பக்கம் எண் :


நமிநந்தியடிகணாயனார் புராணம்1091

 

1896. (இ-ள்.) நீறுபுனைவார்.......மேவுதலால் - திருநீற்றினைப் புனைவாராகிய சிவபெருமானது அடியார்களுக்கு நெடுங்காலமாக நியதியாக வேறு வேறாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து பொருந்தியதனால்; ஏறு...பெருமையினார் - ஏறும்சிறப்பினுடன் மணிப்புற்றையிடங்கொண்டு வாழ்கின்ற பெருமானின் "தொண்டர்க்கு ஆணிப் பொன்னாவார் இவர்" என்று பாராட்டும் பேறு திருநாவுக்கரசர் பெருமானால் விளம்பப்பெற்ற பெருமையினை உடையராய்;

31

1897. (இ-ள்.) நன்மை பெருகு நமிநந்தி அடிகள் - நன்மைகளெல்லாம் பெருக வரும் நமிநந்தி யடிகளார்; இன்ன...செய்து - இவ்வாறு எல்லா வுலகும் தொழும்படியாகத் திருப்பணிகள் பலவற்றையுஞ் செய்து; நயமார்...வருவார் - நலம் பொருந்தும் திருவீதியில் சென்னியில் பிறையும் கங்கையும் பொருந்த வருவாராகிய; திருவாரூர் மன்னர் - திருவாரூர்த் தியாகராசருடைய; பாதநிழல்...மன்னினார் - திருவடி நீழலின் வளர்கின்ற அழகிய சோதியினுள் நிலைபெற்றுச் சார்ந்தனர்.

32

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

(பரிசு கண்டதுபோலப்) (1894) - பழம்படியே நிகழ்வுங்கண்டு, பணிந்து - புகுந்து - செய்து - நிலவுவாராய் (1895); மேவுதலால் - தொண்டர்க்கு ஆணி எனும்பேறு - பெற்ற பெருமையினாராகித் (1896); திருப்பணிகள் செய்து, நமிநந்தியடிகள் திருவாரூர் மன்னர் பாதநீழல் - சோதி மன்னினார் (1897) என்று இந்த மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து கூட்டி வினைமுடிவு கொள்க.

1895. (வி-ரை.) படிவம் - "தெய்வப் பெருமாள்......பரிசு கண்டு" (1894) என்று முன் பாட்டிற் கூறியபடி கண்ட வடிவம்; இஃது இறைவர் காட்டக்கண்ட காட்சி; பழம்படியே நிகழ்வும் கண்டு - அதற்கு முன் தாம் கண்ட பழையபடியே உள்ள கோலத்தையும் கண்டு; நிகழ்வும் - மேனியராம் பரிசு கண்டு அதுபோல நிகழ்வும் கண்டு என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.

பிழை - திருவாரூந்ப் பெருமான் எழுச்சியில் சேவிக்கப் புகுந்தார் பல குலத்தாரும் புடைபட்டுத் திரண்டு சேர்தலின் இழிவு தொடக்கிற்று என்றும், அதற்குக் குளித்துத் தூய்மை செய்தல் வேண்டும் என்றும் எண்ணிய பிழை.

திருவாரூ ரகத்துக் குடியும் புகுந்து வாழ்வார் - தம் ஊரை விட்டுத் திருவாரூரில் குடிபுகுந்து வாழ்வடைவாராகி தம் ஊரில் நின்ற வாழ்க்கையின் மேலாய்த் திருவாரூரிற் குடிபுகுந்து இருத்தலைப் பெருவாழ்வாகக் கொண்டனர்; தமக்கும் உலகர்க்கும் பயன் கருதி.

குவலயத்து நெடிது பெருகும் திருத்தொண்டு - இஃது இறைவர் பணி. நித்திய நைமித்திகங்கள் என்று முன் 1884 - 1885-ல் கூறியவையும், சரியையாதி பிறவுமாம். அடியார் பணியை மேல்வரும் பாட்டிற் கூறுவது காண்க.

30

1896. (வி-ரை.) வேறு வேறு வேண்டுவன எல்லாம் - வெவ்வேறு திறம்பட வரும் அடியார்களுக்கு வேண்டுவன வெவ்வேறாய் நிகழுமாதலின் வேறு வேறு என்றார். இப்புராணத்துள் வரும் அடியார்களின் வரலாறுகள் பலவும் கருதுக.

ஏறு சிறப்பு - உயர்வாகிய சிறப்பு - "ஏறுமயி லேறி விளையாடும்" (திருப்புகழ்)

மணிப்புற்றிருந்தார் - புற்றிடங் கொண்ட பெருமான். மணி - அழகு. மணியிருத்தற்கிடமாகிய என்றலுமாம்.

"தொண்டர்க்கு ஆணி" - "ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொன்" என்பது திருவிருத்தம். ஆணி - பொன்னுரையாணி, இயல்பிற் பெருமையுடைய பொன்னையும்