பக்கம் எண் :


சில குறிப்புக்களும் திருத்தங்களும்1101

 

நாட்டு மிழலை என்றும் அவர் கூறுகின்றார். ஆனால் பின் வந்த ஆராய்ச்சியாளர் இதனை ஒப்பவில்லை; காரணம் புறப்பாட்டிற் கண்டபடி மிழலைக் கூற்றம் கடற்கரையோரமாக இருக்க வேண்டுமென்பதே.

உட்பிரிவுகள் - மிழலைக் கூற்றம் கீழ்க் கூற்று - நடுவிற் கூற்று என்ற உட்பிரிவுகளைக் கொண்டதென்று திருப்பூவணக் கல்வெட்டினால் அறிகின்றோம்; கீழ்க்கூற்று என்றமையால் மேற்பகுதி ஒன்றிருத்தல் கூடும்; களக்கூற்று என்றதொரு பகுதியை சுத்த மல்லிக் கல்வெட்டுக் குறிக்கின்றது.

மிழலை நாட்டு ஊர்கள் - (1) - கொழுவனூர் - கீழ்க் கூற்று - மிழலைக் கூற்றம். (460/03 - T. N. ) (2); விளத்தூர் . ஜெயங் கொண்ட சோழ நல்லூர் - களக்கூற்று. மிழலைக் கூற்றம் (460/09 - 451 T. N. ); (3) கருவூர் - மிழலைக் கூற்றம் (246 - 1911 - 48 - T. ) (4) தஞ்சை திருந்தேவன் குடி மிழலை நாடு - விருதுராஜ பயங்கர வடநாடு - (47/10. 465 T. ) (5) புள்ளூர்க்குடி - நடுவிற்கூற்று - மிழலைக் கூற்றம். (130/08. 288 R. N. ராமநாதபுரம்); (6) பாரூர் - மிழலைக் கூற்றம் (67/1910 - 104 - மதுரை) பேச்சிப் பாளம் - வட்டெழுத்து); (7) நரிக்குடி - திருவிளையாடற் புராணம் - நரி குதிரையானது.

குறும்ப நாயனார் :- பெருமிழலையில் ஆண்ட ஒரு குறுநில மன்னர். குறும்பர் - பண்டைக் காலத்திலிருந்து ஒரு சிற்றரச வகுப்பினர். கி. பி. 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

திருவிளையாடல் - திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் மிழலை நாட்டு நரிகளைக் குதிரை யாக்கினதாகக் கூறியிருக்கிறது. நரிக்குடி என்ற ஊர்ப் பெயர் காண்க. ஆனால் டாக்டர் திரு. உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் மிழலைநாடு புதுக்கோட்டைச் சீமையில் இருப்பதாகவும் அந்நாட்டு வேளாளரை மிழலைச் சதகம் வருணிப்பதாகவும், மற்றொரு இடத்தில் மிழலை நாடு திருப்பெருந் துறைக்கருகில் இருப்பதாகவும் கூறுகிறார்.

-----------

பிற் சேர்க்கை - 2

இராவ்பகதூர் - திரு. V. S. செங்கல்வராய பிள்ளை M.A. அவர்கள்அன்புடன் எழுதிய

குறிப்புக்களும் திருத்தங்களும்

III-ஆம் பகுதி - 2 - ஆம் பாகம்

796. வரி 15. "வெறுத்தேன் மனை வாழ்க்கையை விடமொழிந்தேன்" என்றிருத்தல் வேண்டும்.

817. வரி 14. குலதனமே - என்பது அம்மையாரின் தன வைசிய குலத்தையும், அவர் தந்தை தனதத்தனார் என்பதையும் குறிக்கின்றது.

827. 1127 வரி 3. தாதுறுதார்க் காளை என்னாது தாதவிழ்தார் என்றதில் அவிழ்தார் என்பது தலைவனுக்கும் தலைவிக்கும் பிரிவு பின்னர் ஏற்படுவதைக் குறிப்பில் உணர்த்திற்று.

874. வரி 4. தொடை அவிழ் இதழி - "தார்கொன்றை" "தார்மலிகொன்றை" (தேவா - ஞானசம்).