பக்கம் எண் :


1050திருத்தொண்டர் புராணம்

 

1858. (இ-ள்.) ஆங்கு...ஒளிர - ஆங்கு அந்த வேதிகையில் என்றும் அறாது வளர்க்கப்பட்டு உள்ள செந்தீயானது வலமாகச் சுழித்தெழுந்து மேல் ஓங்கி முன்னிலையிலும் ஒருபடியாயன்றிப் பலவாறும் விளக்கமுறவே; தாங்கு நூலவர் மகிழ்வுற - நூல் தாங்கியவர் (திருநீலநக்கர்) அது கண்டு மகிழ்ச்சியடைய; சகோடயாழ்...பள்ளி கொண்டார் சகோடயாழத் தலைவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் பக்கத்தில் அமரும் பாணி யாருடனே திருவருளின் வயமாகப் பள்ளி கொண்டனர்.

31

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1856. (வி-ரை.) சீல...அமுது செய்தருளி - இஃது அன்றிரவு பிள்ளையார் தொண்டர்களுடன் திருவமுது செய்தருளி தனைக்குறித்தது.

ஞாலம் மிக்கிட - உலகம் ஓங்கி உயர்வடையும் பொருட்டு.

மிக்கிட (காலம் முற்பெற) அழுதவர் - என்க. மிகுதல் - உயர்தல். உலகம் மிக்கிட அழுதலாவது அழுத அதனால் ஞானப்பாலுண்டு, அதனால் அமுதமாகிய தேவார அருள்மொழிகள் அருளி உலகை உயர்த்துதற்கு ஏதுவாதல்.

நாயகியுடன் நம்பர் நண்ணும் காலம்பெற முன்அழுதவர் - என்க. நண்ணுதல் வெளிப்பட்டருளுதல்.

காலம்பெற - பெறுதற்பொருட்டு. நாயகியுடன் நம்பர் எழுந்தருளும் சமயம் வாய்க்கும் பொருட்டு; "காலம்பெற அமுதார்" (திருஞான - புரா - 163)

அழைத்திடக் கடிதுவந்து இரவும் தங்க வேண்டுவன சமைக்கும் முயற்சியில் நீலாக்கனார் இருக்க, அவரைப் பிள்ளையார் தாம் எழுந்தருளியிருந்த இடத்திற்கு அழைக்க, அவரும் கடிது விரைவில் - வந்து.

அடிபணிதல் - திருவடிகளில் வணங்குதல்; நின்றார் ஏவல் கேட்கும் முறை.

ஞாலமுய்ந்தட - என்பதும் பாடம்.

29

1857. (வி-ரை.) நின்ற - அழைத்த பணியென் என்று கேட்கும் குறிப்புடன் முன் நின்ற; முன் வந்து வணங்கி நிற்றலேயன்றி அழைத்த காரியம் என்ன? என்று பெரியோர்களிடம் வாக்கினாற் கேட்பது மரபன்று என்பது குறிக்கப்பட்டது.

நீலகண்ட...என்ன - பாணர் மனைவியாருடன் எழுந்தருளியுள்ளாரா தலானும், அவரது பெருமையும் அடிமைத்திறமும் அவர்பால் தாம்கொண்ட அன்பும் பிறவும் திருநீலநக்கர் முற்றும் அறிய ?வந்திருக்குமாதலானும், அவரது குலம் பற்றி அவர் அம்முறையில் அமைக்கப்படுதல் உலகியல்பாதலானும், பிறவாற்றானும் பிள்ளையார் இவ்வாறு தேற்றம்பெற வேறெடுத்து அறிய உரைத்தருளினர். நீலநக்கர் மறையவராதலின் ஒருவேளை யாழ்ப்பாணரிடம் தீண்டாமை பாராட்டுவரோ? என்று நினைந்து பிள்ளையார் இவ்வாறு அருளினர் போலும் என்று இங்கு விசேட ஆராய்ச்சி செய்வாருமுண்டு. ஓர் இடம் - என்றதனால் தாம் எண்ணுதற்கேற்ப ஓரிடம் தருதலே பிள்ளையார் கருத்து என்க. தமது கருத்தைக் குறிப்பாலுணர்த்தியதன்றித் திருநீலநக்கரது அடிமைப் பண்பில் பிள்ளையார் ஐயங்கொண்டாரிலர் என்க. அருளுவீர் அஃது உம்பால் உயர்ந்த செயலாம் என்பது குறிப்பு.

நன்றும் இன்புற்று நன்றும் - பெரிதும்; தமது கருத்துமதுவே யாதலின் பிள்ளையாரது திருவுள்ளமும் அதனோடு பொருந்தப் பெற்றபோது பெரிதும் மகிழ்ந்தனர் நாயனார் என்பது.

நடுமனை வேதியின்பாங்கர் - மனைநடுவில், வேதிகையின் பக்கத்தில். மரபினது முறையினால் மனையின் புறத்துநிற்கவும். வேதியை அணுகாது நிற்கவும் உள்ளவர் என்பது குறிப்பு. வேதி - வேள்வித்தீ வளர்க்குமிடத்தைக் கொண்ட மேடை. "குன்றனைய மாளிகைக் டொறுங்குலவும் வேதிகைகள், ஒன்றிய மூவாயிர மங்குள