பக்கம் எண் :


998திருத்தொண்டர் புராணம்

 

1812.

கடிதுவந் "தமுது செய்யக் காலந்தாழ்க் கின்ற"தென்றே
அடிசிலுங் கறியு மெல்லா மழகுற வணைய வைத்துப்,
படியில்சீர்த்தொண்ட னார்முன் பணிந்தெழுந் "தமுதுசெய்தெங்
குடிமுழு துய்யக் கொள்வீ" ரென்றவர் கூறக் கேட்டு,

30

1813.

அருந்தவ ரெழுந்து செய்ய வடியிணை விளக்கி, வேறோர்
திருந்து மாசனத்தி லேறிப், பரிகலந் திருத்து முன்னர்,
இருந்து வெண் ணீறு சாத்தி யியல்புடை யிருவ ருக்கும்
பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கு மளிக்கும் போழ்தில்,

31

1814.

 ஆதிநான் மறைநூல் வாய்மை யப்பூதி யாரை நோக்கிக்
"காதலா லிவர்க்கு மூத்த சேயையுங் காட்டு முன்னே
 மேதகு பூதி சாத்த" வென்றலும் விளைந்த தன்மை
 யாதுமொன் ருரையா "ரிப்போ திங்கவ னுதவா" னென்றார்.

32

1812. (இ-ள்.) கடிதுவந்து - விரைவாக வந்து; அமுது...என்றே - அமுது செய்யக்காலதாமதம் நேரிடுகின்றதென்று உட்கொண்டு; அடிசிலும்...வைத்து - அடிசிலும் கறிகளும் முதலிய எல்லாவற்றையும் அணிபெற ஒழுங்காகப் பக்கத்தில் அமைத்துக்கொண்டு அதன்பின்; படியில்....கூற - ஒப்பற்ற சிறப்புடைய தொண்டர்பெருமான் றிருமுன்பு விழுந்து பணிந்து எழுந்து நின்று, "திருவமுது செய்து எமது குடிமுழுதும் உய்யும்படி ஆட்கொண்டருள வேண்டும்" என்று அவர் சொல்ல; கேட்டு - (திருநாவுக்கரசர்) அதனைக் கேட்டு,

30

1813. (இ-ள்.) அருந்தவர்...ஏறி - அருந்தவராகிய அவர் எழுந்து செம்மை பொருந்திய திருவடிகளை விளக்கிக்கொண்டு மற்றொரு திருந்தும் ஆசனத்தில் ஏறி; பரிகலம் திருத்து முன்னர் - அவர்கள் பரிகலத்தைத் திருத்தி விதிப்படி அமைப்பதற்கு முன்னர்; இருந்து...போழ்தில் - அந்த ஆசனத்தில் அமர்ந்து தாம் திருவெண்ணீற்றினைச் சாத்தி, இயல்பின் நின்ற அப்பூதியாருக்கும்அவர் மனைவியார்க்கும் பொருந்திய திருநீற்றினை அளித்துப், புதல்வர்களுக்கும் திருநீற்றினை அளிக்கும்போது,

31

1814. (இ-ள்.) ஆதி....நோக்கி - ஆதி நான்மறைகளினும் நூல்களினும் பயின்ற வாய்மைச் சீலமுடைய அப்பூதியாரை நோக்கி; காதலால்...என்றலும் - காதலினாலே இவர்க்கு மூத்த பிள்ளையையும் முன்னே மேதகு திருநீறு சாத்துதற்குக் காட்டுவீராக!" என்று அரசுகள் சொல்லவும்; விளைந்த...என்றார் - நிகழ்ந்த செயல்களொன்றினையும் சிறிதும் வெளிப்பட எடுத்து உரையாதவராகி "இப்போது இங்கு அவன் உதவமாட்டான்" என்று சொன்னார்.

32

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1812. (வி-ரை.) கடிது வந்து - என்றே - எல்லாம் அணையவைத்து - "தொண்டனார்பால் - வந்தார்" என முன்பாட்டிற் கூறியது, புறமனை முன்றிற் பாங்கோர் புடையினின்றும் தொண்டரை நோக்கி வந்தமை குறித்தது. இங்கு வந்து என்றது மனையினுள் அடிசில் அமைத்த இடத்துக்கு வந்தமை குறித்தது.

"அமுது.....தாழ்க்கின்றது" என்றே - அரசுகளைக் கண்டுகொண்டு பின் இசைவு பெற்று அறுசுவை அமுது ஆக்கவும், பின்னர்ப் புதல்வனது நிகழ்ச்சியமையவும், என்றிவ்வாறு பலவாற்றாலும் நெடுநேரம் சென்று விட்டமையால் மேலும் காலத்