பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்1009

 

1821. (வி-ரை.) புகழ்ந்த - வேதங்களாலும் நூல்களாலும் புகழப்பட்ட; புகழ்ச்சிக்கமைந்த தன்மைகளாவன: திருநீறு தரும் மூலமாயிருத்தலும், திருக்கோயிலினை விளக்கும் திருமெழுக்காதலும், ஆனைந்தின் ஒன்றாயிருத்தலும், பிறவுமாம். "நிருத்தர் சாத்து நீறுதரு மூல மவதாரஞ் செய்யும் மூர்த்தம்" (1266); "புத்தேளிர் கோமானின் றிருக்கோயி றூகேன் மெழுகேன்" (திருவா), "அலகிட்டு மெழுக்கு மிட்டு" (தேவா).

கோமயத்தின் நீர் - கோமயம் கலந்த நீர். கோமயம் - பசுச் சாணம். "ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர்."

பூமியைப் பொலிய நீவி - பூமி - திருவமுது செய்யும் இடம்; நீவுதல் - துடைத்து மெழுகுதல். இது ஐவகைச் சுத்தியுள் "தான சத்தி" என்றதன் பாற்படும். சிவபூசையின் அங்கத்தினைப் போன்று மாகேசுர பூசையினும் இன்றியமையாது செய்யத் தகுவது.

நிகழ்ந்தவான் சுதையும் போங்கி - வெள்ளிய சுண்ணச் சாந்தினால் நேர்கோலமிட்டு. சுதை போக்குதல் - கோலமிடுதல். கரைத்த மாவினாற் கோலமிடுதல் என்றலுமாம்.

சிறப்புடைத் தீபம் ஏற்றி - ஒளி தரும் அவசியத்துக்காகஅன்றிச் சிறப்புக்காக விதிக்கப்பட்ட தீபம். தீபம் - தம்பமாக நிற்பதும், பூசையில் ஏந்துவதுமாம். "விதிமுறை தீப மேந்தி" (851). சிவபூசையிற் போலத் தூப தீபங்கள் மாகேசுவர பூசைக்கும் உரியன. சிறப்புடை -சிறப்பு -விசேட பூசை. "சிறப்பொடு பூசனை" (குறள்). நைமித்திகம் என்பது ஆகமம். "பங்குனியுத் திரமாந் திருநாளுயர் சிறப்பு" (நமிநந்தியார் புரா - 20). சிறப்புடை - சிறப்புக்கு உரிய. அரசுகளது பூசைக்குதவும் பேற்றினால் எனைத் தீபங்களினும் சிறந்த என்றலுமாம்.

நிகழ்ந்த அக்கதலி நீண்ட குருத்து - நிகழ்ந்த - முன் சரித விளைவு நிகழ்ந்த; அ - முன்னறி சுட்டு; நீண்ட குருத்து - பொற்குருத்து (1805); "குருநாளக் குருத்து" (1469); விரிந்து - விரியும் பருவத்தி லிருந்ததாயினும் முற்றும் விரியாத குருத்தாதலின் விரித்தல் வேண்டப்படுவது.

நீரால் விளக்குதல் - பரிகலக் குருத்தினைக் கழுவியிடுதல் சைவ மரபு விதி. தூய்மை செய்தலும், இங்கு நிகழ்ந்தது போல அரவு முதலிய விடப் பிராணிகளின் தொட்க்கு நீக்குதலும் கருத்து.

ஈர்வாய் வலம்பெற மரபின் வைத்தார் - இலை அரிந்த பக்கம் உண்பவருக்கு வலப்புறமாக இருக்கும்படி இல்லை வைக்கப்பட வேண்டுமென்பது சைவ மரபுவிதி.

பூமியைக் கோமய நீரால் நீவுதல், சுதை போக்குதல், தீபம் ஏற்றுதல், பரிகலம் திருத்துதல், பரிகலம் இடுதல், கை நீவ நன்னீரளித்தல் முதலிய இவை எல்லாம் சைவ மரபில் மாகேசுரபூசைக்குரிய இன்றியமையாத அங்கங்கள் என்பதை விளக்கி வற்புறுத்தும் பொருட்டு இங்கு அப்பூதியார் செயலின் வைத்து, ஆசிரியர் விரித்துக் காட்டினார். மாகேசுர பூசை செய்யும் அன்பர்கள் புராணத்துள் அவ்விடத்து விரிக்காமல் இங்கு விரித்தது அக்குறிப்பும் தருவது. உண்ணும் மரபும், அடியார்க்கு மாகேசுர பூசை செய்யும் மரபும் சைவ வுலகில் மறந்து ஒதுக்கப்படும் இந்நாளில் இவற்றை எடுத்துக் காட்டுதல் மிகவும் இன்றியமையாததாகும்.

வலம்பட - என்பதும் பாடம்.

39

1822. (வி-ரை.) திருந்திய....திருக்கை நீவும் - கை நீவும் - கை கழுவும்; உணவு கொள்ளும் முன்னர்க் கை கழுவுதல் வேண்டும் என்பது சமய வொழுக்க