பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்109

 

1351.(இ-ள்.) வெளிப்படை. "அடிகண்மார்கள் எல்லாரும் ஒருங்கேதுன்பப்பட்டு மிக அழிவுட்கொண்டவர்களாய்க் கொடி அசையும் திருவாயிலின் புறத்தே அணைந்துள்ளார்கள்" என்று சொல்ல, வடித்த நீண்ட வேலேந்திய அந்த மன்னவனும் மற்று அவார்களது சார்புடையவன் ஆனபடியால், "இவ்வாறு விரைந்து கூடிவருவதற்கு அவர்க்கு நேர்ந்தென்கொல்?" என்று கவலையுடன் சொன்னான்.

86

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.

1350.(வி-ரை.) உடையொழிதல் - உண்ணும்போது உரையாடாமை - நின்றுண்ணுதல் - இவை முதலியவை சமண அடிகண்மார்களின் சமண ஒழுக்கம். சைவ மரபினுள் விலக்கப்பட்டவற்றை நலமென்று கொண்டொழுகுபவர் என்பது குறிப்பு.

கடை - இங்கு அரசனது அரண்மனைவாயில் குறித்தது. "கடைதூங்கு மணியை" (பொது - திருவிருத்தம்) என்றதும் பிறவும் காண்க. கடைத்தன்மை என்பதும் குறிப்பு.

வாயில்காவலருக்கு - என்ன - என்று கூட்டுக. வாயில்காவலருக்குச் சொல்ல.

அடைய - ஒருங்கே - ஒன்றுகூடி. அவனிடம் புகலடைய என்ற குறிப்புமாம்.

இடையறிந்து - இடை - அறிவிக்க ஏற்ற சமயம். தக்க காலம் பார்த்துச் செய்தி அறிவித்தலே காரியம் நிறைவேற்றுதற்குதவியாகுமாதலால் இடையறிந்து என்றார்.

புக்கு - இசைப்பார் - அரசன் முன்பு புகுதல், செய்தியறிவித்தல் என்ற இரண்டினுக்கும் ஏற்ற சமயம் பார்க்கவேண்டி யிருத்தலின் இவை யிரண்டுடனும் கூட்டி யுரைக்குமாறு இடையறிந்து என்பதனை முதற்கண் வைத்தார்.

இசைப்பார் - எதிர்கால வினைமுற்றெச்சம். இசைப்பாராகி - என்று கூற என மேல் வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.

உண்போர் - வாயில் காவலருக்கு - என்ன - அவரும் - புக்கு இசைப்பார் - எனக் கூற - மன்னவனும் - உரைத்தான் என்று இந்த இரண்டு பாட்டுக்களையும் கூட்டி முடிபு செய்துகொள்க.

இடையறிந்து புக்கு இசைப்பார் - அரசனிடம் அணுக்கராயுள்ள வாயிலாளர் மதியுடையவர்களும், சமணர் சார்புடையாரும் ஆதலின் அடிகண்மார் கருத்தை ஏற்குமாறு அரசனிடம் சொல்ல எண்ணி, ஏற்ற சமயம் பார்த்து அறிவித்தனர் என்க. அவ்வாறல்லாக்கால் பலவகையாலும் காரியக்கேடு வருதல் உலகியலில் கண்கூடு.

85

1351.(வி-ரை.) அடிகண்மார்.......அணைந்தார் - இது வாயில்காவலர் அரசனுக்கு அறிவிக்கும் வகை. எல்லாரும் - அடிகள், "நாங்கள் அடைய வந்தமை" என்றாராதலின் எல்லாரும் எனக் கூறினார். ஆகுலமாய் மிக அழிந்து - மருள்வார் (1345) எனவும், அழுங்கி (1346) எனவும் கூறியபடி மனக்கவலை கொண்டார்களாதலின் அதனை அவர்களது முகக்குறிப்பாற் கண்ட வாயில்காவலர் இவ்வாறு கூறினார் என்க. அன்றியும் சமணர் தமது வஞ்சனைக்கேற்ப மிக்க ஆகுலக் குறிப்பினை மேற்கொண்டனர் என்பதுமாம்.

கொடி நுடங்கு திருவாயில் - நுடங்குதல் - அசைதல். அரன் கோயிலிலும், அரசனது அரண்மனையிலும் வாயிலில் கொடியசைதல் மரபாம். நுடங்குதல் ஒடுங்குதல் எனக் கொண்டு சமணரது வெற்றியின் ஒடுக்கத்தைக் குறிப்பாலுணர்த்தியவாறுமாம்.

மற்றவர் சார்பாதலினால் - கவன்று எனக்கூட்டுக. மற்ற அவர் - சாரத்தகாதபிறர் என்பது குறிப்பு.

கடிதணைவான் அவர்க்குற்ற தென்கொல் - நீவிர் சொல்கிறபடி அழுங்கி ஒருங்கு அவர் அணைவதற்குற்ற காரணமென்னையோ? என்றான். ஆகுலமாய் மிக