பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்1015

 

சடங்கெல்லாம் செய்து சேவித்து உடன் சிவன் திருவடி யடைந்த சரித வரலாற்றுக் குறிப்பையும் தோற்றுவாய் முகப்பிற் காட்டி நின்றது.

45

_________

சரிதச் சுருக்கம்:- சோழநாட்டில் திங்களூரில் வேதியர் குலத்தில் அவதரித்தவர் அப்பூதியார். அவர் சிவனுக்கன்பர்; நற்குணங்கள் நிறைந்தவர்; களவு பொய் கோபம் முதலாகிய குற்றங்களைக் காய்ந்தவர்; திருநாவுக்கரசரைக் கண்டறியா முன்னே அவர் பாதங்களில் மிக்க அன்பு கொண்டவர்; தமது திருமனையில் அளவைகள், மக்கள், முதலிய எல்லாம் திருநாவுக்கரசர் பெயரிட்டழைப்பர்; தாம் அமைத்த தண்ணீர்ப்பந்தர், சாலை குளம் முதலிய அறங்கள் பலவற்றையும் திருநாவுக்கரசர் பெயராலே அமைத்து இயற்றி இவ்வாறொழுதி வந்தனர்.

அந்நாளில், திருப்பழனத்தை வணங்கிப் பிறதலங்களையும் வணங்கும் பொருட்டுத் திருநாவுக்கரசர் திங்களூரின் பக்கத்தே வழிச் சென்றனர். அங்கு அளவில்லாத சனம் எப்போதும் செல்கின்ற பெருவழிக் கரையில் அருளுடையார் உள்ளம் போன்று குளம் நிறைந்த தடம்போற்குளிர்ந்து நிழலைத் தரும் தண்ணீர்ப்பந்தரை வந்தடைந்தனர்; திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தர்" என்று சந்தம்பட அதனுள் எங்கும் வரைந்திருந்ததனைத் தாம் கண்டார். "இப்பந்தரை இப்பெயரிட்டு இங்கு அமைத்தார் யாவர்?" என்று கேட்டனர். அங்கு அதனை அறிந்தவர்கள் "ஆண்ட வரசெனும் பெயரால் அப்பூதியார் செய்தனர். இவ்வாறு எங்கு முள்ளனசோலை, குளம், கா" என்றார். "இதற்கு என்ன கருத்து என்றறிதல் வேண்டும்" என்று கொண்டு, அங்குள்ளாரை "அவர் எவ்விடத்தார்?" என்று கேட்க, அவர்கள் "அவர் இவ்விடத்தார்; இப்போது தான் மனையிற் சென்றனர்; அதுவும் நணித்து" என்னக் கேட்டு, அவரது திருமனைக் கடையிற் சென்று சேர்ந்தனர்.

ஓர் அடியவர் தமது முன்கடைத் தலையில் வந்தார் என்று கேட்டு மனைக்குள்ளிருந்த அப்பூதியார் வந்து அரசுகளை வணங்கா முன் அரசுகள் அவரை வணங்க, "அருள்முன் பொழியும் வடிவுடையீர்! தேவரீர் என்மனையில் வந்தருளஅடியேன் முன்னே முடிவில் தவஞ் செய்தேன்கொல்!" என்றனர் அப்பூதியார். அதற்குக் கோதில் மொழிக் கொற்றவனார் "யாம் திருப்பழனத்திற் சிவபெருமானைச் சேவித்து வருகின்றோம். வழிக் கரையில் நீர்வைத்த வளந்தரு தண்ணீர்ப் பந்தரைக் கண்டு, அவ்வாறே செய்கின்ற பிற அறங்களையும் கேட்டும் இங்கு அணைந்தோம்" என்று சொல்லி, ‘அத் தண்ணீர்ப் பந்தரில் நும்பேர் எழுதாதே வேறொரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்கொல்? கூறும்" என்று வினாவினர் இதனைக் கேட்டவுடன் அப்பூதியார் சிந்தை நிலையழிந்தனர் நீர் நன்று கூறி யருளவில்லை; அமணர்களும் அரசனும் கூடிச் செய்த சூழ்ச்சிகளைத் திருத்தொண்டின் உறைப்பினாலே வென்றவர் தம் திருப்பெயரோ வேறொரு பேர் என்று சொல்லத்தகுவது? நம்மையுடைய வராகிய சிவபெருமானது திருவடிக் கீழ் அன்பினுடன் செய்யும் திருத்தொண்டினாலே இம்மையிலும் நாம் பிழைப்பது என்று என்போல்வார்களும் தெளியும்படி செம்மைபுரி திருநாவுக்கரசர் திருப்பெயரினை யான் எழுத, யான் கேட்கவே வெம்மை மொழி விளம்பினீர்; கடலைக் கல்லே மிதப்பாகப் போந்து கரையேறிய அவரது பெருமையினைச் சிவனது புவனத்தில் அறியாதார் யாவர் உளர்? மங்கலமாம் திருவேடத்துடன் நின்று இவ்வகை மொழிந்தீர் நீர் எங்குறைவீர் நீர் தாம் யார்? இயம்புவீர்!" என்று கேட்டனர். அவரது பெருமையினை அறிந்து, திருநாவுக்கரசர், "பிறதுறையினின்றும் ஏறும்படி அருள் சூலையினால் சிவபெருமான் ஆட்