உண்மை கண்டுகொள்க. "பாலைநெய்தல் பாடியதும் பாம்பழியப் பாடியதுங், காலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன், மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங், கரணம்போ லல்லாமை காண்" (திருக்களிறு - 7) என்று ஞானசாத்திரம் இவற்றின் நுட்பத்தை விளக்கிற்று. அடிநீழலே, வீணையும் - மதியமும் - தென்றலும் - இளவேனிலும் - பொய்கையும் போன்றது என்ற தேவாரத்துக்கு, நீற்றறையே திருவடி நீழலருளாகி, இளவேனிற் பருவத்துத் தென்றலணைந்து, நில வலர்ந்து, யாழ் ஒலியினதாய், உள்ள தடம்போன்று குளிர்ந்தது என்று தொடர்பாக்கி உரை செய்தனர் ஆசிரியர். அத்தேவாரத்தினுள் வரும் உம்மைகள் எண்ணும்மைகள்போலக் காணப்படினும், அவ்வாறன்றி, ஒரு பொருண்மேற் றொடர்புகொண்ட அடைகளாய் நிற்குமியல்பினைக் காட்டிய நயங் கண்டுகொள்க. தென்றலை - மொய்யளி - என்பனவும் பாடங்கள். 98 திருச்சிற்றம்பலம் | தனித்திருக்குறுந்தொகை |
| மாசில் வீணையு மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே, ஈச னெந்தை யிணையடி நீழலே |
1 | விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போன், மறைய நின்றுளன்மாமணிச் சோதியான்; உறவு கோனட் டுணர்வு கயிற்றினான், முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- இத்திருப்பதிகம் நாயனார் பாடலிபுத்திரநகரில் நீற்றறையினுள்ளிருந்து அருளிச் செய்தது. நீற்றறை குளிர்ந்த திருப்பதிகம். ஒரு தலத்தின் பேரால் அருளப்படாதது பொதுப்பதிகம் எனப்படும். இதுபோலவே, பின்னர், அமணர்களால் தூண்டப்பட்டுப் பல்லவ அரசன் யானையை ஏவியபோது அச்சபை முன்னர்ப் பாடிய "சுண்ணவெண் சந்தனச் சாந்து" என்ற திருப்பதிகமும், அவ்வாறே கல்லினோடு பூட்டிக் கடலினுள் புகலிடப்பட்டபோது நடுக்கடலினுள் பாடிய "சொற்றுணை வேதியன்" என்ற திருப்பதிகமும் ஒரு தலத்தினைப் பற்றாது பொதுப்பதிகங்களாய் எங்குஞ் செறிந்து நிறைந்த இறைவனை நேர்நோக்கி அந்நிறைவினுள் நிறைந்த சிவஞான நிறைவினால் உணர்ந்து பாடியருளப்பட்டன. ஆயினும் அவை. திருவதிகைப் பதிகங்களுள் தொகுக்கப்படத் தக்கவை. இவ்வாறே ஆளுடைய பிள்ளையார் பாண்டிய அரசனுடைய சபை முன்னர் சுரவாதத்தில் அருளிய "மந்திர மாவது நீறு" என்ற திருப்பதிகமும், புனல் வாதத்தில் வையையாற்றின் கரையினில் அருளிய" வாழ்க வந்தணர்" என்ற திருப்பாசுரத் திருப்பதிகமும் பொதுப் பதிகங்களாய்ச் சரித நிகழ்ச்சிகளை வலியுறுத்துமாறும் கண்டுகொள்க. இப்பதிக முழுதினும் சைவ சித்தாந்தத்தின் பல உண்மைகளும் பொதிந்து விளங்குகின்றன. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இத்திருப்பாட்டினை 1363ல் விரிவுரை செய்தனர் ஆசிரியர். நீற்றறை அடிநீழலாகிக் குளிர்ந்ததே எனச் சரிதங் குறித்தது காண்க. மாசில் - சுர இலக்கணங்களிற் சிறிதும் வழுவாது முழுதும் நிரம்பிச் சொல்லை மிழற்றும் இயல்புடைய. இதனை "முரன்றயாழ் ஒலி" என்றனர். ஆசிரியர். மாலை மதி - முழுமதி. "மொய்யொளிவெண் ணிலவலர்ந்து", மாலை வருதற்கு முன்னும் பின்னுமாகத் தோற்றப்படாமல் மாலைவரு நேரமே முழுதும் தோற்றப்படும் மதி - முழுமதி. வீசு - மணங்கொண்டு வீசும். மூசுவண்டறை பொய்கை - வண்டுகள் நீர்ப்பூக்களிற்றேன் உண்டு பண் பாடுதலின் இதனை |