நீள் நடைக்காவணம் இடுதல் - நீண்டதூரத்துக்கு நடைப்பந்தர் அமைத்தல். ஆளுடைய பிள்ளையாரை எதிர்கொள்ளத் திருமயிலையிலிருந்து திருவொற்றியூரளவும் (10 நாழிகையளவும்). நடைக்காவணமிட்ட சிவநேசரது அன்புச்செயல் இங்கு நினைவு கூர்தற்பாலது. "திருவொற்றி யூரளவுந் துன்னு நீண்டைக் காவணந் துகில் விதானித்து" (திருஞான - புரா - 1070). நற்சுற்றத்து ஈட்டமும் கொடு - தமது மனைக்கடையில் வந்து அணைந்த அப்பர் சுவாமிகளை வணங்குதற்கு "ஆர்வமுறப் பூண்டபெருஞ் சுற்றமெலாங் கொடு" (1801) புறப்பட்ட அப்பூதியார் செயலை நினைவுகூர்க. நற்சுற்றம் - நன்மை - ஆளுடைய பிள்ளையாரை நேரே வரவேற்று எதிர்கொள்ளும் பேறு பெற்றமை. முன் - வேறு யாவர்க்கும் முன்; பிள்ளையார் தம்மை அறிவதற்கு முன் என்ற குறிப்புமாம். எதிர்கொள எழுந்தார் - எழுதல் - மனவெழுச்சி கொள்ளுதல் மனையினின்று புறப்படுதல் என்றலுமாம். எழுந்தார் - எழுந்தாராகி; முற்றெச்சம். 25 1853. (வி-ரை.) திருக்கூட்டம் ஒன்றி ஒன்றுதல் - சேர்தல்; கிட்டுதல். ஒருவாறு அன்றி - ஒருபடியாயல்லாமல் பலபடியாகவும்; பலபடியாவன ஆடுதல், பாடுதல், தொழுதல், எழுதல் முதலானசெயல்களும் அவற்றுக் குரிய மெய்ப்பாடுகளுமாம். ஒவ்வொரு செயலிலும் பலவகையுமாம். இவை மன மகிழ்ச்சியின் நிறைவும் வெளிப்பாடும் குறிப்பன. பொன் தயங்கு நீண் மனை - பொன் தயங்குதல் - பொன் - அழகுபடுத்தும் செயல்கள். தயங்குதல் விளங்குதல். பொன் - பொன்னாலியன்ற சித்திரிப்புக்கள் என்றலுமாம். நீண்மனை - ஆளுடைய பிள்ளையார் திருக்கூட்டத்துடன் எழுந்தருளும் பேறுபெறும் குறிப்பு. உடன்கொடு - தம்முடனே கொண்டு; மனவொருமைப் பாட்டுடன் என்றதும் குறிப்பு. தொழுதெழுந்தயர்வார் - தொழுதெழுபவராய் - என்பனவும் பாடங்கள். 26 1854. | பிள்ளை யாரெழுந் தருளிய பெருமைக்குத் தக்க வெள்ள மாகிய வடியவர் கூட்டமும் விரும்ப வுள்ள மாதர வோங்கிட, வோங்குசீ காழி வள்ள லாரைத்தம் மனையிடை யமுதுசெய் வித்தார். |
27 (இ-ள்.) பிள்ளையார்......விரும்ப - ஆளுடைய பிள்ளையார் அங்கு எழுந்தருளிய பெருமைக்குத் தக்கபடி பெருந்திரளாகத் திரண்ட அடியவர் கூட்டமும் விரும்பி வர; உள்ளம் ஆதரவு ஓங்கிட - உள்ளத்தில் அன்பு வளர; தம் மனையிடை - தமது திருமனையின் கண்; ஓங்கு சீகாழி வள்ளலாரை - ஓங்கும் சீகாழியில் அவதரித்த வள்ளலாராகிய அத் திருஞானசம்பந்த நாயனாரை; அமுது செய்வித்தார் - திருவமுது செய்வித்தனர். (வி-ரை.) பெருமைக்குத் தக்க - அடியார் கூட்டமும் விரும்ப - பெருமைக்கேற்றபடி அடியவர் கூட்டம் விரும்பிக் கூடி யணைய. வெள்ளம் - பெருந்திரள் என்ற பொருளின் வந்தது. ஆற்று வெள்ளப் பெருக்குபோலப் பலவழிகளாலும் கூடியும் திரண்டும் பெருகியும் இடையறாது வரும் நிலையின் குறிப்புமாம். வெள்ளம் என்ற பேரெண்ணின் குறிப்புமாம். ஆகிய - ஆக்கச்சொல் கூடிய என்ற பொருள்தந்து நன்றது. உள்ளம் ஆதரவு ஓங்கிட - அடியவர்களை அமுதூட்டி வழிபடுவோர்களும்அவர்கள் அளவில்லாதபடி வரின் மனங்குன்றுதல் உலக இயல்பாம். ஆனால் "கணங்களாய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால் குணங்கொடு பணியும்" குலச்சிறை |