அருள் செய்தார் - முனிவில்லாது அளியோடும் கூறினார் என்பது, வரும் பாட்டிலும் "அருள் செய்ய", என்றது காண்க. 93 மறுமாற்றத் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம் | நாமாக்குங் குடியல்லோம்; நமனை யஞ்சோம்; நரகத்தி லிடர்ப்படோம்; நடலை யில்லோம்; ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோ மல்லோம்; இன்பமே; யெந்நாளுந் துன்ப மில்லை; தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்று மீளா வாளாய்க், கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே. |
1 | நாவார நம்பனையே பாடப் பெற்றோம்; நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்; ஆவாவென் றெமையாள் வா னமரர் நாத னய்னொடுமாற் கறிவரிய வனலாய் நீண்ட தேவாதி தேவன் சிவனென் சிந்தை சேர்ந்திருந்தான் றென்றிசைக்கோன் றானே வந்து கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலுங் குணமாகக் கொள்ளோமெண் குணத்த ளோமே. |
10 பதிகக் குறிப்பு :- சிவபெருமானுக்கே ஆட்பட்டோம்; வேறு யாவர்க்கும் குடியல்லோம்; ஆமாறுநீர் அழைக்கும் அடைவு இல்லோம் என்பது ஆசிரியரால் 1358-ல் காட்டப்பட்டது. பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) நமனை அஞ்சோம். அரசனாணையை மறுத்தமைக்குக் காரணங் கூறியபடி. நமனை உதைத்த இறைவனை அடைந்தமையால் அஞ்சோம என்றார். நரகத்தில் இடர்ப்படுதல் அரசாணைக்குத் தப்பினோர்க்கு உண்டென்பர்; அது நமக்கில்லை. நடலையில்லாமை அதற்குக் காரணங் கூறியபடி. ஏமாப்போம் - சிவனது பெருங்காவல் பெற்றோம். பிணி - பிணிப்பு; கட்டு, எந்நாளும் - முற்றும்மை நிகழ்கால எதிர்காலங்கள்குறித்தது. "இனியேதுங் குறைவிலோம்" என்றது காண்க. தாமார்க்கும்....சங்கரன் - தம்பிரான் - இன்பஞ் செய்பவன். இன்பமே - துன்பமில்லை என்றதற்குக் காரணங் கூறியபடி. கோமான் - அவனே அரசர்க்கெல்லாமரசன். நீவிர் கொண்டவர் யாவரும் அரசரல்லர். ஏகாரம் பிரிநிலை. தேற்றமுமாம். குறுகினோம் - வந்தடைந்தோம். சரிதக் குறிப்பு. -(2) அகலிடமே...புரட்டாள். - பரப்புடைய நிலம் முழுதும் எமது இடம், ஊர்கள் தோறும் சமைத்துண்பவர்கள் கூவிப் பிறருக்கும் உணவு இட்டு உண்பர். பிச்சை யேற்பவர்கு இல்லை யென்னாது இடுவர். பொது மன்றங்கள் யாவும் எமக்குத் தங்குமிடம். நிலத்திற் படுத்துறங்குவோம்; பூமிதேவி எம்மை மறுக்கமாட்டாள். "ஊரெலா மட்டசோறு நம்மதே யுவரிசூழ்ந்த பாரெலாம் பாயல்" என்ற திருவிளையாடற் புராணம் (வாத - உப - பட) இக்கருத்தைப் பற்றி எழுந்தது. இப்பாட்டு நாயனாரது முழுத்துறவாகிய மனநிலையை விளக்குவதாம். அம்பலம் - பொதியில் - ஊர்மன்றங்கள். இகலுடைய விடை - அடையலரைச் செறும் இடபம், "அரண்முரண் ஏறு," ஏன்று கொண்டான் - எம்மை ஏற்று ஆட்கொண்டான், |