பக்கம் எண் :


1004திருத்தொண்டர் புராணம்

 

சிந்தை நொந்து - இதனால் மாதவர் அமுது செய்யும் பேறு பிழைக்க நேருமோ என்று மன வருத்தம் கொண்டு.

பரிவு - துன்பம். துன்பமாவது மேற்சொன்ன காரணத்தால் விளைந்தது.

வணங்கி - முன் விளங்க உரையாமையால் நேர்ந்த அபராதத்தைப் பொருத்தருளும்படி வணங்கி.

அன்றே - அப்போதே. "மெய் விரித்துரையும்" என்று வினவியபொழுதே.

விதிர்ப்புற்று - அஞ்சி (1815) - சிந்தை நொந்து - பரிவொடு வணங்கி என்ற இவையெல்லாம் அரசுகள் அமுது செய்வதற்கு நேரநின்ற இடையூறு பற்றி வந்தன.

34

1817. (வி-ரை.) நாவினுக்கரசர் கேளா - இங்கு இப்பெயராற் கூறியது "நன்று நீர் புரிந்த...செய்தார்" என்று கூறிய அருளிப்பாடாகிய மொழியும், இனிப் புதல்வன் விடம் நீங்கப் பாடியருளும் மந்திரமொழியும் வல்ல தன்மை குறிப்பதற்கு.

நன்று நீர் புரிந்த வண்ணம்! - அதிசயத்தின் வந்த புகழ்ச்சிக் குறிப்புமொழி.

யாவர் இத்தன்மை செய்தார்? - வினா ஒருவருமிலர் என்பது குறித்தது.

அப்பூதியார் இவ்வாறு செய்யாது முன்னரே பிள்ளையை அரசுகளிடம் காட்டிக், கூறி, வேண்டியிருந்தாராயினும் இப்பயன் பெற்றிருக்கலாமே? என்னின்! அற்றன்று: பிள்ளை உயிர் நீத்ததனை மறந்தும், மறைத்தும் அன்பினால் அமுது செய்விக்கச் சூழ்ந்தமையே அவரது உலகிறந்த பெருமை; செயற்கரிய செயல்; அவ்வாறில்லையாயின் உலகரோ டொப்ப நிகழும் பெருமையே யமைவதாம். இறத்தலும் பிறத்தலும் உலகியல்பே யாதலின் பிள்ளையை உயிர்ப்பிக்க அரசுகள் முற்பட்டிராது நின்றிடலும் கூடும். இவை பற்றி "அன்றவர்கண் மறைத்ததனுக் களவிறந்த கருணையராய்" (1473) என்றவிடத் துரைத்தவையும் பார்க்க. அடியார்கள், சிவநேசரது திறஞ் சொலக் கேட்டனார் ஆளுடைய பிள்ளையார்; சிவநேசர் தம் மகனை மீள உயிர்ப்பிக்கும்படி பிள்ளையார்பால் வேண்டினாரிலர்; ஆயின் முன்னிகழ்ந்தது திருவுளத்தமைத்தும், பிள்ளையார், சிவநேசர் தஞ்செயல் வாய்ப்பவும், புறத்துறை யழியவும், வைத்த அப்பெருங் கருணை நோக்கான் மகிழ்ந்தருளிக் கபாலீசரை வழிபட்டுத், தாமாகவே, என்பு நிறைந்த குடத்தினைக் கொணரச் செய்து பாடியருளிப் பூம்பாவையை உற்பவிப்பத்தருளினர். திருப்புக் கொளியூரினும் மகனை இழந்தமை நினைந்து வருந்திய அந்தணரும் மனைவியும் ஆளுடைய நம்பிகளிடம் தம் மகனை மீளத் தருவிக்கும்படி வேண்டினாரிலர்; நம்பிகள் வரக்கண்டதும் தமது சித்தசோகத்தினை முற்றும் மறந்து நம்பிகளை வணங்கினர். இந்நிகழ்ச்சிகளின் உள்ளுறைகளும் இங்கு வைத்துக் கருதத்தக்கன.

என்று - என்று கூறி - என்று கொண்டு.

முன் எழுந்து சென்றே - பிள்ளையைக் கோயிலின் முன்கொணர்வித்துத் திருமனையினின்றும் அங்கு எழுந்து சென்று. 1473-ம் ஆண்டுரைத்தவையும் பார்க்க. முன் உரைத்தமையால் ஈண்டு விரிக்கப் படவில்லை.

ஆவி தீர் சவும் - சவும் என்றலே அமையுமாயினும் ஆவி தீர் என் விசேடித்தது ஆவி தீர்ந்தும் தீர்ந்திலதாய் அந்த ஆவி மீண்டும் அவ்வுடலிற்போதும் குறிப்புப்பற்றி. பிரிவுறும் ஆவி - என மேலும் (1819) கூறுவது மிக்கருத்து. இக்குறிப்புப்பற்றி இங்குப் பிள்ளை ஆவி பிரிந்து விடவில்லை என்றும், ஆவிபிரிந்தாற் போன்ற மயக்க நிலையே யடைந்திருந்தனன் என்றும், ஆராய்ச்சி செய்வாரு