குத் தப்ப முயலுதலும், தமது குற்றத்தைப் பொய்செய்து பிறர்பாற் சுமத்தித்தப்ப முயலுதலும் இறைவனது நீதிக்குத் தவறான செய்திகள். இவையே இந்நாளில் வளர்ச்சிபெற்று வருதல் வருந்தத் தக்கது. மந்திரிகள் தமை நோக்கி - பெரியோர்களைச் சிறை செய்யப் பொறுப்பு வாய்ந்த பெரும் செயலாளரை ஏவுதல் இற்றைநாளிலும் வழங்கக் காண்கிறோம். இந்த மந்திகளும் "முரச்திருந் தானையொடு முன்சென்று" காரியஞ் செய்தலும் மேல்வரும் பாட்டிற் கூறப்படுதல் காண்க. 90 1356. | அரசனது பணிதலைநின் றமைச்சர்களு மந்நிலையே முரசதிருந் தானையொடு முன்சென்று முகில்சூழ்ந்து விரைசெறியுஞ் சோலைசூழ் திருவதிகை தனைமேவிப் பரசமயப் பற்றறுத்த பான்மையினர் பாற்சென்றார். |
91 (இ-ள்.) வெளிப்படை. அரசனுடைய ஏவலை மேற்கொண்டவர்களாய் மந்திரிகளும் அவ்வாறே முழவுகள் ஒலிக்கும் சேனைகளோடும் முற்பட்டுச் சென்று மேகங்களாற் சூழப்பட்டு மணங்கமழும் சோலைகள் சூழ்ந்த திருவதிகையினை யடைந்து புறச்சமயப் பற்றுக்களை அறுத்த பான்மை யுடையவராகிய திருநாவுக்கரசரிடம் சென்றார்கள். (வி-ரை.) தலை நிற்றல் - சிறக்க மேற்கொள்ளுதல். சிரமேற்றாங்குதல் என்பாரு முண்டு. அந்நிலையே - அவ்வாறே - அப்பொழுதே எனவும், அவ்விடத்திலிருந்தபடியே எனவும் காலமும் இடமும் குறித்தது. முரசதிரும் தானையொடு - முரசதிர்த்தல் தானைக்கு இயற்கை யடைமொழி. பெரியோரைச் சிறை செய்யுங்கால் தானையொடு செல்லுதல் இயல்பும் அவசியமுமாம். "உம்மோடு மற்று மளராய் நின்ற படையுடையான்" என்ற மறு மாற்றத் திருத்தாண்டகம் (9) காண்க. பரசமாய்ப் பற்று அறுத்த பான்மையினர் - பரசமயம் - இங்குச் சமணம் குறித்தது. அறுத்த - என்றதனால் நாயனார் தாம் அறுத்ததேயன்றி ஏனைய மக்கள்பாலும் அந்தத் தொடக்கு அணுகாமல் அறுவித்த என்ற பொருளும் பெறப்பட்டது. பான்மை - இங்கு ஊழ் - தெய்வம் - என்ற பொருளில் வந்தது. "முன்னமே முனியாகி" (1313), "இறைவழுவும் தொண்டரையா ளத்தொடங்கும் சூலை வேதனை" (1314) என்றமையால் பற்றறுத்த செயல் ஊழின் துணையாலாகியது என்பதாம். பான்மை - தன்மை - தவம் - என்பாருமுண்டு. இப்பாட்டின் ஈற்றடி முற்றுமோனை. பரசமயப் பற்றறுத்தார் - என்றமையால் சென்ற அவர்களாற் பற்றப்படாதவர் என்பதும், பான்மையினார் என்றமையானும் முற்று மோனையால் முடிந்தமையானும், பற்றப்படாராயினும் அவர்தம் பான்மையினால், சென்ற மந்திரிகளின் செயல் முற்றுவதா மென்பதும் உணர்த்தப்பட்ட குறிப்பும் காண்க. 91 1357. | சென்றணைந்த வமைச்சருடன் சேனைவீ ரருஞ்சூழ்ந்து மின்றயங்கு புரிவேணி வேதியனா ரடியவரை "யின்றுநுமை யரசனழைத் தெமைவிடுத்தான்; போது"மென நின்றவரை நேர்நோக்கி நிறைதவத்தோ ருரைசெய்வார், |
92 1358. | ‘நாமார்க்குங் குடியல்லோ' மென்றெடுத்து நான்மறையின் கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத் |
|