1815. | அவ்வுரை கேட்ட போதே யங்கண ரருளா, லன்பர் செவ்விய திருவுள் ளத்தோர் தடுமாற்றஞ் சேர, நோக்கி "யிவ்வுரை பொறாதென் னுள்ள; மென்செய்தா னிதற் கொன்"றுண்டால் "மெய்விரித் துரையு"மென்ன விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி, |
33 1816. | "பெரியவ ரமுது செய்யும் பேறிது பிழைக்க வென்னோ வருவ?"தென் னுரையா ரேனு, மாதவர் வினவ வாய்மை தெரிவுற வுரைக்க வேண்டுஞ் சீலத்தாற், சிந்தை நொந்து பரிவொடு வணங்கி, மைந்தற் குற்றது பகர்ந்தா ரன்றே; |
34 1817. | நாவினுக் கரசர் கேளா "நன்றுநீர் புரிந்த வண்ணம்!; யாவரித் தன்மை செய்தார்?" என்றுமுன் னெழுந்து சென்றே, யாவிதீர் சவத்தை நோக்கி யண்ணலா ரருளும் வண்ணம் பாவிசைப் பதிகம் பாடிப் பணிவிடம் பாற்று வித்தார், |
35 1818. | தீவிட நீங்க வுய்ந்த திருமறை யவர்தஞ் சேயும், மேலிய வுறக்க நீங்கி விரைந்தெழு வானைப் போன்று, சேவுகைத் தவராட் கொண்ட திருநாவுக் கரசர் செய்ய பூவடி வணங்கக் கண்டு புனிதநீ றளித்தா ரன்றே! |
36 1815. (இ-ள்.) அவ்வுரை...நோக்கி - அந்த உரையினைக் கேட்டவுடனே, அன்பரது செம்மையுடைய திருவுள்ளத்தின் கண்ணே ஓர் தடுமாற்றம் சேர, அதனை நோக்கி, இவ்வுரை...அஞ்சி - "இந்த உரையினை என் உள்ளம் பொறுக்கலாற்றாது; அவன் என்ன செய்தனன்; இதற்கெல்லாம் உள்ளுறை "ஒன்று" திண்ணமாக உண்டு; மெய்யினை விரித்துக் கூறுவீராக!" என்று அரசுகள் கூறுதலும் உடல் நடுங்கிப் பயந்து, 33 1816. (இ-ள்.) பெரியவர்...உரையாரேனும் - "பெரியவராகிய திருநாவுக்கரசர் திருஅமுது செய்தருளும் இப்பெறும்பேறு கிடையாமற் பிழைக்கும்படி இவ்வாறு வருவதும் என்னே?" என்று உட்கொண்டு உரையாமல் இருப்பாராயினும்; மாதவர்.....சீலத்தால் - பெருந்தவராகிய அவர் வினவும்போது வாய்மையை உள்ளவாறு தெரியும்படியாகச் சொல்லிவிட வேண்டும் என்ற செம்மை ஒழுக்க நிலையினாலே; சிந்தை நொந்து - மனம் உடைந்து வருந்தி; பரிவொடு வணங்கி - துயரத்தோடும் வணங்கி; மைந்தற்கு உற்றது பகர்ந்தார் அன்றே - மகனுக்கு நேரிட்டதனை உள்ளபடி அப்பொழுதே உரைத்தனராம்; 34 1817. (இ-ள்.) நாவினுக்கரசர் கேளா - திருநாவுக்கரசர் அதனைக் கேட்டு; நன்று நீர்...சென்றே - "நீர் மொழிந்த வண்ணம் நன்று! இத்தன்மை செய்தவர் இவ்வுலகில் யாவர் உள்ளார்?" என்று கூறி, முன்னாக எழுந்து சென்றே; ஆவிதீர் சவத்தை நோக்கி - உயிர் போயின அந்தப் பிள்ளையின் சவத்தினை நோக்கி; அண்ணலார்.....பாற்றுவித்தார் - பெருமையுடையாராகிய சிவபெருமான் அருள் செய்யும்படி பாவின் இசையுடைய திருப்பதிகத்தினைப் பாடிப் பாம்பின் விடத்தைப் போக்கியருளினார்; 35 1818. (இ-ள்.) தீ விடம்....சேயும் - தீப்போன்ற விடம் இவ்வாறு நீக்கப் பெற்று உய்தி யடைந்த திருமறையவராகிய அப்பூதியாருடைய புதல்வனும்; மேவிய...போன்று - பொருந்திய தூக்கத்தினின்றும் நீங்கி விரைவாக எழுவானைப் |