பிணியற்றாராய் - பொய்ப்பிணி காட்டி யென்னாது பிணி உற்றாராகி என்ற இதுவும் அறியாமே வந்த உண்மைக்குறிப்பு. 1348-ல் தெளிந்த ஏனையவற்றையும் சொன்னார் என உடன்கூட்டிக் கொள்க. கூறியது கூறலாகாமைப் பொருட்டு ஆசிரியர் அவற்றை மீண்டும் ஈண்டுக் கூறிற்றிலர். சடையான் - சிவபெருமானுக்குச் சிறப்பாயுரிய சடையானுக்கரளாய் - என்பது சைவ சமயத்தைத் சார்ந்து என்ற பொருள் தந்தது. "வல்லமணார் தமை நீத்து மழவிடையோன் றாளடைநதான்" (1410) என அரசன் சைவம் புக்க போது உரைப்பதும் காண்க. நின் சமயம் ஒழிதார் - நின் சமயம் என்றது சமண சமய அடிகளாகிய தம்மினும் அரசனுக்கு உரிமைப்படுத்தி உளப்படுத்தியவாறு. அரசனது துணை கொண்டே பின்னர்த் தமது சூழ்ச்சி முடிக்க எண்ணினார்களாதலின் இவ்வாறு தொடங்கிக் கொண்டனர். "எம்முயிரு நின்முறையும், துஞ்சுவது திடமென்றார் சூழ்வினையின் றுறைநின்றார்" (1372), "பரிபவந் தீருமுனக்கு" (1386) எனப் பின்னரும் அவர்கள் கூறுவது காண்க. "நின்னற நெறியை நீயே காத்தருள் செய்தி யாகில்" (திருஞான - புரா - 748) என்று மதுரைச் சமணரும் இவ்வாறே அரசனிடம் கூறுதல் காண்க. ஒழிந்தார் - நீத்தார் என்ற பொருளில் வந்தது. முன்னர், "வீழ்ந்தது" (1345), "இனி, அழிந்தது" (1346) என்றவைபோல இதுவும் சமயத்தை ஒழியச் செய்தார் என்ற பின்னிகழ்ச்சி காட்டும் உண்மைக் குறிப்புப்பட நிற்பது காண்க. 1353. | விரையலங்கற் பல்லவனு மதுகேட்டு வெகுண்டெழுந்து "புரையுடைய மனத்தினராய்ப் போவதற்குப் பொய்ப்பிணிகொண் டுரைசிறந்த சமயத்தை யழிததொழியப் பெறுவதே? கரையிறவத் தீ!ரிதனுக் கென்செய்வ? " தெனக்கனன்றான். |
88 (இ-ள்.) வெளிப்படை. மணமுடை மலர்மாலையையுடைய பல்லவ அரசனும் அதனைக் கேட்டுச் சினங்கொண்டெழுந்து. "குற்றமுடைய மனத்தையுடையவராகிப், போகும்பொருட்டுப் பொய்யாகப் பிணிவந்ததென்று மேற்கொண்டு, புகழாற் சிறந்த நமது சமண சமயத்தை அழித்து நீங்கப்பெறுவதுமாமோ? அளவற்ற தவமுடையவர்களே! இதற்கு என்ன செய்தல் வேண்டும்?" என்று கொதித்துக் கூறினான். (வி-ரை.) வெகுண்டெழுந்து - கனன்றான் எனக்கூட்டுக. மிக்க கோபம் குறித்தது. கனன்றான் - கோபமொழி கூறினான் என்ற பொருளில் வந்தது. விரை அலங்கல் - சோழனுக்குரியது. ஆத்திமாலை. புரை - வஞ்சனை, பிணி வந்ததென்று பொய்யாகக் கற்பித்தார் என்று கொண்டமையால் புரையுடைய மனத்தினராகி என்றார். உரை சிறந்த சமயம் - சமணம். அரசன்தான் கொண்ட சமயத்தை உயர்வாகக் கூறியபடி. உரைமாத்திரையானன்றி உண்மைச் சிறப்பில்லாத என்பதும் குறித்தது. பெறுவதே - பெறுவது தகுமோ? ஏகாரம் வினா. கரை இல் கவத்தீர் - அரசன் சமண அடிகள்மாரிடம் கொண்ட நன்மதிப்பும், அவர்கள் அதுகொண்டு அவனை ஏமாற்றும் வழியும் காண்க. கரையில் - உண்மை வரம்பில்லாத என்ற குறிப்புக் காண்க. 88 1354. | "தலைநெறியா கியசமயந் தன்னையழித் துன்னுடைய நிலைநின்ற தொல்வரம்பி னெறியழித்த பொறியிலியை |
|