தாயார் பால் வைத்து - பால் - பாலாக; தாயார்பாற் கொடுத்தான் என்னாது வைத்தான் என்றார்; வீழ்வானாகிய நிலையில் அவனது செயல் நிகழ்ந்த தாதலின், அவன் உரியபடி கொடுக்கவும் அம்மையார் வாங்கவும் செயல் முற்றுப் பேறுபெற இயலாமையால் வீழ்வான் - வைத்து வீழ்ந்தான் என்றார். முன்னர்த் "தெருமந்து, செழுங்குருத்தைத், தாயர்கரத் தினினீட்டித் தளர்ந்துதனைத் தழனாக, மேயபடி யுரைசெய்யான் விழக்கண்டு" (1471) என்றதும் காண்க. முன்னர்த் "தாயர்கரத்தினி னீட்டி" என்றது இங்குத் தாயார்பால் வைத்து என்றதனோடு மாறுபடுமே? என்னில் மாறுபடாதென்க. என்னை? வீழும் நிலையில் கையினி னீட்டிய அவன் அவர் வாங்குவதன்முன் நிலை தடுமாறி வீழ்வான் அவரிடத்து வைத்து வீழ்ந்து விட்டனன் என்க. வைத்து வீழ்ந்தான் - தன் பணியை நிறைவாக்கி முடித்தனன் என்பது, அராவுதறி வீழ்த்து - என்று - ஒடி வந்தான் (1807), என்று - புக்கான் (1808), கருகித்தீந்து குழறி - ஆவி - விடக்கொண்டு - வீழ்வான் - வைத்து வீழ்ந்தான் (1809) என்று இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்பாக்கி முடித்துக் கொள்க. 27 1810. | தளர்ந்துவீழ் மகனைக் கண்டு, தாயருந் தந்தை யாரும் உளம்பதைத் துற்று நோக்கி, யுதிரஞ்சோர் வடிவு மேனி விளங்கிய குறியுங் கண்டு, "விடத்தினால் வீந்தா"னென்று, துளங்குத லின்றித் தொண்ட ரமுதுசெய் வதற்குச் சூழ்வார், |
28 1811. | பெறலரும் புதல்வன் றன்னைப் பாயினுட் பெய்து மூடிப், புறமனை முன்றிற் பாங்கோர் புடையினில் மறைத்துவைத்தே, "அறிவிது தெரியா வண்ண மமுதுசெய் விப்போ" மென்று விறலுடைத் தொண்ட னார்பால் விருப்பொடு விரைந்து வந்தார். |
29 1810. (இ-ள்.) தாயரும் தந்தையாரும் - தாயாரும் தந்தையாரும்; தளர்ந்து வீழ் மகனைக் கண்டு - மேற்கூறியபடி தளர்ச்சி யடைந்து வீழ்ந்த மூத்த திருநாவுக்கரசு என்ற மகனைக் கண்டு; உளம் பதைத்து - உள்ளம் பதைப்பை யடைந்து; உற்று நோக்கி - அணுகிக் காரணத்தைக் காணக் கூர்ந்து நோக்கி; உதிரம்...கண்டு. உதிரம் சோர்ந்த வடிவத்தினையும் மேனியில் விளங்கிய பிற குறிகளையும் கண்டு; "விடத்தினால் வீந்தான்" என்று - "விடந் தீண்டியதனால் இறந்தான்" என்று துணிந்து கொண்டு; துளங்குதல்...சூழ்வார் - சிறிதும் மனத்துளக்கம் இல்லாமல், அடியவர் அமுது செய்வதற்கேற்ற உபாயத்தைத் தெரிந்து செய்வாராகி; 27 1811. (இ-ள்.) பெறல் அரும்...மூடி - பெறுதற்கரிய புதல்வனைப் பாயினுட் பொதிந்து மூடி; புறமனை...வைத்தே - மனையின் புறத்தின் முற்றத்தினிடத்து ஒரு புடையில் மறைத்து வைத்தே; "அற இது...செய்விப்போம்" என்று - "இது சிறிதும் தெரியாத வண்ணமாக அவரை நாம் அமுது செய்விப்போமாக" என்று துணிந்து உறுதிகொண்டு; விறலுடை...வந்தார் - விறலுடைய தொண்டராகிய திருநாவுக்கரசரை நோக்கி விருப்பினோடும் விரைந்து வந்தார். 26 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1810. (வி-ரை.) தாயரும் தந்தையாரும் - அடியவரைத் திருவமுது செய்வித்துப் பூசிக்கும் பணியில் முதன்மைநிலை இங்குத் தாயார்பால் நின்றமை குறிக்க அவரை முன்வைத்துக் கூறினார். முன் "தாய் தந்தை" (1806) என்றதும் ஆண்டுரைத்தவையும் சிந்திக்க; அங்குக் கூறிய திருப்பணியில் ஏவியநிலை; இங்குக்கூறு |