முண்டு. சவம் - உயிர் நீங்கிய உடலின் பெயராதல் கருதுக. "பேரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு" (திருமூலர்); "தம் புதல்வன் சவமறைத்து" (1472); வாகீசரின் ஞானப் பாடலுக்கு உயிரை மீளத்தருதல் ஒரு பெருங் காரியமன்று என்க. அண்ணலார் அருளும் வண்ணம் - தற்போதமென்பது சிறிதுமின்றிச் சிவனருள் வழி நின்றே செயல் புரிவதும், தஞ்செயல் எல்லாம் அவன் செயலேயாக நிகழ்வதும் எந்தம் பெருமக்களியல்பு. பா - இசை - பதிகம் - பாட்டுத்தோறும், அடிதோறும், சீர்தோறும், அசைதோறும் பரவும் இசையினையுடைய பதிகம். பரவுதல் - பரவிநிற்றல். இசைப்பா என்று கூட்டி, அடியடிதோறும் ஒன்று முதலாகப் பத்தீறாகச் சீவபெருமானிசை களைப்போற்றும் பதிகம் என்று இப்பதிகச் சிறப்பியல் குறித்ததாகக் கூறுவதுமாம். பணி விடம் - பாம்பின் விடம். பணி - பாம்பு. சிவனடியார்களது ஏவலின் வழிப் பணிந்து நிற்கும் விடம் என்றதும் குறிப்பு. பாற்றுவித்தார் - பாற்றுதல் - போக்குதல்; பிறவினையாற் கூறியது திருவருட் செயலால் நிகழ்ந்தது என்று குறிக்க. மொழிந்த - செய்வார் - என்பனவும் பாடங்கள். 35 1818. (வி-ரை.) முன்பாட்டும் இத்திருப்பாட்டும் பொருட்டொடர்புபற்றி ஒரே எதுகையின் அமைந்தன. உய்ந்த - சேய் - என்று கூட்டுக. 1816-இல் அப்பூதியார் செய்கை கூறப்பட்டது; 1817-இல் அரசுகளின் அருட்செய்கை கூறப்பட்டது; இப்பாட்டிற் சேயின் செய்கை கூறுவதனால், அவர்கள் செய்வதற்கேற்பச் சேயும் - வணங்க என்று உம்மை இறந்தது தழுவியது. மேவிய...எழுவானைப்போன்று 1473- இன் கீழ் உரைத்தவை பார்க்க. இறத்தல் உறக்கம் போன்றதென்பதும், பிறப்பு விழித்தெழுதுதல் போன்றதென்பதும் நீதிநூல் மட்டுமின்றி ஞான நூல்களும் கூறும் உண்மைகள். சிவன் இயற்றும் ஐந்தொழில்களுள் அழித்தல் மறைத்தல் என்ற இவை இளைப்பாற்றலும், கன்ம ஒப்பு வருத்து மலங்களை முதிர்வித்தலுமாகிய பயன்செய்வன என்பது ஞானநூல் முன்பு. உடல் நூலாரும் உறக்கத்தின் பயன் இளைப்பாறுதலே என்பர். மேவிய தன் முயற்சியாலன்றி வந்து பொருந்திய. உறக்கத்தினின் றெழுதல் என்ற உவமம், உவமான உவமேய மிரண்டினும் முன் குறித்த பயனேயன்றிச் செய்கை நிகழுமாறும் குறித்தது; வினையும் பயனும் பற்றி வந்த உவமம். ஆட்கொண்ட திருநாவுக்கரசர் - ஆளுடைய அரசுகள் பொது நீக்கித் தமக்கே ஆளாக அடிமை கொண்டருளியமையால், "சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்" (போதம் - 10) என்றபடி அவரருளும் வண்ணம் பாடியவாறே அருளினர் என்பது. 1795 - 1796 திருப்பாட்டுக்களில் எடுத்துக் காட்டியபடிசிவபெருமானால் ஆட்கொள்ளப்பெற்றவர் என்ற நினைவில் ஊறி புதல்வன் எழுந்தவுடன் அந்நினைவோடும் வணங்கினான். செய்ய - செம்மையுடைய; பூ - பூப்போன்ற. கண்டு புனித நீறு அளித்தார் - கண்டு "காட்டும்....பூதி சாத்த" (1814) என்று அப்பூதியார் பாற் கேட்டருளியபடி, இப்போது சிவனருளால் வந்த காட்டக்கண்டு என்க. புனித நீறு -உயிரின் மாசறுத்துத் தூய்மை செய்வது. அன்றே - இறந்தான் என்று பாயினுட்பொதிந்து மறைத்த அன்றே. 36 1819. | பிரிவுறு மாவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின் நெறியினைப் போற்றி வாழ்ந்தார்; நின்றவப் பயந்தார் "தாங்கள் | |