பக்கம் எண் :


100திருத்தொண்டர் புராணம்

 

ஈறின்றி எழும் - முடிவில்லாது எழுவதாவது ஒரு திருப்பதிகத்தினுள் ஒரு பாசுரம் முடிந்தவுடனே அடுத்த பாடல் தொடர்ந்தும், ஒரு பதிகம் முடிந்த உடனே மற்றொரு பதிகம் தொடர்ந்தும் முன் நினைவிலிருந்து சொல்வதுபோல வெளிவருதல். 1 இவ்வாறு எப்போதும் பதிகங்கள் பாடியருளிக்கொண்டே யிருந்தனராதலின் நாயனார் 49000 திருப்பதிகங்கள் பாடினர் என்பது வரலாறு. "ஏழெழுநூ றிரும்பனுவ லீன்றவன் றிருநாவினுக் கரசன்" (நம்பிகள் - திரு நின்றியூர்), "பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி" (நம்பியாண்டார் நம்பி - திருவேகாதசமாலை) என்பன காண்க. பனுவல் - பாட்டு என்று கொண்டு, இதற்கு 4900 பதிகங்கள் என்பாருமுண்டு.

கையில் திகழும் உழவாரமுடன் - நாயனாரது திருவடையாளப்படை உழகாரமென்பர். "ஏரின் சிவபோக மிங்கிவர்க்கே யென்னவுழ, வாரங்கொள் செங்கையர் தாள் வாரம்வைப்ப தெந்நாளோ" என்று தாயுமானாரும, "உழவாரத்திண் படையறாத் திருக்கரமும்" என்று எமது மாதவச் சிவஞான முனிவரரும் துதித்தனர்.

கைத்தொண்டு - என்றதனால் மெய்யினாற் செய்யும் திருத் தொண்டும், கலந்து - என்றதனால் வாக்கினாற் செய்யும் திருத் தொண்டும், கசிந்தனர் என்றதனால் மனத்தொண்டும் குறிக்கப்பட்டன. கலந்து என்பது வாக்கு முதலிய புறக் கரணங்களின் செயலையும், கசிந்து என்பது மனம் முதலிய உட்கரணங்களின் செயலையும் குறித்தன.

தியான உணர்வு - திருவாசக வாக்கு - உழவாரக்கை - என்பவற்றால் தொண்டு செய்யுங் கருவியும் கரணங்களும் குறிக்கப்பட்டன. தொண்டு - கலந்து - கசிந்தனர் - என்பன அவற்றாற் (எதிர் நிரனிறையாக) செய்த தொண்டினையும், அனுபவப்பயனையும் குறித்தன. இந்நிலையினையே "அருந்தவம்" என்று 1134-ல் விரித்தனார்.

கைக்கொண்டு - என்பதும், கைகொண்டு கசிந்து கலந்தனரே - என்பதும் பாடங்கள்.

77

1343.

மெய்ம்மைப் பணிசெய் தவிருப் பதனால்
         விண்ணோர் தனிநா யகனார் கழலிற்
றம்மிச் சைநிரம் பவரம் பெறுமத்
         தன்மைப் பதிமே வியதா பதியார்
"பொய்ம்மைச் சமயப் பிணிவிட் டவர்முன்
         போதும் பிணிவிட் டருளிப் பொருளா
வெம்மைப் பணிகொள் கருணைத் திறமிங்
         கியார்பெற் றன?"ரென் னவிறைஞ் சினரே.

78

(இ-ள்.) விண்ணோர் தனி நாயகனார் கழலில் - தேவர்க்கெல்லாம் தனி முதல்வராகிய வீரட்டானேசுவரருடைய திருப்பாதங்களில்; மெய்ம்மை......விருப்பதனால் - (மனம் வைத்து) விரும்பி மெய்யினாலும் வாக்காலும் திருப்பணிசெய்து விண்ணப்பித்ததனாலே; தம் இச்சை.....தாபதியார் - தமது இச்சை நிரம்பும்படி வரம்பெற்ற, அந்தத் தெய்வத்தன்மை வாய்ந்த திருவதிகைத் தலத்தின்மேவிய தாபதியாராகிய திலகவதியார்; பொய்ம்மை...விட்டருளி - பொய்ம்மையாகிய சமணசமயத் தொடக்கினை விட்டு, அவர், (தம்பியார்) இறைவன் திருமுன்பு வந்து புகுவதற்கு ஏதுவாகிய சூலைநோயினை ஏவி விடுத்தருளி; பொருளா....பெற்ற

 1.

திருவாசகம் - மணிவாசகனார் பாடியருளிய திருவாசகத்தினை வாகீசர் பயின்றனர் என்று கூறுவாருமுண்டு.