பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்997

 

கித் துணிவதன் முன்னர் முதற்கண் உண்டாகிய நிகழ்ச்சியாதலின் இதனோடு முரண்படாமை உய்த்துணர்ந்து கொள்க.

சூழ்வார் - சூழ்தல் - ஆராய்த்து தகுதியானவற்றைச் செய்தல்; சூழ்வாராகி முற்றெச்சம். சூழ்வார் - பெய்து - மூடி - வைத்தே - என்று - வந்தார் - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.

1811. (வி-ரை.) பெறலரும்புதல்வன் - முன்பாட்டுக்களிலும் மேல் 1818-லும் கூறும் அவனுடைய பெருமைகள் எல்லாம் குறிக்கப் பெறலரும் என்றார். பாயினுள் - பெய்தல் - மூடுதல் - புறமனை முன்றிலின் பாங்கு ஓர்புடையினின் வைத்தல் மறைத்து வைத்தல் என்ற இச்செயல்கள் ஒவ்வொன்றும் அத்தாயர் தந்தையார்களது அன்பின் உறைப்பினையும், உண்மை தெளிந்த வுணர்வின் சீலச்செம்மை ஒழுக்கத்தினையும் சிறக்க உணர்த்தின. ஏனையோக்கு இவை ஒரு சிறிதும் இயலாமையும் கருதுக. சிவன்பாலன்புச் செயல்களின் முன்னர் உலக மாயா காரியங்கள் யாவையும் ஒதுக்கி வைக்கத்தக்கன என்ற உண்மை விளக்கப்பட்டதும் காண்க.

அற - ஒரு சிறிதும். இது - மகன் விடத்தினால் வீந்ததும் தாம் அவனுடலை மறைத்து வைத்ததும் முதலிய இவற்றின் தொகுதி. புற நிகழ்ச்சிகளேயன்றித் தம் மன நிகழ்ச்சிகளும் குறிக்கப்பட்டன.

"இது அற தெரியாவண்ணம் அமுது செய்விப்போம்" என்று இது அவர்கள் தொண்டரை அமுது செய்வித்தற்குச் சூழ்ந்து செய்துகொண்ட முடிபு. தெரியா வண்ணம் - புறத்திற் றோற்றாதபடி. சாவு நிகழ்ந்த மனையில் ஆசௌச முறைகள் கையாளப்படுதலான், இவ்வாறு நல்விருந்து அமுது செய்வித்தல் முதலியவை கூடா என்பது ஒழுக்க நூலுள் விதித்த மரபு. "அழலோம்பு மப்பூதி" (தேவா) என்றும், "அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் (1466) என்றும் சிறப்பிக்கப்பட்ட வைதிக ஒழுக்கமுடைய அந்தணர் பெருமானாகிய அப்பூதியார், இவ்வாறு அன்று அந்நிலையில் அடியவரை அமுது செய்விக்கத் துணிந்தமை அவ்வொழுக்கத்துக்கு மாறுபாடன்றோ? எனின், அன்று; என்னை? அவ்விதிகள் எல்லாம் உலக நிலை நிறுத்தல் என்னும் பயனளவே தருவன; இங்கு மேற்கொண்டது உலகிறந்த நிலையில் அவற்றின் மேம்பட்டனவாய் உயிர்க்குறுதிதரும் சிவனடிமைத் திறத்தின் நிகழ்ந்தன. உலக வொழுக்க விதிகள் இவற்றின்முன் நில்லாவதலின் அவற்றைக் கொண்டு சிவனடிமைப் பண்பின் உறைப்பின் நிகழ்ச்சிகளை அளக்க முயலுதல் அளவை மாறுபாடென் றொழிக. இதுஅற - இந்நிலை தீரும்படி என்ற குறிப்பும் காண்க.

விறல் - மறைப்பினும் மனத்தினுட் புகுந்து அறிந்து கொள்ளும் தெய்வவிறலும், சிவனருளால் உயிரை மீட்பிக்கும் விறலும் உடையார் என்பது குறிப்பு. "இது வீடும் வேண்டா விறல்" (143) உடைமையினால் வருவதென்க.

விருப்பொடு விரைந்து வந்தார் - விருப்பொடு - புதல்வன் செய்தி முற்றுக் மறந்து மனத்தினுள் அடியாரை அமுது செய்விக்கும் விருப்பமே நிறைந்த நிலையில். விரைதல் - அடியவரைப் பசி தீர்த்தலின் விரைவு. "நாதன்ற னடியாரைப் பசி தீர்ப்பேனென" (1734) என்று அம்மையார் ஒரு மாங்கனியுடன் அமுது செய்வித்தமை கருதுக. "காலந்தாழ்க் கின்ற தென்றே...அணையவைத்து என்று மேல்வரும் பாட்டிற் கூறுதல் காண்க.

வந்தார் - புதல்வனை மறைத்து வைத்த இடத்தினின்றும் தொண்ட ரெழுந்தருளியிருந்த இடத்தை நோக்கிவந்தார்.

29