமது வாழ்வின் பயனாகிய உறுதிப் பொருளாகக் கொண்டு அப்பூதியார் தவஞ் செய் திருந்தாராதலின், வாழ்க்கையின் பயன் கைகூடியபோது பெறவேண்டிய பேறு வேறின்மையின் அதுகாரணமாய் நிகழும் களிகூர்தலும் முற்றுப்பெற்றதாயிற்று.

முன் நின்று கூத்தாடி - ஆசையொடும் அரனடியா ரடியாரை யடைந்திட்டு.....கூசிமொழிந் தருண்ஞானக் குறியினின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தரடித்திரியே" (சித்தி - 12- 2) என்றது சாத்திரம். குருவருள் பெற்று, அணைந்தோர் தன்மையின் முற்றுப்பேறுடையராய்ச் சீவன்மூத்த நிலையினை அடைந்தவர் அப்