உணர்ந்து - உள்ளுணர்ச்சியிற் கை வரப் பெற்று, அடைவார் - தாளே புகலாக அடைவார். "அடைவால்" என வரும் பாட்டிற் கூறுதல் காண்க. செல்லும் - நெறி - அது - ஆக - அதுவே நெறியாக - சாதனமாக - ஆறாக. அரசுகளின் பாதமே எப்பொருளும் ஆவன என்று கடைப்பிடித்து அதுவே வழியாகச் சிவனடிசேரப் பெற்றனர். பற்றாகச் சார்ந்தது அரசுகள்பாதம்; அச்சார்வே வழியாகச் சேரப் பெற்றது சிவன் பாதம் என்க. வரும் பாட்டும் பார்க்க. 44 1827. | மான்மறிக் கையர் பொற்றாருள் வாகீச ரடைவாற் பெற்ற மேன்மையப் பூதி யாராம் வேதியர் பாதம் போற்றிக், கான்மலர்க் கமல வாவிக் கழனிசூழ் சாத்த மங்கை நான்மறை நீல நக்கர் திருத்தொழி னவில லுற்றேன், |
45 (இ-ள்.) மான் மறிக்கையர்.....போற்றி - மான்மறியினைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய பொற்பாதங்களைத் திருநாவுக்கரசரது அடைவினாலே பெற்ற மேன்மையுடைய அப்பூதியார் என்னும் வேதியர் பாதத்தைப் போற்றி செய்து (அத்துணையானே); கான் மலர்...நவிலலுற்றேன் - காடுபோலதாமரை மலர்களையுடைய வாவிகள் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருச்சாத்தமங்கையில் அவதரித்த நான்மறை வல்ல திருநீலநக்கர் செய்த திருத்தொண்டினைச் சொல்லப் புகுகின்றேன். (வி-ரை.) இப்பாட்டினால் இதுவரை கூறி வந்த புராணத்தைச் சுருக்கி வடித்தெடுத்து முடித்துக் காட்டி, இனிக் கூறப்புகும் புராணத்துக்குத் தோற்று வாய் செய்கின்றார் ஆசிரியர். வாகீசரடைவால் மறிக்கையர் பொற்றாள் பெற்ற மேன்மை என். இஃது இப்புராணத்தின் சாரம். வாகீசர் அடைவு - வாகீசரது சார்பு - வாகீசரையே பொருளென அடைந்த நெறி. வழி வாகீசர் அடைவும், அவ் வழியே சென்று சேர்ந்த இடம் - சிலன் பொற்றாளுமாம். "திருநாவுக்கர செனுமோர், சொற்றா னெழுதியுங் கூறியு மேயென்றுந் துன்பில்பதம், பெற்றா ‘னொருநம்பி யப்பூதி' யென்னும் பெருந்தகையே" என்று இக் கருத்தையும் திருத்தொண்டத்தொகை யாட்சியையும் சேர்த்துப் பாடினர் பின் வந்த பெரியராகிய சிவப்பிரகாசர். மலர்க்கமலக் கான் வாவி - என்க. மலர்களாகிய தாமரையைக் காடுபோல உடைய வாவி. இக் கருத்தைத் தொடர்ந்து மேல்வரும் புராணத்துள் முதற்பாட்டில் "பூத்த பங்கயப் பொகுட்டின்மேற் பொருகய லுகளுங், காய்த்த செந்நெலின் காடுசூழ் காவிரி நாட்டு" (1828) என்பது காண்க. சோழ நாட்டிற் கமலங்கள் இலையும் பூவுமாகக் காடாகத் தலை தடுமாறிக்கிடக்கும் வாவிகளைக் கண்ணுறுவார்க்கு இதனுண்மை விளங்கும். "கடிகமழ் கமலக் காடு பூத்தது" என்ற கம்பன் பாட்டும் காண்க. இனி, கான் - மணம் என்று கொண்டு, மணம் பொருந்திய மலராகிய கமலம் என்றும் கால் - தாள் - என்று கொண்டு தாளில் மலர் கமலம் என்றும் உரைத்தலுமாம். வாவிச் சிறப்புப் பற்றி இப்பாட்டிலும், வாவிகளைச் சென்று சென்று ஊட்டும் ஊற்றுச் சிறப்புப்பற்றி வரும் பாட்டிலுமாக நீர்வளம் பற்றி எடுத்துக்கொண்டது "ஒலிபுனல்சூழ் சாத்த மங்கை" என்ற முதனூற் கருத்தை விரித்துக் காட்டியபடி. நான் மறை - மரபு அறிவித்தபடி, நான் மறை நீல நக்கர் என்றும், நீலநக்கர் நான் மறைத் திருத்தொழில் என்றும் கூட்டி உரைக்க நின்று, அவரது திருத்தொண்டினையும், அவர் ஆளுடைய பிள்ளையாரது திருமணத்தில் மறை வேள்விச் |