பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்129

 

உடலினார் - ஆர்விகுதி இகழ்ச்சிக் குறிப்பு. முன்னப் பலவாறும் அபிமானஞ் செய்து ஓம்புதற்கிடமாய் நின்ற உடல். ஊர் முனி பண்டம் - ஊரால் முனியப்படும் அசுத்தப்பொருள். மூன்றனுருபு தொக்கது. முனி - செயப்பாட்டுவினை.- (5) பூக்கைக்கொண்டு - பூக்களைக் கையில்கொண்டு. கைக்கொண்டு - உரிய பூக்களைத் தெரிதல் - தேர்தல் - தேடுதல் - அமைத்தல் - சாத்துதல் முதலிய எல்லாம் கொள்க. அலமந்து - வருந்தியுழன்று. காக்கைக்கே யிரையாகி - இறந்து சுடலை சேர்க்கப்பட்ட பிணங்களைக் காக்கைகள் பிடுங்கித் தின்னும். "முதுகாட்டிற் காக்கை யுகக்கும் பிணம்", "சுடலை சேர்வது" என்ற கருத்தைத் தொடர்ந்து கூறியவாறு. - (6) குறிகள் - சிவன் வெளிப்பட்டருளும் குறியிடங்கள். இவை குருவின் திருவுருவமும், அடியார் வேடமும், சிவலிங்கமும் என்பன. அடையாளம் - சிவனாந்தன்மை காண உள்ள சுவடுகள். ‘சடாமகுடத் திருத்துமே ...... அரையார்க் கும்மே - அவனாகி லதிகைவீரட்ட னாமே' என்பனவாதியாக அடையாளத் திருத்தாண்டகத்திற் பேசப்படுவன. "தோண்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன்" முதலியவனவாகக் கூறிச், "சேர்வானைக் கண்டாள் கொல்லோ" என்ற கழிப்பாலை (காந்தாரம்)த் திருப்பதிகக் கருத்தும் காண்க. "அடையாளம் படவொருவ னடித்த" என்ற திருவிளையாடல் (மண்சு - பட - 79) காண்க. கோயில் - சிவன் விளங்க வீற்றிருக்குமிடம். இவை சிவாலயங்களும் அடியார் அகங்களுமாம். "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்" திருமந்திரம்; "காலையு மாலையுங் கைதொழு வார்மன, மாலய மாரூ ரரனெறி யார்க்கே", "என்னுள்ளங் கோயி லாக்கி" (ஆரூர் - காந்தாரம் - 2) அரசுகள்; "நேய மலிந்தவர் வேடமு, மாலயந் தானு மரனெனத் தொழுமே" (சிவஞானபோதம்). நெறிகள் - சரியையாதி சிவநெறிகள் நான்கு. நின்றதொர் நேர்மை - இவற்றுள் அன்புடையார்க்கு விளங்கியும் ஏனையோர்க்கு விளங்காமலும் நிறைந்துள்ள தன்மை. நின்ற - நின்ற திருத்தாண்டகம், திருவுருத்திர முதலியவற்றுட் கூறுமாறு எங்கும் எவற்றினும் நிறைந்து நின்றும், இவ்விடங்களில் விளங்க நின்றும் உள்ள தனிப்பண்பு. ஓர் - நினைந்து காணத்தக்க என்ற குறிப்பும் காண்க. ஆரணம் - சிவன் மொழி; வேதசிவாகமங்கள். பொறி - அறிவை உட்புகக்கொள்ளும் வாயில். ஓதினும் உட்புகவிடாமையின் என்கொல் என்றார். - (7) வாழ்த்த...தலைவன் - தலை - வாய் - நெஞ்சு என்றவற்றைத் தலைவன் மக்களுக்குக் கொடுத்த கருத்துக் கூறப்பட்டது. வாழ்த்த - வாழ்த்தலேயன்றி வேறொன்றற்குமன்று. பிரிநிலை ஏகாரம் தொக்கது. இவ்வாறே ஏனைய இரண்டுங் கொள்க. சூழ்த்த - சூழ எங்கும் உள்ள - இறைவனால் சூழ வைக்கப்பட்ட. சூழ்ந்த என்பது சூழ்த்த என்றாயிற்று எனக் கொண்டு, நிறைந்த என்றலுமாம். "பூவுண்டுநீருண்டு" (திருமந்திரம்). நெடுங்காலம் - வீழ்த்தவர் - பலகாலம் வீண்போக்கிய மதிதான் என்னே! ஆ - ஆறு. ஏ - ஏகாரம் இரக்கங் குறித்தது - (8) எழுதுபாவை நல்லார் - சித்திரத்தெழுதியது போன்ற பண்புகள் அமைந்த பெண்கள். உழுதசால் வழியே உழுவான் பொருட்டு - அனுபவித்த பொருள்களையே வெறுப்பின்றி மீள அனுபவித்தற் பொருட்டு. இழுதை - அறிவின்மையுடைய. இழுது - நெய்போன்று உலகபோங்களில் உருகி என்றலுமாம். - (9) நெக்கு நெக்கு - அடுக்கு உள்ளுடைந் துருகுதலின் மிகுதி குறித்தது. நினைக்குந்தொறும் மனம் நெகிழ்ந்து. நெக்கு - நெகு என்ற பகுதி ஒற்றிரட்டித்து இறந்தகாலங்குறித்தது; புகு - புக்கு என்பதுபோல. புக்கு நிற்கும் - வெளிப்பட விரும்பி வீற்றிருத்தலையும், நக்கு நிற்பர் - மறைந்து நிற்றலையும் குறிக்கும். நாணி என்பது விளக்கமின்றி என்ற பொருளில் வந்தது. - (10) முன்பாட்டிற் சொன்னபடி இறைவன் நிற்கு நிலையுணர்த்திற்று இத்திருப்பாட்டு. விறகில் தீயும், பாலில் செய்யும், மணியில் ஒளியும் மறைந்து நிற்பன; கோலும் கயிறும் கொண்டு